திருக்குறள்

தேடல்

திருஷ்டி கயிறு

|

வீட்டு வாசலில் தொங்கிக்கொண்டுஇருப்பது திருஷ்டி கயிறு அல்ல. நம் உயிரை காக்கும்அது முதலுதவி பெட்டகம்.

நம் வீட்டுவாசலில் கருப்பு கயிற்றில் படிகாரம்.எலுமிச்ச்சைபழம்.மிளகாய்.மிளகு.ஈச்சமுள் மற்றும் மஞ்சள்,தேங்காய் உள்ளிட்ட பொருட்கள் கயிற்றில் கட்டி தொங்கவிடப்பட்டுஇருக்கும். கண் திருஷ்டிக்காக என நாம் நினைத்துக்கொண்டு இருக்கிறோம் ஆனால் அது நம்முடைய உயிரைகாக்கதான் தொங்கிக்கொண்டு இருக்கிறது. எப்படியென்றால்....
 
மின் வசதியில்லாத காலங்களில் நம் வீடுகளீல் இரவில பொருட்களை தேடுவது மிகுந்த சிரமாம இருந்திருக்கும். இரவில் நம்முடைய முன்னோர்கள் வெளியில் சென்று வரும்போது அக்காலத்தில் தெருக்களிலும் மின்சாரம் இருக்காது,,அப்பொழுது ஏதேனும் பூச்சியோஅல்லது பாம்பு மற்ற ஏதேனும் விசபூச்சிகள் கடித்துவிட்டால் என்ன செய்வது.அந்த சூழ்நிலையில் நம்முடைய பதட்டம் அதிகரிக்கும்,முதல் உதவி மிக முக்கியம் அல்லவா?
அதற்காகதான் இந்த பொருட்கள் அடங்கிய பெட்டகத்தை நம் வீட்டுவாசலில் தொங்கவிட்டு இருப்பார்கள்.

கைகளிலோ அல்லது காலிலோ கடிப்பட்டு இருந்தால் விசம் மேலும் பரவாமல் இருக்க  கயிற்றால் கட்டிவிடுவதால் விசம் பரவுவதை தடுக்கலாம்.

கடித்த இடத்தில் எரிச்சல் இருந்தால் படிகாரத்தை தேய்த்துவிடுவதால் எரிச்சல்குறையும்,

விசக்கடியாக இருந்தால் மிளகாய் அல்லது மிளகு கடித்தால் காரம் இல்லையென்றால் கடுமையான விசக்கடி என்றும் காரம் இருந்தால் பூச்சிக்கடி என்றும் தெரிந்துகொள்வார்கள்.

 கடித்ததால் ஏற்படும் களைப்பை போக்க எலுமிச்சை பழத்தை பிழிந்துகொடுப்பார்கள். எந்தமாதிரியான விசக்கடி என்பதை அறிய ஈச்சமுள்ளால் அந்த இடத்தை கீரிபார்த்து தெரிந்துகொள்வார்கள்.

எட்டுகால் பூச்சி போன்றவை கடித்தால் தேங்காய் தண்ணிரும் தேங்காய்கீத்தையும் தின்றால் உடனடி விசமுறிவு ஏற்படும்

சாதாரண ரத்தகட்டி வீக்கமாக இருந்தால் மஞ்சள் தடவி விடுவார்கள்.
 
இதுதான் நம் முன்னோர்களின் முதலுதவி பெட்டகம்.நம் முன்னோர்கள் முட்டாள்கள் அல்ல. தொங்கிக்கொண்டு இருப்பது மூடநம்ம்பிக்கை சின்னம் அல்ல. முதலுதவி பெட்டகம்.
படித்து பகிரவும்.

