திருக்குறள்

தேடல்

கவுண்டமணி & விஜய் பேட்டி

|

இது நான் சில வருடங்களுக்கு முன் படித்தது
முன் குறிப்பு: விஜய் ரசிகர்கள் இதை படித்து டென்ஷனானால் கவுண்டரை பிடிக்கவும்... இது முழுக்க முழுக்க நகைச்சுவைக்காக மட்டுமே!!!

எல்லா விசேஷத்துக்கும் டீ.வி பேட்டிக்கு முதல் ஆளா வந்து நிக்கறது நம்ம இளைய தளபதி தான். அவரையே இன்னைக்கு நம்ம நிகழ்ச்சிக்கும் புத்தாண்டு சிறப்பு விருந்தினரா கூப்பிட்டுருக்கோம். அவரும் வழக்கம் போல வர ஒத்துக்கிட்டாரு. சரி இனி நிகழ்ச்சிக்கு போவோம்.

க: வாப்பா விஜய். ஆரம்பத்துல நீ நடிச்ச கேவலமான படத்தை பார்த்துட்டு நீ இவ்வளவு பெரிய ஆளா வருவனு நான் நினைக்கவேயில்லப்பா...

வி: அண்ணா. என்னங்கணா இப்படி சொல்லிட்டீங்க? நான் நடிச்ச எல்லா படமுமே சூப்பர் ஹிட் தானுங்கணா.

க: ஏனுங்க தம்பி இந்த நாளைய தீர்ப்பு, செல்வா, தேவா, விஷ்ணு, சந்திரலேகா, மாண்புமிகு மாணவன், வசந்த வாசல், ராஜாவின் பார்வையிலே இந்த படத்தையெல்லாம் நீங்க தியேட்டர்ல போய் பார்த்துருக்கீங்களா தம்பி?

வி: அண்ணா. நானும் என் ஃபிரெண்ட்ஸும் இந்த படத்தை எல்லாம் தியேட்டர்ல போய் பாத்தோங்கணா.

க: தெரியும். எவனும் வர மாட்டாங்கர தைரியத்துல போய் பார்த்துருப்பீங்க. உங்க கெட்ட நேரம் எவனாவது தப்பி தவறி தியேட்டர் பக்கம் ஒதுங்கியிருந்தானா உங்களுக்கெல்லாம் அப்படியே பொதுமாத்துதான்டீ...

வி: என்னங்கணா இப்படி சொல்லிட்டீங்க. ராஜாவின் பார்வையிலே நானும் அஜித்தும் சேர்ந்து நடிச்சத பார்த்து எங்க ரெண்டு பேர் ரசிகர்களும் தொடர்ந்து பாராட்டிக்கிட்டு இருக்காங்க.

க: ஓ! அந்த படத்துல அந்த கொடுமையெல்லாம் வேற இருக்கா? நல்ல வேளை நான் பார்க்கல.அது சரி அந்த ரசிகன் படத்துல ஹீரோயினோட அம்மாவுக்கு சோப்பு போடற சீன் யாரோட சிந்தனைல வந்துச்சுப்பா?

வி: அது எங்க அப்பாவோட சிந்தனைதானுங்கணா. அந்த படம் ஹிட்டானது அதுவும் ஒரு முக்கிய காரணம்.

க: டேய்! கேவலமா இப்படி ஒரு சீன் வெச்சிட்டு இதுல உங்களுக்கு பெருமை வேற. உன் வாழ்க்கையிலே நீ பண்ண ஒரு நல்ல விஷயம் என்ன தெரியுமா?

வி: என்னங்கணா?

க: உங்க அப்பா டைரக்ஷன்ல நடிக்கறத நிறுத்தனதுதான்...

வி: இதையே தானுங்கணா எங்க அம்மாவும் சொன்னாங்க.

க: உங்க அம்மா பேச்ச கேளு. அப்பறம் கேப்டன் கூட ஒரு படம் நடிச்சையே அது என்ன படம்பா?

வி: அப்படிங்களா? நியாபகம் இல்லையே! (விஜய் தீவிரமாக சிந்திக்கிறார்)

க: அதாம்பா அந்த யுவராணியோட கபடி ஆடுனியே!

வி: ஓ! நம்ம செந்தூரப்பாண்டி

க: அடப்பாவி. கேப்டனோட நடிச்ச படம்னா நியாபகம் இல்லை யுவராணியோட நடிச்ச படம்னா அடுத்த நிமிஷமே அடிக்கறியே...

