திருக்குறள்

தேடல்

சாணக்கியர்- 21 பாடங்கள் ..!!!

|

மனிதன் கற்றுக்கொள்ள வேண்டிய 21 பாடங்கள் ..!

சிங்கத்திடம் இருந்து ஒன்றையும்,

கொக்கிடம் இருந்து இரண்டையும்,

கழுதையிடம் இருந்து மூன்றையும், ...

கோழியிடம் இருந்து நான்கையும்,


காக்கையிடம் இருந்து ஐந்தையும்,


நாயிடம் இருந்து ஆறையும் நாம் கற்று கொள்ள வேண்டும்.


1 - சிங்கம் எந்த ஒரு விஷயத்தையும் உடனடியாக செய்யாது,
நன்கு ஆலோசனை செய்த பின்பு முழு மனதுடன் உறுதியாக செயல்படும்.

2 - கொக்கு ஓடு மீன் ஓட, உறு மீன் வரும் வரை காத்து நிற்கும். அதுபோல் அறிவாளி ஒரு காரியத்தை செய்வதற்கு முன் காலம், இடம், தன் ஆற்றல் கூடும் வரை காத்திருந்து செய்வான்.

3 - கழுதையானது களைப்புற்றாலும் தன் வேலையை தொடர்ந்து செய்யும்,
வெயில், மழை என்று பாராமல் உழைக்கும்,  தன் முதலாளிக்கு கட்டுப்பட்டிருக்கும் குணம் ஆகிய மூன்றும் கழுதையிடம் இருந்து கற்று கொள்ள வேண்டிய விஷயங்கள் ஆகும்.

4 - விடியற்காலை எழுதல், தைரியமாக சண்டையிடுதல், அவரவர்க்கு தேவையானவற்றை பிரித்துக் கொடுத்தல், தனக்கு தேவையானவற்றை தானே உழைத்துத் தேடி சம்பாதித்தல் ஆகிய நான்கும் சேவலிடம் இருந்து கற்று கொள்ள வேண்டிய விஷயங்கள் ஆகும்.

5 - இரவில் மனைவியுடன் சேர்ந்து இருத்தல், தேவையான பொருள்களை சேமித்து வைத்தல், யாரையும் எளிதில் நம்பாமல் இருத்தல், தைரியம், எச்சரிக்கை உணர்வு ஆகிய ஐந்தும் காக்கையிடம் இருந்து கற்று கொள்ள வேண்டிய விஷயங்கள் ஆகும்.

6 - கிடைப்பதை உண்டு திருப்தி அடைதல், உணவு கிடைக்காத நேரத்தில் பட்டினி இருத்தல்,  நன்றாக பசி இருந்தும் கட்டளை வரும் வரை காத்து இருத்தல், நல்ல தூக்கத்தில் இருந்தாலும் உடனடியாக எழுந்து செயல் படுதல், முதலாளிக்கு விசுவாசமாக இருத்தல்,  தன்னைவிடவும் உருவத்தில் பெரிய மிருகமாக இருந்தாலும் தைரியமாக எதிர்த்தல் ஆகிய ஆறு குணங்களை நாயிடம் இருந்து கற்று கொள்ள வேண்டும்.

யார் ஒருவர் மேலே சொன்ன இந்த இருபத்தியொரு விஷயங்களை கடைபிடிக்கிறாறோ அவர் எதிலும் வெற்றி அடைவார். எடுத்த காரியம் அனைத்தும் வெற்றியாகும்.
இது நான் சொல்லலைங்க ..! சாணக்கியர் சொல்லியிருக்கார் ..!!!

உளறல்

|

அமெரிக்க நகர் ஒன்றில், ஒருவர் காரில் தன் மனைவி , அம்மா எல்லோருடனும் சென்று கொண்டிருந்தார் .நீண்ட நேரமாக அவரை ஒரு போலிஸ் ஜீப் தொடர்ந்துக் கொண்டிருந்தது. அவரும் அதை கவனித்துக் கொண்டு தொடர்ந்து வண்டியை ஓட்டிக் கொண்டிருந்தார்.


சிறிது நேரத்துக்கு பிறகு போலிஸ் ஜீப் அவரது காரை முந்திக்கொண்டு சென்று , அவர் கார் முன் நின்றது.

இறங்கி வந்த போலிஸ் அவரிடம் 'குட் வ்னிங் சார்..

அவா்: 'குட் ஈவ்னிங், ஏதாவது பிச்சனையா?'.

போலிஸ், 'நாங்கள் இருவரும், உங்கள் காரை அரை மணி நேரமாக கவனித்து வருகிறோம். ஆனால் நீங்கள் போக்குவரத்து விதிகளை மீறாமல், ஸ்பீட் லிமிட்டை ஒரு மைல் கூட அதிகரிக்காமல், சக டிரைவர்களை மதித்து காரை ஓட்டிய விதத்தை நாங்கள் பாராட்டுகின்றோம்.

அதனால், சாலை பாதுகாப்பு வாரத்தை முன்னிட்டு, உங்களை சிறந்த டிரைவராக தேர்வு செய்து, 10,000 டாலருக்கான இந்த செக்கை அன்பளிப்பாக கொடுக்கிறோம் பெற்றுக் கொள்ளுங்கள்'.


அவா் சந்தோஷமாக ஒரு பெருமூச்சுவிட்டு விட்டு சொன்னார், 'இந்த பணத்தை வைத்து எப்படியாவது டிரைவிங் லைசன்ஸ் கட்டாயம் எடுத்துடனும்' என்று சொன்னார்.

