திருக்குறள்

தேடல்

சாப்ட்வேர் மாப்பிள்ளை

|

வித்யா : என்னடி திடீர்னு ஃபோன் பண்ணியிருக்க என்ன விஷயம்?

நித்யா: வீட்ல மாப்பிளை பார்க்கலாம்னு நிறைய இடத்துல ரிஜிஸ்டர் பண்ணாங்க இல்லை? நிறைய ஜாதகமா வந்திருக்கு. அதுல 4-5 ஒத்து வர மாதிரி இருக்கு. எதை செலக்ட் பண்ணலாம்னு தெரியலை. அதான் குழம்பி போய் இருக்கேன்.
வித்யா : என்ன குழப்பம்?

நித்யா : நிறைய சாப்ட்வேர் இஞ்சினியருங்க ஜாதகம் வந்திருக்கு. இப்ப எல்லாம் சாப்ட்வேர் இஞ்சினியருங்க வேற ஃபீல்ட்ல இருக்கற பொண்ணுங்களை தான் கல்யாணம் பண்ணிக்கனும் யோசிக்கறாங்களாம். அதான் இதுல யாரை செலக்ட் பண்றதுனு தெரியல. நீதான் சாப்ட்வேர் இஞ்சினியராச்சே. எனக்கு கொஞ்சம் சஜஷன் சொல்லு.

வித்யா : சொல்லிட்டா போகுது. ஒவ்வொருத்தரும் என்ன பொசிஷனு சொல்லு.

நித்யா: முதல் மாப்பிள்ளை மேனஜரா இருக்காரு.

வித்யா : மேனஜரா? அப்படினா எப்பவுமே எதோ பிஸியா இருக்கற மாதிரி ஒரு பில்ட் அப் கொடுப்பாரு. ஆனா உருப்படியா ஒண்ணும் செய்ய மாட்டாரு. ஒரு கிலோ அரிசில ஊருக்கே சாப்பாடு செய்ய சொல்லுவாரு. ஆட்டுக்கறி வாங்கிட்டு வந்து கொடுத்துட்டு சிக்கன் 65 செய்ய சொல்லுவாரு. அது முடியாதுனு சொன்னாலும், ஒத்துக்க மாட்டாரு. எப்படியாவது ராத்திரி பகலா கஷ்டப்பட்டு உழைச்சாவது அதை செஞ்சி முடிக்கனும்னு சொல்லுவாரு. வேணும்னா நைட் கேப் (cab) அரெஞ்ச் பண்றனு சொல்லுவாரு. டேய் ராத்திரி பகல் முழிச்சா மட்டும் எப்படிடா செய்ய முடியும் கேட்டாலும் ஒத்துக்க மாட்டாரு.

வித்யா: ஆஹா. அவ்வளவு ஆபாத்தானவரா? அப்ப நம்ம எஸ்கேப். அடுத்து இருக்கறவரு டெஸ்ட் இஞ்சினியரு.

நித்யா: இவரு அவரை விட ஆபத்தானவரு. எது செஞ்சாலும் அதுல இருக்கற குறையை மட்டும் கரெக்டா சொல்லுவாரு. நீ பத்து வெரைட்டி சமைச்சு அவரை அசத்தனும்னு நினைச்சாலும் அதுல எதுல உப்பு கம்மியா இருக்குனு மட்டும் சொல்லுவாரு. நல்லா இருக்குனு எதுவுமே சொல்ல மாட்டீங்களானு கேட்டா, நல்லா செய்ய வேண்டியது தான் உன் வேலை. அதனால அதை எதுக்கு சொல்லனும்னு கேட்பாரு. ரொம்ப நல்லவரு.