பாய் விரித்து உறங்குவதால் ...

|

பாய் விரித்து உறங்குவதால் கிடைக்கும் நன்மைகள் - தெரிந்துகொள்வோம்
1.பொதுவாக பாய் தரையில் விரிப்பதால்...நாம் தரையில் உறங்குவதே ஒரு சிறந்த "யோகாசனம்"
2.பிறந்த குழந்தைகளை பாயில் உறங்க வைப்பதால் அதன் முதுகு எழும்பு நேர்படுத்தப்படுகிறது, குழந்தைகளுக்கு இளம் வயது கூண் முதுகு விழுவதை தடுக்கிறது, [கல்வி கற்க்கும் மாணவ மாணவிகளுக்கு இளம் வயது முதுகு வலி வராமலும் தடுக்கும்,]

3.கர்ப்பினி பெண்கள் பாயில் உறங்குவது சுக பிரசவத்திற்கு உதவிடும், [பாயில் படுக்கையில் பெண்களுக்கு இடுப்பு எழும்பு விரிகிறது, இடுப்பு எழும்பு விரிந்தாலே ஆப்பரேசன் இல்லாத சுக பிரசவம்தான்]
4.மூட்டு வலி, முதுகு வலி, தோள்பட்டை தசை பிடிப்பு போன்ற பிரச்சினை உள்ளவருக்கு பாயில் உறங்குவதே ஒரு சிறந்த தீர்வு,
5.பாயில் இரு கால் விரித்து மல்லாக்க படுக்கையில் உடலின் எங்கும் இரத்த ஓட்டம் சீராக பாய்ந்து ஞாபக சக்தியை தருகிறது, [பாயில் தலையணி இல்லாமல் உறங்குவதே சிறந்தது,]
6.ஆண்கள் பாயில் படுக்கையில் அவர்களின் மார்பகம் தசை தளர்ந்து விரியும்,
7.பாய் உடல் சூட்டை உள் வாங்கக்கூடியது,
8.பெரியோர்கள் சீர்வரிசை கொடுக்கையில் பாய் இல்லா ஒரு சீர்வரிசை கிடையாது,
9.ஒரு பாய் மூன்று ஆண்டுகள் வரை அதன் தன்மையை இழக்காது,
10.கட்டிலில் விரித்து உறங்கும் பஞ்சு மெத்தையை விட வெறும் தரையில் பாய் விரித்து உறங்குவதால்...
உடல் உஷ்ணம்,வதையும்...
உடலின் வளர்ச்சி,யும்...
ஞாபக சக்தி,யையும்...
மன அமைதி,யும்...
நீண்ட உடல்/மன ஆரோக்கியத்தையும் தருகிறது,
மேலே சொன்னவை கோரப்பாய்க்கு உகந்தவை. பிளாஸ்டிக் பாய்க்கு அல்ல.

மழை பெய்வதை யார் யார் எப்படி சொல்வார்கள் ?

|

மழை பெய்வதை யார் யார் எப்படி சொல்வார்கள்:

இரும்பு வியாபாரி - கனமா பெய்யுது

கரும்பு வியாபாரி - சக்கைப் போடு போடுது....

சலவைக்காரர் - வெளுத்துக்கட்டுதுங்க ...

நர்ஸ் - நார்மலாதான் பெய்யுது.

பஞ்சு வியாபாரி - லேசா பெய்யுது.


போலீஸ்காரர் - மாமூலா பெய்யுது.


வேலைக்காரி - பிசு பிசுன்னு பெய்யுது.


ஜூஸ் கடைக்கார் - புழிஞ்சி எடுக்குது.


டீ கடைக்காரர் - ஆத்து ஆத்துன்னு ஆத்துது.


டாஸ்மாக் கடைக்காரர் - சும்மா கும்முன்னு பெய்யுது 


கோவில் பூசாரி - திவ்யமா பெய்யுது 


செருப்பு கடைக்காரர் - செம்ம அடி அடிக்கிது 


மசாஜ் பார்லர்க்காரர்- சும்மா புடிபுடின்னு புடிக்குது,


பேண்ட் வாத்தியக்காரர்- கொட்டோகொட்டுன்னு கொட்டுது


WIFE- செம அடி அடிக்குது.


