திருக்குறள்

தேடல்

சிட்டுக்குருவிகள் தினம்

|

உலகம் மனிதனுக்கு மட்டுமானது அல்ல ; அனைத்து உயிரினங்களுக்கும் பொதுவானது ; உரிமையானது. அதனால்தான், "எல்லா உயிர்களும் இன்புற்று வாழ வழிவகை செய்திடல் வேண்டும்" என்றார் இராமலிங்க அடிகளார்.

சேதி சொல்லும் சிட்டுக்குருவியை கொண்டாடும் தேதி இன்று! உலக சிட்டுக்குருவிகள் நாள் (World House Sparrow Day - WHSD), ஆண்டுதோறும் மார்ச் 20ஆம் நாள் அன்று உலகெங்கும் கொண்டாடப்படுகிறது. கடந்த 2010ஆம் ஆண்டில் இருந்து உலக சிட்டுக் குருவிகள் தினம் அனுஷ்டிக்கப்பட்டு வருகிறது.

கிராமங்களில் வாழ்பவருக்கும் இன்னும் அலாரமாக இருப்பது இதன் ஒளிதான். கீச் கீச் என்ற அந்த இசையை கேட்டு விழிக்கையில் இதமாகவும், புத்துணர்வுடனும் அந்த நாள் தொடங்கும். ஆனால் தற்போதைய சூழலில் சிட்டுக்குருவிகளின் எண்ணிக்கை நாளுக்கு நாள் குறைந்து கொண்டே செல்கிறது. மேலும் இவை மனிதனுடன் ஒத்து வாழும் உயிரினமாகவே இருக்கிறது. இது மாடம்,பரண் மற்றும் ஓடுகளின் இடையில் கூடு கட்டி வாழும். இப்போது  அடிக்கடி கட்டடங்களின் உட்பகுதியிலும் வாழ்கிறது. குறிப்பாக தொழிற்சாலைகள், கிடங்குகள் மற்றும் மிருகக்காட்சி சாலைகள் ஆகிய இடங்களிலும் வாழ்கிறது.

காகத்திற்கு அடுத்து மனிதனுக்கு நன்கு அறிமுகமான பறவை சிட்டுக்குருவி. பார்ப்பதற்கு அழகாக தென்படும் இந்த சிட்டுக்குருவியை காண்பித்து தாய் தன் பிள்ளைக்கு ஒரு காலத்தில் சோறு ஊட்டி வந்தாள். ஆனால், இந்தப் பறவையை இன்றைய குழந்தைகளுக்கு நாம் அறிமுகப்படுத்த வேண்டிய கட்டாயத்தில் உள்ளோம்.

சிட்டுக்குருவிகளின் வாழ்நாள் சுமார் 31 ஆண்டுகளாகும். இவை மனிதர்கள் இருக்கும் பகுதிகளிலேயே வசித்தாலும் மனிதர்களோடு பழகுவதில்லை. இவற்றை செல்ல பறவைகளாக கிளி, மைனா போல வளர்க்கவும் முடியாது. மரத்திலும், வீடுகளின் மறைவான இடங்களிலும் வைக்கோல் போன்ற மெல்லிய பொருட்களை கொண்டு கூடு கட்டி வசிக்கின்றன.

ஊர்க்குருவி,  சிட்டுக்குருவி, அடைக்கலாங்குருவி , தூக்கணங்குருவி , இராப்பாடிக்குருவி, வாற்கொண்டலாத்தி,கட்டுக்காடை ,பாற்குருவி, காட்டுள்ளான் , அக்காக்குருவி ,குயில் , கோகிலம் ,பஞ்சது ,பிகம் , வலாசகம் ,இசைக்குரற்கருவி  ,களகண்டம், கொண்டலாத்தி , பாட்டாணி ,புழுக்கொத்தி ,பெருங்கொடை ,சூறைக்குருவி இன்னும் பல வகைகள் உள்ளன.

நாம் பார்த்தும், ரசித்தும் மகிழ்ந்த ஒரு சிறு பறவையினம் நம்மிடம் இருந்து விடைபெற்று விடக்கூடாது. முட்டையிட்டு அடைகாத்து தன் இனத்தை பெருக்கி மனித இனத்தை மகிழ்ச்சி படுத்த வேண்டும். அதற்கு ஏற்ற சூழ்நிலைகளை உருவாக்குவதும், பாதுகாப்பதும் நமது பொறுப்பு. வீடுகளின் பால்கனியிலும் வீட்டின் சுற்றத்திலும் மரக்கன்றுகள் பூச்செடிகளும் வளர்த்து வந்தால் சிட்டுக்குருவி போன்ற பறவைகள் வந்து வசிக்கும் இருப்பிடமாக மாறும். இயன்ற அளவு நெல், திணை, ராகி போன்ற சிறு தானியங்களும், குடிக்க நீரும் சிட்டுக்குருவிகளுக்கும் பறவைகளுக்கும் வைத்து வரலாம்.

