திருக்குறள்

தேடல்

டேவிட் ஒகில்வியின் ...

|

படித்ததில் பிடித்தது : அமெரிக்க கோடீஸ்வரரான டேவிட் ஒகில்வியின் சுயசரிதை-அதிலிருந்து சில துளிகள்
 
பாடுபட்டு உழைப்பவர்களை, வியந்து பாராட்டுகிறேன். துடுப்புப் போடாமல் படகிலே உட்கார்ந்து பயணம் செய்வோரை, எனக்குப் பிடிக்காது.
 
உள்ளதற்கும் குறைவாக வேலை செய்வதைக் காட்டிலும், உள்ளதற்கும் அதிகப்படியாக வேலை செய்வதுதான் உற்சாகம். ...

அதிகமாக உழைக்க உழைக்க வேலையாட்களின் எண்ணிக்கை குறையும்; எனவே, லாபம் அதிகமாக இருக்கும். அதிகமாக லாபம் கிடைத்தால், அனைவரும் அதிகமாக பகிர்ந்து கொள்ளலாம்.

முதல்தர மூளை உள்ளவர்களை போற்றுகிறேன்; மூளையில்லாதவர்களைக் கொண்டு, ஒரு பெரிய நிறுவனத்தை நடத்த முடியாது. ஆனால், வெறும் மூளை மட்டும் போதாது; அறிவிலே நேர்மையும் இணைய வேண்டும்.

உறவுக்காரர்களை வேலைக்கு அமர்த்துவது எனக்குப் பிடிக்காது; அதில், வீண் வம்புகள் பெருகும்.

மேலதிகாரியை காக்காய்ப் பிடிக்கிறவர் களை வெறுக்கிறேன்; ஏனெனில், இந்தப் பேர்வழிகள், தங்களின் கீழே வேலை செய்வோரை சதா கொத்திப் பிடுங்கிக் கொண்டு இருப்பர்.

தனக்குப் பின், பதவியை ஏற்கக் கூடிய தகுதியுள்ளவர்களாக கீழே உள்ளவர்களை உருவாக்குகிறவர்களை போற்றுகிறேன்.

மட்டமானவர்களை தன் கீழே அமர்த்திக் கொண்டால் தான், தாங்கள் பத்திரமாக இருக்க முடியும் என்று நினைக்கும் நபர்களை கண்டு பரிதாபப்படுகிறேன்.

மற்றவர்களையும் மனிதனாகக் கருதி, மென்மையாக நடந்து கொள்கிறவர்களை போற்றுகிறேன்; சண்டைக்காரப் பேர்வழிகளை வெறுத்து ஒதுக்குகிறேன்.

சமாதானமாக வாழ்வதற்குச் சிறந்த வழி, ஒளிவு, மறைவு இல்லாமல் இருப்பது தான்.

சொர்கமும்... நரகமும்...

|

வயல்வெளி பார்த்து...
வறட்டி தட்டி......
ஓணாண் பிடித்து...
ஓடையில் குளித்து...
எதிர்வீட்டில் விளையாடி...
எப்படியோ படித்த நான்,
ஏறிவந்தேன் நகரத்துக்கு!


சிறு அறையில் குறுகிப் படுத்து...
சில மாதம் போர்தொடுத்து...
வாங்கிவிட்ட வேலையோடு...
வாழுகிறேன் கணிப்பொறியோடு!

சிறிதாய்த் தூங்கி...
கனவு தொலைத்து...
காலை உணவு மறந்து...
நெரிசலில் சிக்கி...
கடமை அழைக்க...
காற்றோடு செல்கிறேன்,
காசு பார்க்க!

மனசு தொட்டு...
வாழும் வாழ்க்கை,
மாறிப் போகுமோ?

மௌசு தொட்டு...
வாழும் வாழ்க்கை,
பழகிப் போகுமோ?

வால்பேப்பர் மாற்றியே,
வாழ்க்கை தொலைந்து போகுமோ?
சொந்த பந்த,
உறவுகளெல்லாம்,
ஜிப் (Zip) பைலாய்
சுருங்கிப் போகுமோ?

வாழ்க்கை
தொலைந்து போகுமோ
மொத்தமும்!
புரியாது
புலம்புகிறேன்
நித்தமும்!

தாய் மடியில் தலைவைத்து
நிலவு முகம் நான் ரசித்து
கதைகள் பேசி
கவலைகள் மறந்த காலம்
இனிதான் வருமா?

இதயம் நனைத்த
இந்த வாழ்வு
இளைய தலைமுறைக்காவது
இனி கிடைக்குமா?

சொந்த மண்ணில்
சொந்தங்களோடு
சோறு திண்பவன்
யாரடா?
அவனே,
சொர்க்கம் கண்டவனடா!