வி: அதெல்லாம் மறக்கமுடியுமாங்கணா... அதெல்லாம் ஒரு பொற்காலம்னா. இன்னும் கண்ணுலயே இருக்கு. அப்பறம் இந்த பூவே உனக்காக வந்ததுக்கப்பறம் வாழ்க்கையே மாறிடுச்சிங்கணா.

க: நீ ஒழுங்கா நடிச்ச முதல் படமே அதுதான்.

வி: ஆமாங்கணா. அதுக்கப்பறம் வந்த எல்லா படமும் பயங்கர ஹிட்...

க: டேய்! சும்மா அடிச்சு விடாதடா. எல்லாமே லிஸ்ட்ல இருக்கு. இங்க அவனவனுக்கு தூக்கமே வர மாட்டீங்குது உனக்கு மட்டும் எப்படிடா கனவுல கண்ட இடத்துல எல்லாம் மச்சம் இருக்குற மாதிரி பொண்ணு வருது?

வி: ஏனுங்கணா, உங்க வயசுக்கு எப்படினா அதெல்லாம் வரும்? எங்கள மாதிரி யூத்துக்கு தானுங்க அதெல்லாம் வரும்... (சொல்லிவிட்டு நக்கலாக சிரிக்கிறார்)

இதை கேட்டு கவுண்டர் ஜெர்க்காகிறார்... (மனதிற்குள் நினைத்து கொள்கிறார் : உனக்கு இருக்குடி)
க: அது சரி... இந்த ஷாஜஹானு ஒரு படம் நடிச்சியே. அதுல எதுக்குடா வேற படத்து ஃப்ளாஷ் பேக்கை எடுத்து வைச்ச?

வி: இல்லைங்களே! அது அந்த படத்து ஃப்ளேஷ் பேக் தானே?
ஆனா படத்த பார்த்த எல்லாருக்குமே இப்படி ஒரு டவுட் இருந்துச்சாம். எனக்கு என்னனே இன்னைக்கு வரைக்கும் புரியல

க: அது சரி... அது என்னடா புறாவுக்கு பெல்லடிக்கிறது?

வி: அதுங்களாணா? நம்ம படையப்பால வர பாம்பு புத்துல கை விடற டயலாக்கு இக்வளா இருக்கனும்னு யோசிச்சி வெச்சதுங்கணா.

க: ஏன்டா அடுத்தவனை பார்த்து காப்பி அடிக்கறீங்க? உங்களுக்குனு ஒரு ஸ்டைல வெச்சிக்கோங்கடா. அப்ப தான் வாழ்க்கையில பெரிய ஆளாக முடியும். அப்பறம் அந்த பகவதினு ஒரு படம் நடிச்சியே. அத கதை கேட்டு தான் நடிச்சியா?

வி: அது பாட்ஷா மாதிரி இருக்கும்னு எங்க அப்பா சொன்னாரு. அதனாலதான் கதை கேக்காமலே நடிச்சேங்கணா.

க: இனிமே நான் சொல்றேன். உங்க அப்பா பேச்சை கேக்காத. அப்பறம் உன்னை யாராலும் காப்பாத்த முடியாது...

திருமணத்திற்கு முன், திருமணத்திற்குப் பின்

|

நான் மிகவும் ரசித்த மின் அஞ்சல், மிக அருமையான வார்த்தை கோர்வை

(தி.மு) திருமணத்திற்கு முன் :
(நிச்சய தார்த்தம் முடிந்தவுடன்) கீழே படியுங்கள்

அவன் :ஆமாம்,இதற்காகத்தானே நான் இத்தனை நாளாய் காத்திருந்தேன்

அவள் :நீ என்னை விட்டு விலக நினைப்பாயா ?

அவன் :இல்லை,இல்லை ,நான் கனவிலும் அதை நினைத்ததில்லை

அவள் :நீ என்னை விரும்புகிறாயா ?

அவன் :ஆமாம்,இன்றும்,என்றென்றும்

அவள் :என்னை ஏமாற்றிவிடுவாயா ?

அவன் :அதைவிட நான் இறப்பதே மேல்

அவள் :எனக்கொரு முத்தம் தருவாயா ?

அவன் :கண்டிப்பாக,அதுதானே எனக்கு மிகப் பெரிய சந்தோச தருணம்

அவள் :என்னை திட்டுவாயா ?

அவன் :ஒருபோதும் இல்லை.அப்படிச் செய்வேன் என்று நினைத்தாயா ?

அவள் : நீ என்னுடன் கடைசிவரை கைகோர்த்து வருவாயா ?

