திருக்குறள்

தேடல்

அன்பு மகனுக்கு அப்பா எழுதுவது...

|

எழுதியவர் யார் என தெரியாது. படித்ததில் கலங்கியது,

*அன்பு மகனுக்கு அப்பா எழுதுவது*

வசதியாகத்தான்
இருக்கிறது மகனே…
நீ...
கொண்டு வந்து சேர்த்த முதியோர் இல்லம்
பொறுப்பாய் என்னை ஒப்படைத்து விட்டு
வெளியேறிய போது,
முன்பு நானும்
இது போல் உன்னை வகுப்பறையில்
விட்டு விட்டு என் முதுகுக்குப்
பின்னால்
நீ கதறக் கதறக்

கண்ணீரை மறைத்தபடி
புறப்பட்ட காட்சி
ஞாபகத்தில்
எழுகிறது!


முதல் தரமிக்க
இந்த இல்லத்தை
தேடித் திரிந்து
நீ தேர்ந்தெடுத்ததை
அறிகையில்கூட
அன்று உனக்காக
நானும்
பொருத்தமான பள்ளி
எதுவென்றே
ஓடி அலைந்ததை
ஒப்பீடு செய்கிறேன்!

இதுவரையில்
ஒருமுறையேனும்
என் முகம் பார்க்க
நீ வராமல் போனாலும்
என் பராமரிப்பிற்கான
மாதத் தொகையை மறக்காமல்
அனுப்பி வைப்பதற்க
மனம்
மகிழ்ச்சியடைகிறது
நீ விடுதியில்
தங்கிப் படித்த காலத்தில்
உன்னைப் பார்க்க
வேண்டும் என்ற
ஆவல் இருந்தாலும்
படிப்பை நினைத்து
உன்னை சந்திக்க
மறுத்ததன்
எதிர்வினையே இது
இப்போது அறிகிறேன்

இளம் வயதினில்
நீ சிறுகச் சிறுக
சேமித்த
அனுபவத்தை
என் முதுமைப் பருவத்தில்
மொத்தமாக எனக்கே
செலவு செய்கிறாய்
ஆயினும்…
உனக்கும் எனக்கும்
ஒரு சிறு வேறுபாடு
நான்
கற்றுக்கொடுத்தேன்
உனக்கு…
வாழ்க்கை இதுதான் என
நீ கற்றுக் கொடுக்கிறாய்
எனக்கு…
உறவுகள் இதுதானென்று!

இந்தக் கவிதையைப்
படித்ததும் கண்கள்
குளமாகின்றது.
தாய் தந்தை மீது பாசம்
உள்ள
ஒவ்வொருவரும்
பகிர வேண்டிய
பதிவு இது...

எழுதியவர் யார் என தெரியாது.
படித்ததில் கலங்கியது, வாசித்தவுடன் பதிவிடுகிறேன்.

0 comments:

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...

தலைப்புகள்

anicent tamil (4) Blog Tips (2) Computer (4) ILUSION (1) information (1) LPG சிலிண்டர் (1) safety (1) Short Cut Key (2) SMS (1) tamil (14) tamil friendship poem (2) tamil joke (7) tamil kathai (5) tamil story (6) tamil year (1) Welding Symbol (1) ஆரோக்கியம் (8) ஆவணங்கள் (6) எச்சரிக்கை (2) கணணி பராமரிப்பு (1) கதை (17) கம்ப்யூட்டர்வேலை (1) கலைஞர் (1) கவிதை (8) சாப்ட்வேர் மாப்பிள்ளை (1) செய்தி (9) தமிழர் பண்பாடு (2) தமிழ் (14) தமிழ் அளவை (2) தமிழ் அளவைகள் (1) தமிழ் ஆண்டுகள் (2) தமிழ் எண்கள் (1) தமிழ் எழுத்து (2) தமிழ் காலம் (2) தமிழ் பாட்டு (2) தமிழ் மருத்துவம் (4) தமிழ்நாடு அரசு பாடப் புத்தகங்கள் (1) தீபம் (1) துணுக்கு (11) நகைச்சுவை (27) நகைச்ச்சுவை (2) நகைச்ச்சுவைகடிதம் (1) நட்பு (3) நட்பு கவிதை (2) படம் (1) படித்ததில் பிடித்தது (36) பரோட்டா (1) பழம்தமிழர் (1) பாதுகாப்பு (1) பெண்பார்க்கும் படலம் (1) பொங்கல் (1) பொழுதுபோக்கு (19) மகிழ்ச்சி (3) மாங்கல்யம் (1) மாய தோற்றம் (1) வலைப்பூ (1) வழி காட்டி (9) வழிகாட்டி (21) வாழ்கை (13) வாழ்க்கை (3) வாழ்த்துகள் (9) வேலை (3)
 

©2009 அறிவு களஞ்சியம் | Template Blue by TNB