“உணவு பழக்கம்" பழமொழி வடிவில்…

|

“உணவு பழக்கம்" பழமொழி வடிவில்…


* காட்டுலே புலியும் , வீட்டுலே புளியும் ஆளைக் கொல்லும்.
* போன ஜுரத்தை புளி இட்டு அழைக்காதே
* பொங்குற காலத்தில் புளி.. மங்குற காலம் மாங்கா
* சீரகம் இல்லா உணவும் , சிறு குழந்தைகள் இல்லா வீடும் சிறக்காது.
* எண்னை குடத்தை சுற்றிய எறும்பு போல
* தன் காயம் காக்க வெங்காயம் போதும்
* வாழை வாழ வைக்கும்
* அவசர சோறு ஆபத்து
* ஆறிய உணவு மூட்டு வலி உண்டாக்கும்
* இரைப்பை புண்ணுக்கு எலுமிச்சை சாறு
* ரத்த கொதிப்புக்கு அகத்திக் கீரை
*இருமலை போக்கும் வெந்தயக் கீரை
* உண்ணா நோன்பு ஆயுளைக் கூட்டும்.
* உஷ்ணம் தவிர்க்க கம்பங் களி
* கல்லீரல் பலம் பெற கொய்யாப் பழம்
* குடல் புண் நலம் பெற அகத்திக்கீரை
* கொலஸ்ட்ரால் குறைக்க பன்னீர் திராச்சை
* சித்தம் தெளிய வில்வம்
* சிறுநீர் கடுப்புக்கு அன்னாசி
* சூட்டை தணிக்க கருணை கிழங்கு
* ஜீரண சக்திக்கு சுண்டக்காய்
* தலை வலி நீங்க முள்ளங்கி சாறு
* தேனுடன் இஞ்சி ரத்தத் தூய்மை
* பூண்டில் இருக்கு பென்சிலின் சக்தி
* மூல நோய் தீர வாழைப்பூ கூட்டு
* வாந்திக்கு மருந்து மணத்தக்காளி
* வாத நோய் தடுக்க அரைக் கீரை
* வாய் துர்நாற்றம் தீர்க்க ஏலக்காய்
* பருமன் குறைய முட்டைக்கோஸ்
* பித்தம் தணிக்க நெல்லிக்காய்
” உணவு மருந்தாக இருக்க வேண்டும்…. இல்லாவிட்டால் மருந்தே நமக்கு உணவாகும் நிலைமை உருவாகும் ”

புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்-2024

|

 இனிய வாசகர்களுக்கு,

இந்த புத்தாண்டிலே!

தோல்விகள் நீங்கட்டும்

வெற்றிகள் குவியட்டும்

மகிழ்ச்சி பொங்கட்டும்

இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்!

வாழ்க வளமுடன்
 
இப்படிக்கு ஆசிரியர்கள்,

அறிவுமதி மற்றும் நிலாமகள்

Related Posts Plugin for WordPress, Blogger...

தலைப்புகள்

anicent tamil (4) Blog Tips (2) Computer (4) ILUSION (1) information (1) LPG சிலிண்டர் (1) safety (1) Short Cut Key (2) SMS (1) tamil (14) tamil friendship poem (2) tamil joke (7) tamil kathai (5) tamil story (6) tamil year (1) Welding Symbol (1) அபூர்வ தகவல் (1) ஆரோக்கியம் (15) ஆவணங்கள் (7) இயற்கை (4) எச்சரிக்கை (3) கணணி பராமரிப்பு (1) கதை (21) கம்ப்யூட்டர்வேலை (1) கலைஞர் (1) கவிதை (11) சாப்ட்வேர் மாப்பிள்ளை (1) சிந்தனை (2) செய்தி (11) தமிழர் பண்பாடு (5) தமிழ் (14) தமிழ் அளவை (2) தமிழ் அளவைகள் (1) தமிழ் ஆண்டுகள் (2) தமிழ் எண்கள் (1) தமிழ் எழுத்து (2) தமிழ் காலம் (2) தமிழ் பாட்டு (2) தமிழ் மருத்துவம் (6) தமிழ்நாடு அரசு பாடப் புத்தகங்கள் (1) தன்னம்பிக்கை (1) தீபம் (1) துணுக்கு (16) தெரிந்துகொள்வோம் (8) நகைச்சுவை (31) நகைச்ச்சுவை (4) நகைச்ச்சுவைகடிதம் (1) நட்பு (3) நட்பு கவிதை (2) படம் (1) படித்ததில் பிடித்தது (54) பணம் (1) பரோட்டா (1) பழம்தமிழர் (1) பறவை (1) பாதுகாப்பு (2) பிரபலமானவர்களின் (3) பெண்பார்க்கும் படலம் (1) பெற்றோர் (1) பொங்கல் (1) பொழுதுபோக்கு (27) மகிழ்ச்சி (3) மாங்கல்யம் (1) மாய தோற்றம் (1) வரலாற்று நிகழ்வு (1) வலைப்பூ (1) வழி காட்டி (9) வழிகாட்டி (30) வாழ்கை (13) வாழ்க்கை (9) வாழ்த்துகள் (14) விவசாயம் (2) விவசாயி (1) வேலை (3)
 

©2009 அறிவு களஞ்சியம் | Template Blue by TNB