(தி.பி) திருமணத்திற்குப் பின் :

கீழிருந்து மேலே படியுங்கள்

சவப்பெட்டி ஜோக்

|

ஒரு பெண்மனியின் இறுதிச் சடங்குக்கான ஏற்பாடுகள் நடந்து கொண்டிருந்தன.. எல்லாம் முடிந்து சவப்பெட்டி வீட்டை விட்டு வெளியே கொண்டுவரப்படும் போது நிலை வாசலில் இடித்து விடவே " அம்மா" என்றொரு முனகல் சப்தம் கேட்டது. உடனே பெட்டியை இறக்கி திறந்து பார்த்தால், பெண்மனி உயிருடன் இருப்பது தெரிந்தது.

பிறகு அப்பெண்மனி 10 வருடங்கள் உயிருடன் இருந்தாள்.. பின்னர் அவள் இறந்து ஈமச் சடங்குகள் நடந்து மறுபடியும் சவப்பெட்டி வெளிக் கொணரப்படும் போது கணவன் அலறினான்..

"இந்தத் தடவையாவது இடிக்காமக் கொண்டு போங்கடா தெண்டக்காரப் பசங்களா..! "

மகிழ்ச்சி

|
உங்களுக்கு ஒரு மணி நேரம் மகிழ்ச்சி தேவை எனில் ஒரு சிறு துயில்/ உறக்கம் கொள்ளலாம் உங்களுக்கு ஒரு நாள் மகிழ்ச்சி தேவை எனில் ஒரு நாள் திறந்தவெளியல் உணவு உண்ணக்கூடிய இன்ப பயணம் மேற்கொள்ளலாம்  உங்களுக்கு ஒரு வாரம் மகிழ்ச்சி தேவை எனில் ஒரு வாரம் விடுமுறை எடுத்துக்கொண்டு சுற்றுலா சென்று வரலாம்
உங்களுக்கு ஒரு மாதம் மகிழ்ச்சி தேவை எனில் திருமணம் செய்து கொள்ளலாம்
உங்கள்ளுக்கு ஒரு வருடம் மகிழ்ச்சி தேவை எனில், உங்களது பரம்பரை சொத்தை உட்கார்ந்து செலவழிக்கலாம் ஆனால்,உங்கள்ளுக்கு எப்பொழுதும் மகிழ்ச்சி தேவை எனில், நீங்கள் செய்யும் வேலையை மகிழ்ச்சியுடன் செய்யுங்கள் / செய்ய கற்றுக்கொள்ளுங்கள்

வாழ்க வளமுடன்

தமிழ் புத்தாண்டு

|

இந்த விக்ருதி ஆண்டில் உங்கள் அனைவருக்கும் எனது தமிழ் புத்தாண்டு நல் வாழ்த்துக்கள்.

தமிழ் மாதங்கள் சித்திரை முதல் பங்குனி முடிய பன்னிரெண்டு ஆகும். உண்மையில் இவை, சூரிய மாதங்களாகும். அதாவது பூமிக்குச் சார்பாகச் சூரியனுடைய இயக்கத்தை அடிப்படையாகக் கொண்டே மாதங்கள் வகுக்கப்பட்டுள்ளன.

நாம் பயன் படுத்தும் இந்த தமிழ் ஆண்டுக்குறிப்பேடு (calendar ) மொத்தம் 60 ஆண்டு சுழற்சிகளை கொண்டது . இந்த தமிழ் வருடத்தின் பெயர் விக்ருதி. தற்பொழுது நடக்கும் 60ஆண்டு சுழற்சி 1987 ஆம் ஆண்டு துவங்கியது.

