திருக்குறள்

Search

Loading...

அழகு

|


ஒரே நாள் ஒருத்தன் குயிலிடம் சொன்னான் நீ மட்டும் கருப்பா, இல்லைன்னா எவ்ளோ நல்லா இருக்கும்,

கடலிடம் சொன்னான் நீ மட்டும் உப்பா இல்லைன்னா எவ்ளோ நல்லா
இருக்கும்,
 
ரோஜாவிடம் சொன்னான் உன்னிடம் முட்கள் இல்லைன்னா எவ்ளோ நல்லா இருக்கும்,

அப்போது அந்த மூன்றும் ஒன்று சேரந்து சொன்னது மானிடா உன்னிடம் மட்டும் பிறரின் குறை கண்டுபிடிக்கும் பழக்கம் இல்லைன்னா எவ்ளோ நல்லா இருக்கும், ,

பிறரிடம் குறை காணா மனிதன் என்றுமே அழகு தான்..

வித்தியாசம்...

|

ஒரு அரசனுக்கு அவனுடைய எல்லா பற்களும் விழுந்து பொக்கை வாயுடன் இருப்பதாக ஒரு கனவு வந்தது. இதனால் காலையில் பீதியுடன் எழுந்த அவன், அந்தக் கனவால் என்ன விளைவுகள் நேருமோ என்று பயந்துபோய் முதல் வேலையாக ஒரு நாடி ஜோதிடரை வரவழைத்தான்.
 
அந்த நாடி ஜோதிடர் தனது ஓலைச்சுவடியை எடுத்து, அதில் பொக்கை வாய் கனவு பற்றி விளக்கியிருந்த ஒரு ஓலையை வாசித்துவிட்டு, ‘அரசே! உங்கள் மனைவி, குழந்தைகள், சொந்த பந்தங்கள் எல்லாம் உங்களுக்கு முன்பே இறந்து விடுவார்கள்என்று பலன் சொன்னார். உடனே அந்த அரசன் மிகவும் கோபமுற்று, ‘இவனைப் பிடித்து சிறையில் தள்ளுங்கள்!’ என்று உத்தரவிட்டான். அதன் பிறகும் மன்னனின் மனம் சமாதானமடையவில்லை.
 
 இன்னொரு நாடி ஜோதிடரை வரவழைத்து, அவரிடம் தன் பொக்கை வாய் கனவின் அர்த்தம் என்ன என்று வினவினான். அந்த ஜோதிடரும் அதே மாதிரியான ஓலைச்சுவடியைத்தான் வைத்திருந்தார். அவரும் அதைப் பார்த்துவிட்டு, ‘மன்னா! உங்கள் சொந்த, பந்தங்களையெல்லாம் விட நீங்கள் நீண்ட காலம் நீடூடி வாழ்வீர்கள்என்று பலன் கூறினார். இதனால் மனம் குளிர்ந்த அரசன், அந்த ஜோதிடருக்கு தகுந்த பரிசுகள் வழங்கி அனுப்பி வைத்தான். இருவரும் அதே ஓலையைத்தான் படித்தார்கள், அதே விஷயத்தைதான் சொன்னார்கள். ஒருவர் எல்லோரும் இறந்துவிடுவார்கள் என்றார், இன்னொருவர் எல்லோரையும் கடந்து வாழ்வீர்கள் என்றார், அவ்வளவுதான் வித்தியாசம்.

எது வாழ்வில் மகிழ்ச்சி !

|


அன்பு பிறரிடம் காட்டுவது

ஒற்றுமை உணர்வுடன் இருப்பது

அக்கறை மற்றவர்களிடம் செலுத்துவது

அவர்களுக்கு  எப்போதும் நம்பிக்கை வளர்ப்பது

அவர்கள் வாழ்வில்   எப்போதும் அமைதி காப்பது

நீங்கள் அவர்களுக்கு என்றும் ஓர்  புரியாத புதிராய்  இருப்பது

மற்றவர்கள் உணர்வுகளை மதிப்பது அவர்களுக்கு மரியாதை 
கொடுப்பது

 

Related Posts Plugin for WordPress, Blogger...

தலைப்புகள்

anicent tamil (4) Blog Tips (2) Computer (4) friendship (1) ILUSION (1) information (1) LPG சிலிண்டர் (1) safety (1) Short Cut Key (2) SMS (1) tamil (18) tamil friendship poem (2) tamil joke (10) tamil kathai (5) tamil kavithai (2) tamil poem (1) tamil story (6) tamil year (1) Welding Symbol (1) ஆரோக்கியம் (5) ஆவணங்கள் (6) எச்சரிக்கை (2) கணணி பராமரிப்பு (1) கதை (17) கம்ப்யூட்டர்வேலை (2) கலைஞர் (1) கவிதை (5) சாப்ட்வேர் மாப்பிள்ளை (1) செய்தி (7) தமிழ் (14) தமிழ் அளவை (1) தமிழ் அளவைகள் (1) தமிழ் ஆண்டுகள் (2) தமிழ் எண்கள் (1) தமிழ் எழுத்து (2) தமிழ் காலம் (2) தமிழ் பாட்டு (1) தமிழ் மருத்துவம் (3) தமிழ்நாடு அரசு பாடப் புத்தகங்கள் (1) தீபம் (1) துணுக்கு (10) நகைச்சுவை (26) நகைச்ச்சுவைகடிதம் (2) நட்பு (3) நட்பு கவிதை (2) படம் (1) படித்ததில் பிடித்தது (26) பரோட்டா (1) பாதுகாப்பு (1) பெண்பார்க்கும் படலம் (1) பொங்கல் (1) பொழுதுபோக்கு (16) மகிழ்ச்சி (3) மாங்கல்யம் (1) மாய தோற்றம் (1) வலைப்பூ (1) வழி காட்டி (8) வழிகாட்டி (16) வாழ்கை (11) வாழ்த்துகள் (8) வேலை (3)
 

©2009 அறிவு களஞ்சியம் | Template Blue by TNB