*HUSBAND - வாங்கு வாங்குன்னுவாங்குது

டேவிட் ஒகில்வியின் ...

|

படித்ததில் பிடித்தது : அமெரிக்க கோடீஸ்வரரான டேவிட் ஒகில்வியின் சுயசரிதை-அதிலிருந்து சில துளிகள்
 
பாடுபட்டு உழைப்பவர்களை, வியந்து பாராட்டுகிறேன். துடுப்புப் போடாமல் படகிலே உட்கார்ந்து பயணம் செய்வோரை, எனக்குப் பிடிக்காது.
 
உள்ளதற்கும் குறைவாக வேலை செய்வதைக் காட்டிலும், உள்ளதற்கும் அதிகப்படியாக வேலை செய்வதுதான் உற்சாகம். ...

அதிகமாக உழைக்க உழைக்க வேலையாட்களின் எண்ணிக்கை குறையும்; எனவே, லாபம் அதிகமாக இருக்கும். அதிகமாக லாபம் கிடைத்தால், அனைவரும் அதிகமாக பகிர்ந்து கொள்ளலாம்.

முதல்தர மூளை உள்ளவர்களை போற்றுகிறேன்; மூளையில்லாதவர்களைக் கொண்டு, ஒரு பெரிய நிறுவனத்தை நடத்த முடியாது. ஆனால், வெறும் மூளை மட்டும் போதாது; அறிவிலே நேர்மையும் இணைய வேண்டும்.

உறவுக்காரர்களை வேலைக்கு அமர்த்துவது எனக்குப் பிடிக்காது; அதில், வீண் வம்புகள் பெருகும்.

மேலதிகாரியை காக்காய்ப் பிடிக்கிறவர் களை வெறுக்கிறேன்; ஏனெனில், இந்தப் பேர்வழிகள், தங்களின் கீழே வேலை செய்வோரை சதா கொத்திப் பிடுங்கிக் கொண்டு இருப்பர்.

தனக்குப் பின், பதவியை ஏற்கக் கூடிய தகுதியுள்ளவர்களாக கீழே உள்ளவர்களை உருவாக்குகிறவர்களை போற்றுகிறேன்.

மட்டமானவர்களை தன் கீழே அமர்த்திக் கொண்டால் தான், தாங்கள் பத்திரமாக இருக்க முடியும் என்று நினைக்கும் நபர்களை கண்டு பரிதாபப்படுகிறேன்.

மற்றவர்களையும் மனிதனாகக் கருதி, மென்மையாக நடந்து கொள்கிறவர்களை போற்றுகிறேன்; சண்டைக்காரப் பேர்வழிகளை வெறுத்து ஒதுக்குகிறேன்.

சமாதானமாக வாழ்வதற்குச் சிறந்த வழி, ஒளிவு, மறைவு இல்லாமல் இருப்பது தான்.

சொர்கமும்... நரகமும்...

|

வயல்வெளி பார்த்து...
வறட்டி தட்டி......
ஓணாண் பிடித்து...
ஓடையில் குளித்து...
எதிர்வீட்டில் விளையாடி...
எப்படியோ படித்த நான்,
ஏறிவந்தேன் நகரத்துக்கு!


சிறு அறையில் குறுகிப் படுத்து...
சில மாதம் போர்தொடுத்து...
வாங்கிவிட்ட வேலையோடு...
வாழுகிறேன் கணிப்பொறியோடு!

சிறிதாய்த் தூங்கி...
கனவு தொலைத்து...
காலை உணவு மறந்து...
நெரிசலில் சிக்கி...
கடமை அழைக்க...
காற்றோடு செல்கிறேன்,
காசு பார்க்க!

மனசு தொட்டு...
வாழும் வாழ்க்கை,
மாறிப் போகுமோ?

மௌசு தொட்டு...
வாழும் வாழ்க்கை,
பழகிப் போகுமோ?