தமிழ் வருடத்தின் பெயர் மற்றும் அதற்குறிய ஆங்கில வருடத்தை அடைப்பு குறிக்குள் கொடுத்துள்ளேன்.
01. பிரபவ (1987 - 1988)
02. விபவ (1988 - 1989)
03. சுக்ல (1989 - 1990)
04. பிரமோதூத (1990 - 1991)
05. பிரசோற்பத்தி (1991 - 1992)
06. ஆங்கீரச (1992 - 1993)
07. ஸ்ரீமுக (1993 - 1994)
08. பவ (1994 - 1995)
09. யுவ (1995 - 1996)
10. தாது (1996 - 1997)
11. ஈஸ்வர (1997 - 1998)
12. வெகுதானிய (1998 - 1999)
13. பிரமாதி (1999 - 2000)
14. விக்கிரம (2000 - 2001)
15. விஷு (2001 - 2002)
16. சித்திரபானு (2002 - 2003)
17. சுபானு (2003 - 2004)
18. தாரண (2004 - 2005)
19. பார்த்திப (2005 - 2006)
20. விய (2006 - 2007)
21. சர்வசித்து (2007 - 2008)
22. சர்வதாரி (2008 - 2009)
23. விரோதி (2009 - 2010)
24. விக்ருதி (2010 - 2011)
25. கர (2011 - 2012)
26. நந்தன (2012 - 2013)
27. விஜய (2013 - 2014)
28. ஜய (2014 - 2015)
29. மன்மத (2015 - 2016)
30. துன்முகி (2016 - 2017)
31. ஹேவிளம்பி (2017 - 2018)
32. விளம்பி (2018 - 2019)
33. விகாரி (2019 - 2020)
34. சார்வரி (2020 - 2021)
35. பிலவ (2021 - 2022)
36. சுபகிருது (2022 - 2023)
37. சோபகிருது (2023 - 2024)
38. குரோதி (2024 - 2025)
39. விசுவாசுவ (2025 - 2026)
40. பரபாவ (2026 - 2027)
41. பிலவங்க (2027 - 2028)
42. கீலக (2028 - 2029)
43. சௌமிய (2029 - 2030)
44. சாதாரண (2030 - 2031)
45. விரோதகிருது (2031 - 2032)
46. பரிதாபி (2032 - 2033)
47. பிரமாதீச (2033 - 2034)
48. ஆனந்த (2034 - 2035)
49. ராட்சச (2035 - 2036)
50. நள (2036 - 2037)
51. பிங்கள (2037 - 2038)
52. காளயுக்தி (2038 - 2039)
53. சித்தார்த்தி (2039 - 2040)
54. ரௌத்திரி (2040 - 2041)
55. துன்மதி (2041 - 2042)
56. துந்துபி (2042 - 2043)
57. ருத்ரோத்காரி (2043 - 2044)
58. ரக்தாட்சி (2044 - 2045)
59. குரோதன (2045 - 2046)
60. அட்சய (2046 - 2047)

உங்கள் வாழ்வின் முக்கியமான வருடத்தின் தமிழ் வருட பெயரை தெரிந்து கொள்ளுங்கள்.படித்து, அறிந்து மகிழவும்.நன்றி: விக்கிபீடியா

SMS

|

நாம் எப்பொழுதாவது மன கஷ்டத்துடன் இருக்கும் பொழுது அதை மாற்ற நமக்கு பிடித்ததை செய்து மனம் மாற்றி கொள்ளலாம். அவ்வாற்று எனக்கு பிடித்த ஒரு சில எஸ் எம் எஸ் கீழே

1). 2011ல் ஒரு சட்டம் போடபோறங்கோ: யாரவது அழகா இருந்தா வரி கட்டனும். கடவுள் புண்ணியத்தில் நீங்க தப்பிச்சிட்டீங்க, நான்தான் மாட்டிக்கிட்டேன்

2) பரிட்சையில், கேள்வி தாள் ரொம்ப கடினமாக இருக்கா? கவலை படாதீங்க. கை வசம் ஒரு அருமையான ஐடியா இருக்கு. கண்ணை மூடி மூச்சை இழுத்துவிட்டு சத்தமா சொல்லுங்க " மாப்பு வச்சிட்டான்யா ஆப்பு"

வேலை, வேலை, வேலை

|

முன்பு ஒரு காலத்தில், ஒரு ராஜா தன்னிடம் வேலை செய்யும் குதிரை வீரனிடம் நீ எவ்வளவு தூரம் குதிரயில் செல்கிறாயோ அவ்வளவு இடத்தையும் / தூரத்தையும் அவனுக்கு தருவதாக கூறினார்

அதை கேட்ட குதுரை வீரன் உடனே குதுரையின் மீது ஏறி அமர்ந்து வேகமாக புறப்பட்டான் . அவனால் எவ்வளவு தூரம் போக முடிமோ அவ்வளவு தூரம் போனான்,
தொடர்ந்து போய் கொண்டே இருந்தான். அவனுக்கு ஆசை விடவில்லை, குதிரைக்கும் ஓய்வு கொடுக்காமல் அவனும் ஓய்வு எடுக்காமல் தொடர்ந்து போய் கொண்டு இருந்தான். ஒரு வழியாக நிறைய தூரம் கடந்த பின்பு போதும் என்று நினைத்து நின்றான்.

