திருக்குறள்

தேடல்

மழை பெய்வதை யார் யார் எப்படி சொல்வார்கள் ?

|

மழை பெய்வதை யார் யார் எப்படி சொல்வார்கள்:

இரும்பு வியாபாரி - கனமா பெய்யுது

கரும்பு வியாபாரி - சக்கைப் போடு போடுது....

சலவைக்காரர் - வெளுத்துக்கட்டுதுங்க ...

நர்ஸ் - நார்மலாதான் பெய்யுது.

பஞ்சு வியாபாரி - லேசா பெய்யுது.


போலீஸ்காரர் - மாமூலா பெய்யுது.


வேலைக்காரி - பிசு பிசுன்னு பெய்யுது.


ஜூஸ் கடைக்கார் - புழிஞ்சி எடுக்குது.


டீ கடைக்காரர் - ஆத்து ஆத்துன்னு ஆத்துது.


டாஸ்மாக் கடைக்காரர் - சும்மா கும்முன்னு பெய்யுது 


கோவில் பூசாரி - திவ்யமா பெய்யுது 


செருப்பு கடைக்காரர் - செம்ம அடி அடிக்கிது 


மசாஜ் பார்லர்க்காரர்- சும்மா புடிபுடின்னு புடிக்குது,


பேண்ட் வாத்தியக்காரர்- கொட்டோகொட்டுன்னு கொட்டுது


WIFE- செம அடி அடிக்குது.


*HUSBAND - வாங்கு வாங்குன்னுவாங்குது

டேவிட் ஒகில்வியின் ...

|

படித்ததில் பிடித்தது : அமெரிக்க கோடீஸ்வரரான டேவிட் ஒகில்வியின் சுயசரிதை-அதிலிருந்து சில துளிகள்
 
பாடுபட்டு உழைப்பவர்களை, வியந்து பாராட்டுகிறேன். துடுப்புப் போடாமல் படகிலே உட்கார்ந்து பயணம் செய்வோரை, எனக்குப் பிடிக்காது.
 
உள்ளதற்கும் குறைவாக வேலை செய்வதைக் காட்டிலும், உள்ளதற்கும் அதிகப்படியாக வேலை செய்வதுதான் உற்சாகம். ...

அதிகமாக உழைக்க உழைக்க வேலையாட்களின் எண்ணிக்கை குறையும்; எனவே, லாபம் அதிகமாக இருக்கும். அதிகமாக லாபம் கிடைத்தால், அனைவரும் அதிகமாக பகிர்ந்து கொள்ளலாம்.

முதல்தர மூளை உள்ளவர்களை போற்றுகிறேன்; மூளையில்லாதவர்களைக் கொண்டு, ஒரு பெரிய நிறுவனத்தை நடத்த முடியாது. ஆனால், வெறும் மூளை மட்டும் போதாது; அறிவிலே நேர்மையும் இணைய வேண்டும்.

உறவுக்காரர்களை வேலைக்கு அமர்த்துவது எனக்குப் பிடிக்காது; அதில், வீண் வம்புகள் பெருகும்.

மேலதிகாரியை காக்காய்ப் பிடிக்கிறவர் களை வெறுக்கிறேன்; ஏனெனில், இந்தப் பேர்வழிகள், தங்களின் கீழே வேலை செய்வோரை சதா கொத்திப் பிடுங்கிக் கொண்டு இருப்பர்.

தனக்குப் பின், பதவியை ஏற்கக் கூடிய தகுதியுள்ளவர்களாக கீழே உள்ளவர்களை உருவாக்குகிறவர்களை போற்றுகிறேன்.

மட்டமானவர்களை தன் கீழே அமர்த்திக் கொண்டால் தான், தாங்கள் பத்திரமாக இருக்க முடியும் என்று நினைக்கும் நபர்களை கண்டு பரிதாபப்படுகிறேன்.

மற்றவர்களையும் மனிதனாகக் கருதி, மென்மையாக நடந்து கொள்கிறவர்களை போற்றுகிறேன்; சண்டைக்காரப் பேர்வழிகளை வெறுத்து ஒதுக்குகிறேன்.