வால்பேப்பர் மாற்றியே,
வாழ்க்கை தொலைந்து போகுமோ?
சொந்த பந்த,
உறவுகளெல்லாம்,
ஜிப் (Zip) பைலாய்
சுருங்கிப் போகுமோ?

வாழ்க்கை
தொலைந்து போகுமோ
மொத்தமும்!
புரியாது
புலம்புகிறேன்
நித்தமும்!

தாய் மடியில் தலைவைத்து
நிலவு முகம் நான் ரசித்து
கதைகள் பேசி
கவலைகள் மறந்த காலம்
இனிதான் வருமா?

இதயம் நனைத்த
இந்த வாழ்வு
இளைய தலைமுறைக்காவது
இனி கிடைக்குமா?

சொந்த மண்ணில்
சொந்தங்களோடு
சோறு திண்பவன்
யாரடா?
அவனே,
சொர்க்கம் கண்டவனடா!

படித்ததில் பிடித்தது

மதுப் பழக்கத்திற்கு அடிமையா ?

|

புத்தகம் ஒன்றில் படித்தது
 
நீங்கள் மதுப் பழக்கத்திற்கு அடிமையா, இல்லையா என்பதை தெரிந்து கொள்ள, கீழ்க்கண்ட கேள்விகளுக்கு உண்மையான பதில் அளியுங்கள்:
1. உங்களது குடிப்பழக்கத்தால், குடும்ப வாழ்க்கை மகிழ்ச்சியிழந்து விட்டதா?
 
2. உங்கள் பணி நேரம் குறைந்து விட்டதா?
 
3. குடிப்பழக்கம், உங்கள் பெயர், புகழுக்கு களங்கம் ஏற்படுத்தி உள்ளதா?
 
4. குடிப் பழக்கத்தால், பணக் கஷ்டம் ஏற்பட்டுள்ளனவா?
 
5. மோசமான சுற்றுச் சூழலில், உங்களைவிட தகுதி குறைந்த நபர்களோடு சேர்ந்து குடிக்கும் அளவிற்கு மாறி விட்டீர்களா?
 
6. குடிப்பதால், குடும்ப நலனை கவனிக்க, பராமரிக்க முடியவில்லையா?
 
7. கவலைகள், பிரச்னைகளிலிருந்து தப்பிப்பதற்காக குடிக்கிறீர்களா?
 
8. தினமும் ஒரு குறிப்பிட்ட நேரத்தில் குடிக்க வேண்டும் என்ற தூண்டுதல் ஏற்படுகிறதா?
 
9. குடிப்பழக்கம் காரணமாக, தூங்குவதில் சிரமம் உள்ளதா?
 
10. குடிப் பழக்கத்தால் உங்கள் திறமைகளும், லட்சியங்களும், ஆர்வங்களும் குறைந்து வருகிறதா?
 
இந்த, 10 கேள்விகளில், ஒரேயொரு கேள்விக்கு மட்டும், 'ஆம்' என்று, நீங்கள் பதிலளித்தால், நீங்கள் குடிப் பழக்கத்திற்கு அடிமையாகி இருக்கலாம் அல்லது மிக விரைவில் அடிமையாகி விடுவீர்கள்.
 
இரண்டு கேள்விக்கு, 'ஆம்' என்ற பதிலளித்தால், நீங்கள் குடிப்பழக்கத்திற்கு அடிமை.
 
மூன்று அல்லது அதற்கு மேற்பட்ட கேள்விகளுக்கு, 'ஆம்' என்று பதிலளித்தால், எவ்வித சந்தேகமும் இன்றி, நிச்சயமாக நீங்கள் குடிப்பழக்க அடிமை தான்.
 
இந்த, 10 கேள்விகளில் எந்தக் கேள்வியும் உங்களுக்கு பொருந்தவில்லை எனில், நீங்கள் குடிப்பழக்கத்திற்கு அடிமையில்லை; ஆனால், அடிமையாகி விடாமல், உங்களைத் தற்காத்துக் கொள்ளுங்கள்.
 