தற்பொழுது அவனும் குதிரையும் மிகவும் கலைத்து போய் சாகும் தருவாயில் இருந்தனர் .

இப்போ அவன் தனக்கு தானே கேட்டுக்கொண்டான், நான் ஏன் இவ்வளவு நிலத்தை ஓடி ஓடி கஷ்டப்பட்டு பிடித்தேன்?
தற்பொழுது நானோ இறக்கும் தருவாயில் உள்ளேன். எனக்கு தேவையோ இந்த உடலை அடக்கம் செய்ய சிறிய இடம் தான்.


இந்த கதை போலதாங்க நம்முடைய வாழ்கையும்

ஒவ்வொரு நாளும் பணத்திற்காகவும், வேலை செய்யும் இடத்தில் அதிகாரம் மற்றும் அங்கிகாரதிர்காகவும்

நாம் நமது உடல், மற்றும் குடும்பத்துடன் செலவு செய்யும் நேரம் மற்றும் நமக்கு பிடித்தவற்றிக்கு முக்கியத்துவம் கொடுப்பதில்லை
ஒருநாள் நாம் நம் வாழ்கயை திரும்பி பார்க்கையில் நமக்கு, இவ்வளவுஅதிகம் தேவை இல்லை என புரியம்.

ஆனால் நமக்கு நாம் இழந்த நமது உடல் ஆரோக்கியம் , நமது குடும்பத்தாரின் நெருக்கம் எதையும் திரும்ப பெற இயலாது.

ஆகவே நன்றாக புரிந்துகொள்ளுங்கள், வாழ்கை என்பது அளவுக்கு அதிகமாக பணம் சம்பாதிப்பது, வேலை செய்யும் இடத்தில் அதிகாரம் மற்றும் அங்கீகாரமோ அல்லது எப்பொழுதும் வேலை செய்வது, பணம் சம்பாதிப்பது அல்ல.


பணம் சம்பாதிப்பது , வேலை செய்வது எல்லாம் நம் வாழ்க்யை சந்தோஷமாக குடும்பத்துடனும், நண்பர்களுடனும் மகிழ்ச்சியுடன் வாழ்வதற்கே.

வாழ்க வளமுடன்

Related Posts Plugin for WordPress, Blogger...

தலைப்புகள்

anicent tamil (4) Blog Tips (2) Computer (4) ILUSION (1) information (1) LPG சிலிண்டர் (1) safety (1) Short Cut Key (2) SMS (1) tamil (14) tamil friendship poem (2) tamil joke (7) tamil kathai (5) tamil story (6) tamil year (1) Welding Symbol (1) அபூர்வ தகவல் (1) ஆரோக்கியம் (12) ஆவணங்கள் (7) இயற்கை (3) எச்சரிக்கை (3) கணணி பராமரிப்பு (1) கதை (21) கம்ப்யூட்டர்வேலை (1) கலைஞர் (1) கவிதை (11) சாப்ட்வேர் மாப்பிள்ளை (1) சிந்தனை (2) செய்தி (10) தமிழர் பண்பாடு (5) தமிழ் (14) தமிழ் அளவை (2) தமிழ் அளவைகள் (1) தமிழ் ஆண்டுகள் (2) தமிழ் எண்கள் (1) தமிழ் எழுத்து (2) தமிழ் காலம் (2) தமிழ் பாட்டு (2) தமிழ் மருத்துவம் (6) தமிழ்நாடு அரசு பாடப் புத்தகங்கள் (1) தன்னம்பிக்கை (1) தீபம் (1) துணுக்கு (16) தெரிந்துகொள்வோம் (4) நகைச்சுவை (31) நகைச்ச்சுவை (4) நகைச்ச்சுவைகடிதம் (1) நட்பு (3) நட்பு கவிதை (2) படம் (1) படித்ததில் பிடித்தது (53) பணம் (1) பரோட்டா (1) பழம்தமிழர் (1) பாதுகாப்பு (2) பிரபலமானவர்களின் (3) பெண்பார்க்கும் படலம் (1) பெற்றோர் (1) பொங்கல் (1) பொழுதுபோக்கு (27) மகிழ்ச்சி (3) மாங்கல்யம் (1) மாய தோற்றம் (1) வரலாற்று நிகழ்வு (1) வலைப்பூ (1) வழி காட்டி (9) வழிகாட்டி (28) வாழ்கை (13) வாழ்க்கை (8) வாழ்த்துகள் (13) விவசாயம் (2) விவசாயி (1) வேலை (3)
 

©2009 அறிவு களஞ்சியம் | Template Blue by TNB