படித்ததில் பிடித்தது

மதுப் பழக்கத்திற்கு அடிமையா ?

|

புத்தகம் ஒன்றில் படித்தது
 
நீங்கள் மதுப் பழக்கத்திற்கு அடிமையா, இல்லையா என்பதை தெரிந்து கொள்ள, கீழ்க்கண்ட கேள்விகளுக்கு உண்மையான பதில் அளியுங்கள்:
1. உங்களது குடிப்பழக்கத்தால், குடும்ப வாழ்க்கை மகிழ்ச்சியிழந்து விட்டதா?
 
2. உங்கள் பணி நேரம் குறைந்து விட்டதா?
 
3. குடிப்பழக்கம், உங்கள் பெயர், புகழுக்கு களங்கம் ஏற்படுத்தி உள்ளதா?
 
4. குடிப் பழக்கத்தால், பணக் கஷ்டம் ஏற்பட்டுள்ளனவா?
 
5. மோசமான சுற்றுச் சூழலில், உங்களைவிட தகுதி குறைந்த நபர்களோடு சேர்ந்து குடிக்கும் அளவிற்கு மாறி விட்டீர்களா?
 
6. குடிப்பதால், குடும்ப நலனை கவனிக்க, பராமரிக்க முடியவில்லையா?
 
7. கவலைகள், பிரச்னைகளிலிருந்து தப்பிப்பதற்காக குடிக்கிறீர்களா?
 
8. தினமும் ஒரு குறிப்பிட்ட நேரத்தில் குடிக்க வேண்டும் என்ற தூண்டுதல் ஏற்படுகிறதா?
 
9. குடிப்பழக்கம் காரணமாக, தூங்குவதில் சிரமம் உள்ளதா?
 
10. குடிப் பழக்கத்தால் உங்கள் திறமைகளும், லட்சியங்களும், ஆர்வங்களும் குறைந்து வருகிறதா?
 
இந்த, 10 கேள்விகளில், ஒரேயொரு கேள்விக்கு மட்டும், 'ஆம்' என்று, நீங்கள் பதிலளித்தால், நீங்கள் குடிப் பழக்கத்திற்கு அடிமையாகி இருக்கலாம் அல்லது மிக விரைவில் அடிமையாகி விடுவீர்கள்.
 
இரண்டு கேள்விக்கு, 'ஆம்' என்ற பதிலளித்தால், நீங்கள் குடிப்பழக்கத்திற்கு அடிமை.
 
மூன்று அல்லது அதற்கு மேற்பட்ட கேள்விகளுக்கு, 'ஆம்' என்று பதிலளித்தால், எவ்வித சந்தேகமும் இன்றி, நிச்சயமாக நீங்கள் குடிப்பழக்க அடிமை தான்.
 
இந்த, 10 கேள்விகளில் எந்தக் கேள்வியும் உங்களுக்கு பொருந்தவில்லை எனில், நீங்கள் குடிப்பழக்கத்திற்கு அடிமையில்லை; ஆனால், அடிமையாகி விடாமல், உங்களைத் தற்காத்துக் கொள்ளுங்கள்.
 
 

Related Posts Plugin for WordPress, Blogger...

தலைப்புகள்

anicent tamil (4) Blog Tips (2) Computer (4) ILUSION (1) information (1) LPG சிலிண்டர் (1) safety (1) Short Cut Key (2) SMS (1) tamil (14) tamil friendship poem (2) tamil joke (7) tamil kathai (5) tamil story (6) tamil year (1) Welding Symbol (1) ஆரோக்கியம் (8) ஆவணங்கள் (6) எச்சரிக்கை (2) கணணி பராமரிப்பு (1) கதை (17) கம்ப்யூட்டர்வேலை (1) கலைஞர் (1) கவிதை (9) சாப்ட்வேர் மாப்பிள்ளை (1) செய்தி (9) தமிழர் பண்பாடு (3) தமிழ் (14) தமிழ் அளவை (2) தமிழ் அளவைகள் (1) தமிழ் ஆண்டுகள் (2) தமிழ் எண்கள் (1) தமிழ் எழுத்து (2) தமிழ் காலம் (2) தமிழ் பாட்டு (2) தமிழ் மருத்துவம் (4) தமிழ்நாடு அரசு பாடப் புத்தகங்கள் (1) தீபம் (1) துணுக்கு (11) நகைச்சுவை (27) நகைச்ச்சுவை (2) நகைச்ச்சுவைகடிதம் (1) நட்பு (3) நட்பு கவிதை (2) படம் (1) படித்ததில் பிடித்தது (39) பரோட்டா (1) பழம்தமிழர் (1) பாதுகாப்பு (1) பிரபலமானவர்களின் (1) பெண்பார்க்கும் படலம் (1) பொங்கல் (1) பொழுதுபோக்கு (20) மகிழ்ச்சி (3) மாங்கல்யம் (1) மாய தோற்றம் (1) வலைப்பூ (1) வழி காட்டி (9) வழிகாட்டி (23) வாழ்கை (13) வாழ்க்கை (5) வாழ்த்துகள் (9) வேலை (3)
 

©2009 அறிவு களஞ்சியம் | Template Blue by TNB