போலிஸ் ஒருமாதிரி பார்க்க, உடனே அவரின் மனைவி 'சாரி சார் தப்ப நினைக்க வேண்டாம், அவர் குடிச்சிட்டு வண்டி ஓட்டினாலே இப்படித்தான் எல்லோரிடமும் உளறுகிறார்' என்றார்.

இதையெல்லாம் பார்த்துக் கொண்டிருந்த அவரின் காது கேட்காத அம்மா சொன்னார், 'நான் அப்பவே சொன்னேன் கேட்டியா, திருட்டு காரை எடுத்துகிட்டு வந்ததால், இப்ப எல்லோரும் போலிஸில் மாட்டிகிட்டோம்..'

பெற்றோர்களுக்கு -அறிவுரைகள்.

|


1.உங்களுக்குப் பிடித்தவை உங்கள் குழந்தைகளுக்கும் பிடித்திருக்க வேண்டும் என்று எதிர்பார்க்காதீர்கள்.
2.தினந்தோறும் சந்தர்ப்பம் கிடைக்கும்போதெல்லாம் உங்கள் குழந்தைகளிடம் “ I love you” என்று சொல்லுங்கள்.
3.உங்கள் குழந்தைகள் தவறு செய்தால் அதையே சுட்டிக் காட்டிக்கொண்டிருக்காதீர்கள். ஏற்கனவே அவர்கள் குற்ற உணர்வுடன் இருப்பார்கள்.
4.நீங்கள் வளரும்போது நீங்களும் முழுமையானவர்களாக  இருந்திருக்கவில்லை என்பதை நினைவில் வைத்துக்கொள்ளுங்கள். நீங்களே முழுமையானவர்களாக இல்லாதபோது உங்கள் குழந்தைகளிடம் எப்படி அதை எதிர்பார்க்கலாம்?
5.ஒரு குழந்தைக்கு மேல் உங்களுக்கு இருந்தால் தயவுசெய்து அவர்களை ஒப்பிட்டுப் பேசாதீர்கள். ஐந்து விரல்களும் ஒன்றுபோல் இருக்காது.
6.குழந்தைகளிடம் பொறுமையைக் கடைப்பிடியுங்கள். அவர்களுக்கு இது கற்கும் காலம்.
7.தப்பு ஏதாவது நடந்தால் குழந்தைகளை அதற்குப் பொறுப்பாக்காதீர்கள். எல்லாச் சமயங்களிலும் தவறு குழந்தைகளிடம் இருக்காது.
8.சிறு பரிசானாலும் பரவாயில்லை. அடிக்கடி குழந்தைகளை ஆச்சரியத்தில் மூழ்கடியுங்கள்.
9.குழந்தைகள் எப்பொழுதுமே 5 வயது குழந்தைகளாக இருக்க முடியாது. அவர்களும் வளர்கிறார்கள்.
10.குழந்தைகள் முன்னால் வாக்குவாதத்திலோ, சண்டையிலோ ஈடுபடாதீர்கள். 

இதில் பாதியையாவது நீங்கள் கடைப்பிடித்தால் உங்கள் குழந்தைகள் உங்களை நல்ல பெற்றோர்கள் என்று எப்பொழுதும் நினைத்துப் பெருமைப்படுவார்கள்.

Related Posts Plugin for WordPress, Blogger...

தலைப்புகள்

anicent tamil (4) Blog Tips (2) Computer (4) ILUSION (1) information (1) LPG சிலிண்டர் (1) safety (1) Short Cut Key (2) SMS (1) tamil (14) tamil friendship poem (2) tamil joke (7) tamil kathai (5) tamil story (6) tamil year (1) Welding Symbol (1) அபூர்வ தகவல் (1) ஆரோக்கியம் (11) ஆவணங்கள் (7) இயற்கை (3) எச்சரிக்கை (2) கணணி பராமரிப்பு (1) கதை (21) கம்ப்யூட்டர்வேலை (1) கலைஞர் (1) கவிதை (11) சாப்ட்வேர் மாப்பிள்ளை (1) சிந்தனை (2) செய்தி (10) தமிழர் பண்பாடு (5) தமிழ் (14) தமிழ் அளவை (2) தமிழ் அளவைகள் (1) தமிழ் ஆண்டுகள் (2) தமிழ் எண்கள் (1) தமிழ் எழுத்து (2) தமிழ் காலம் (2) தமிழ் பாட்டு (2) தமிழ் மருத்துவம் (6) தமிழ்நாடு அரசு பாடப் புத்தகங்கள் (1) தன்னம்பிக்கை (1) தீபம் (1) துணுக்கு (16) தெரிந்துகொள்வோம் (3) நகைச்சுவை (30) நகைச்ச்சுவை (4) நகைச்ச்சுவைகடிதம் (1) நட்பு (3) நட்பு கவிதை (2) படம் (1) படித்ததில் பிடித்தது (52) பணம் (1) பரோட்டா (1) பழம்தமிழர் (1) பாதுகாப்பு (2) பிரபலமானவர்களின் (3) பெண்பார்க்கும் படலம் (1) பெற்றோர் (1) பொங்கல் (1) பொழுதுபோக்கு (27) மகிழ்ச்சி (3) மாங்கல்யம் (1) மாய தோற்றம் (1) வரலாற்று நிகழ்வு (1) வலைப்பூ (1) வழி காட்டி (9) வழிகாட்டி (27) வாழ்கை (13) வாழ்க்கை (8) வாழ்த்துகள் (12) விவசாயம் (2) விவசாயி (1) வேலை (3)
 

©2009 அறிவு களஞ்சியம் | Template Blue by TNB