 

அஷ்டமி, நவமி .....

|

து நெட்டில் படித்தது
சென்ற வாரம் நான் என் சகோதரி வீட்டிற்கு சென்றிருந்தேன். அங்கு உணவருந்தி ஓய்வெடுத்த பின் அவர்கள் நீண்ட நாட்களாக ஒரு வீட்டுமனை வாங்க வேண்டும் எனக் கூறி வந்ததை நினைவுபடுத்தினேன்.
 
எனக்குத் தெரிந்த ஒருவர் நல்ல இடத்தில் ஒரு வீட்டுமனை இருப்பதாகவும் விலையும் சற்று சகாயமாகவுள்ளதாகவும் கூறினார்.  அதைப் போய் இன்று பார்த்துவிட்டு வரலாம் என்று கூறினேன்.
 
உடனே என் சகோதரி இன்று வேண்டாம் அண்ணே என்றாள்.
 
நான் ஏன்? இன்று விட்டால் மனை கிடைக்காமல் போகலாம் வேகமாக விற்று வருவதாகக் கேள்விப் பட்டேன். இன்று ஏன் வேண்டாம் என்கிறாய்? எனச் சகோதரியைக் கேட்டேன்.
 
அவள் இன்று அஷ்டமி, நாளை நவமி என்றாள். ஆகையால் நாளை மறுநாள் போய் பார்க்கலாம் என்று சொன்னாள்.
 
நான் அஷ்டமி, நவமி என்றால் என்ன? ஏன் கூடாது என்பதற்குக் காரணம் என்ன? என்று கேட்டேன்.
 
அதற்கு என் சகோதரி எனக்கு விளக்கம் தெரியாது அண்ணே, ஆனால் எல்லோரும் அவை நல்ல நாட்கள் இல்லை என்பதால் நானும் கூறினேன் என்று கூறினார்.
 
நான் சிரித்துக் கொண்டே அஷ்டமி, நவமியில் நீங்கள் சாப்பிடுவதில்லையா? ரயில், பஸ், விமானம் ஆகியவை ஓடுவதில்லையா? மருத்துவமனை, வங்கிகள் மற்றும் அலுவலகங்கள் செயல்படுவதில்லையா? அவசர அறுவை சிகிச்சையைத் தவிர்க்கிறோமா? என்று கேட் டேன்.
 
அதற்கு என் சகோதரி போங்க அண்ணா நீங்க எப்போதும் இப்படித் தான் எடக்கு முடக்காகப் பேசுவீர்கள் என்று கேலி செய்தார். நான் இல்லையம்மா இதற்கு விளக்கம் கூறுகிறேன். நாம் ஓரளவு படித்தவர்கள் எதையும் அறிவுப்பூர்வமாகசிந்தித்துத் தெரிந்து கொள்ள வேண்டாமா? என்று கேட்டேன். மைத்துனரும், என் சகோதரியும் நீங்கள்தான் விளக்குங்களேன் என்றார்கள்.
 
நான் பின்வரும் விளக்கத்தைக் கூறினேன்.
 
ஒரு மாதத்திற்கு அமாவாசை, ஒரு பவுர்ணமி வரும். அந்த இரு நிகழ்ச்சிகளும் பூமி மற்றும் சந்திரனின் சுழற்சியால் ஏற்படுவதை நீங்கள் அறிவீர்கள். நாட்களைச் சுட்டிக்காட்ட அமாவாசையிலிருந்து அல்லது பவுர்ணமியிலிருந்து எத்தனையாவது நாள் என்று குறிப்பிட்டுக் காட்டவே பிரதமை முதல் சதுர்த்தசி வரை 14 நாட்களுக்கும் பெயரிட்டிருக்கிறார்கள். பெயர் தமிழில் வைத்திருந்தால் விளங்கும். சமஸ்கிருதம் ஆதிக்கத்தில் இருந்தபோது தமிழ் வருடங்களின் பெயரை கூட பொருள் தெரியாத வடமொழியில் அல்லவா வைத்து விட்டார்கள்? நாமும் அதை மாற்ற மனமின்றி வைத்துக் கொண்டு திண்டாடுகிறோம்.
 