சமாதானமாக வாழ்வதற்குச் சிறந்த வழி, ஒளிவு, மறைவு இல்லாமல் இருப்பது தான்.

சொர்கமும்... நரகமும்...

|

வயல்வெளி பார்த்து...
வறட்டி தட்டி......
ஓணாண் பிடித்து...
ஓடையில் குளித்து...
எதிர்வீட்டில் விளையாடி...
எப்படியோ படித்த நான்,
ஏறிவந்தேன் நகரத்துக்கு!


சிறு அறையில் குறுகிப் படுத்து...
சில மாதம் போர்தொடுத்து...
வாங்கிவிட்ட வேலையோடு...
வாழுகிறேன் கணிப்பொறியோடு!

சிறிதாய்த் தூங்கி...
கனவு தொலைத்து...
காலை உணவு மறந்து...
நெரிசலில் சிக்கி...
கடமை அழைக்க...
காற்றோடு செல்கிறேன்,
காசு பார்க்க!

மனசு தொட்டு...
வாழும் வாழ்க்கை,
மாறிப் போகுமோ?

மௌசு தொட்டு...
வாழும் வாழ்க்கை,
பழகிப் போகுமோ?

வால்பேப்பர் மாற்றியே,
வாழ்க்கை தொலைந்து போகுமோ?
சொந்த பந்த,
உறவுகளெல்லாம்,
ஜிப் (Zip) பைலாய்
சுருங்கிப் போகுமோ?

வாழ்க்கை
தொலைந்து போகுமோ
மொத்தமும்!
புரியாது
புலம்புகிறேன்
நித்தமும்!

தாய் மடியில் தலைவைத்து
நிலவு முகம் நான் ரசித்து
கதைகள் பேசி
கவலைகள் மறந்த காலம்
இனிதான் வருமா?

இதயம் நனைத்த
இந்த வாழ்வு
இளைய தலைமுறைக்காவது
இனி கிடைக்குமா?

சொந்த மண்ணில்
சொந்தங்களோடு
சோறு திண்பவன்
யாரடா?
அவனே,
சொர்க்கம் கண்டவனடா!

படித்ததில் பிடித்தது

Related Posts Plugin for WordPress, Blogger...

தலைப்புகள்

anicent tamil (4) Blog Tips (2) Computer (4) ILUSION (1) information (1) LPG சிலிண்டர் (1) safety (1) Short Cut Key (2) SMS (1) tamil (14) tamil friendship poem (2) tamil joke (7) tamil kathai (5) tamil story (6) tamil year (1) Welding Symbol (1) ஆரோக்கியம் (8) ஆவணங்கள் (6) எச்சரிக்கை (2) கணணி பராமரிப்பு (1) கதை (17) கம்ப்யூட்டர்வேலை (1) கலைஞர் (1) கவிதை (9) சாப்ட்வேர் மாப்பிள்ளை (1) செய்தி (9) தமிழர் பண்பாடு (3) தமிழ் (14) தமிழ் அளவை (2) தமிழ் அளவைகள் (1) தமிழ் ஆண்டுகள் (2) தமிழ் எண்கள் (1) தமிழ் எழுத்து (2) தமிழ் காலம் (2) தமிழ் பாட்டு (2) தமிழ் மருத்துவம் (4) தமிழ்நாடு அரசு பாடப் புத்தகங்கள் (1) தீபம் (1) துணுக்கு (12) நகைச்சுவை (27) நகைச்ச்சுவை (2) நகைச்ச்சுவைகடிதம் (1) நட்பு (3) நட்பு கவிதை (2) படம் (1) படித்ததில் பிடித்தது (40) பரோட்டா (1) பழம்தமிழர் (1) பாதுகாப்பு (1) பிரபலமானவர்களின் (1) பெண்பார்க்கும் படலம் (1) பொங்கல் (1) பொழுதுபோக்கு (21) மகிழ்ச்சி (3) மாங்கல்யம் (1) மாய தோற்றம் (1) வலைப்பூ (1) வழி காட்டி (9) வழிகாட்டி (23) வாழ்கை (13) வாழ்க்கை (5) வாழ்த்துகள் (9) வேலை (3)
 

©2009 அறிவு களஞ்சியம் | Template Blue by TNB