வித்யா: அப்ப இவருக்கும் நோ சொல்லிடலாம். அடுத்து இருக்கறவரு பெர்ஃபார்மன்ஸ் டெஸ்ட் இஞ்சினியராம்.
நித்யா : இது அதுக்கும் மேல. எல்லாமே நல்லா இருந்தாலும், இதை செய்ய இவ்வளவு நேரமானு கேட்பாரு. காபி போட 10 நிமிஷமாச்சுனா, காபி நல்லா இருக்கானு பார்க்க மாட்டாரு. 5 நிமிஷத்துல போட வேண்டிய காப்பியை 10 நிமிஷமா போட்டிருக்கனு சத்தம் போடுவாரு. நீங்க சொல்றது இன்ஸ்டண்ட் காபி, நான் செஞ்சது பில்டர் காபினு சொன்னாலும் கேட்க மாட்டாரு. அதே மாதிரி தான் எல்லா வேலைக்கும். அப்ப நீ மேக் அப் பண்ற நேரத்துக்கு நீ எல்லாம் இவரை யோசிக்கவே கூடாது.
வித்யா: அப்ப சாப்ட்வேர் மாப்பிளையே வேண்டாம்னு சொல்றியா?
நித்யா: யார் அப்படி சொன்னா? சாப்ட்வேர்லயே இளிச்ச வாய் கூட்டம் ஒண்ணு இருக்கு. அது தான் டெவலப்பர் கூட்டம். எவ்வளவு அடிச்சாலும் தாங்கிக்கும்.

வித்யா: அவுங்களை பத்தி சொல்லேன்.
நித்யா: நீ எதுவுமே செய்ய வேண்டாம். எல்லாமே இவுங்களே செஞ்சிடுவாங்க. நாம பின்னாடி இருந்து உற்சாகப்படுத்தினா போதும். ஆனா இவுங்க கிட்ட இருக்கற பிரச்சனை என்னனா எது கேட்டாலும் தெரியும்னு சொல்லிடுவாங்க. நம்ம "அறிவாளி" படம் தங்கவேல் பூரி சுட்ட கதை மாதிரி. அப்படினாலும் ஓ.கே தான். எவ்வளவு அடிச்சாலும் தாங்கிக்குவாங்க. ஆனா அடிச்சிட்டு அடிச்சிட்டு "நீ ரொம்ப நல்லவனு" சொல்லனும். அவ்வளவு தான்.

வித்யா: இது சூப்பரா இருக்கே. அப்ப அந்த மாதிரி மாப்பிளையை தேடிடுவோம்...

1 Comentário:

Anonymous said...

Hello, I enjoy reading all of your article post.
I wanted to write a little comment to support you.


my web-site; call of duty mw3 hackers

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...

தலைப்புகள்

anicent tamil (4) Blog Tips (2) Computer (4) ILUSION (1) information (1) LPG சிலிண்டர் (1) safety (1) Short Cut Key (2) SMS (1) tamil (14) tamil friendship poem (2) tamil joke (7) tamil kathai (5) tamil story (6) tamil year (1) Welding Symbol (1) அபூர்வ தகவல் (1) ஆரோக்கியம் (15) ஆவணங்கள் (7) இயற்கை (4) எச்சரிக்கை (3) கணணி பராமரிப்பு (1) கதை (21) கம்ப்யூட்டர்வேலை (1) கலைஞர் (1) கவிதை (11) சாப்ட்வேர் மாப்பிள்ளை (1) சிந்தனை (2) செய்தி (11) தமிழர் பண்பாடு (5) தமிழ் (14) தமிழ் அளவை (2) தமிழ் அளவைகள் (1) தமிழ் ஆண்டுகள் (2) தமிழ் எண்கள் (1) தமிழ் எழுத்து (2) தமிழ் காலம் (2) தமிழ் பாட்டு (2) தமிழ் மருத்துவம் (6) தமிழ்நாடு அரசு பாடப் புத்தகங்கள் (1) தன்னம்பிக்கை (1) தீபம் (1) துணுக்கு (16) தெரிந்துகொள்வோம் (8) நகைச்சுவை (31) நகைச்ச்சுவை (4) நகைச்ச்சுவைகடிதம் (1) நட்பு (3) நட்பு கவிதை (2) படம் (1) படித்ததில் பிடித்தது (54) பணம் (1) பரோட்டா (1) பழம்தமிழர் (1) பறவை (1) பாதுகாப்பு (2) பிரபலமானவர்களின் (3) பெண்பார்க்கும் படலம் (1) பெற்றோர் (1) பொங்கல் (1) பொழுதுபோக்கு (27) மகிழ்ச்சி (3) மாங்கல்யம் (1) மாய தோற்றம் (1) வரலாற்று நிகழ்வு (1) வலைப்பூ (1) வழி காட்டி (9) வழிகாட்டி (30) வாழ்கை (13) வாழ்க்கை (9) வாழ்த்துகள் (14) விவசாயம் (2) விவசாயி (1) வேலை (3)
 

©2009 அறிவு களஞ்சியம் | Template Blue by TNB