அதே போல் தான் நாட்களின் பெயர்களும் பின்வருமாறு வடமொழியில் உள்ளன என்று விளக்கினேன்.
 
1. பவுர்ணமி, அமாவசைக்கு அடுத்த நாள் பிரதமை பிரதமை என்றால் முதல்வர் என்று பொருள். அதுபோல் பிரதமை என்றால் முதல் நாள்.
 
2. துவிதை என்றால் இரண்டாம் நாள் தோ என்றால் இரண்டு. துவிச் சக்ர வண்டி என்று சைக்கிளைக் கூறுவது தங்களுக்கு தெரியும்.
 
3. திரிதியை என்றால் மூன்றாம் நாள் திரி என்றால் மூன்று அல்லவா?
 
4. சதுர்த்தி என்றால் நான்காம் நாள் சதுரம் நான்கு பக்கங்கள் கொண் டது.
 
5. பஞ்சமி என்றால் அய்ந்தாம் நாள் பாஞ்ச் என்றால் அய்ந்து எனப் பொருள்.
 
6. சஷ்டி என்றால் ஆறாம் நாள்.
 
7. சப்தமி என்றால் ஏழாம் நாள். சப்த ஸ்வரங்கள் என ஏழு ஸ்வரங்களைக் கூறுவதில்லையா?
 
8. அஷ்டமி என்றால் எட்டாம் நாள். அஷ்டவக்கிரம் என்று எட்டு கோணல்களைக் கூறுவதையும் அஷ்ட லட்சுமி என்றெல்லாம் கூறக் கேட்டிருக்கிறோம்.
 
9. நவமி என்றால் ஒன்பதாம் நாள் நவ என்றால் ஒன்பது என்றும் நவ கிரகங்கள் என்பதும் தங்களுக்குத் தெரியும்.
 
10. தசமி என்றால் பத்தாம் நாள் தஸ் என்றால் பத்து அல்லவா? தாரம் என்ற கடவுளின் அவதாரங்களைக் கூறக் கேட்டிருக்கிறோம்.
 
11. ஏகாதசி என்றால் பதினொன் றாம் நாள் ஏக் என்றால் ஒன்று தஸ் என்றால் பத்து இரண்டின் கூட்டுத் தொகை பதினொன்று.
 
12. துவாதசி என்றால் பன்னிரண் டாம் நாள் தோ/துவி என்றால் இரண்டு தஸ் என்றால் பத்து எனவே இதன் கூட்டுத்தொகை பன்னிரண்டு ஆகும்.
 
13. திரியோதசி என்றால் பதிமூன் றாம் நாள் திரி என்றால் மூன்று + தஸ் என்றால் பத்து ஆகப் பதிமூன்று.
 
14. சதுர்த்தசி என்றால் பதினான்காம் நாள் சதுர் (சதுரம்) என்றால் நான்கு அத்தோடு தஸ் என்ற பத்து சேர்த்தால் பதினான்கு என ஆகும்.
 
சதுர்த்தசிக்கும் அடுத்தது பவுர்ணமி அல்லது அமாவாசை ஆகி விடும். இப்படி நாட்களைக் சுட்டிக் காட்ட வைத்த பெயர்களில் என்ன வேறுபாடு இருக்கிறது?
 
அமாவாசை அல்லது பவுர்ணமிக்குப் பிறகு வரும் எட்டாம் நாளும் ஒன்பதாம் நாளும் கெட்டவை என்பதற்கு ஏதேனும் அறிவியல் பூர்வமான விளக்கம் இருந்தால் கூறுங்கள் என்றேன். சகோதரியும் மைத்துனரும் வாயடைத்துப் போயினர்.
 
இந்த விளக்கம் கண்டு அவர்கள் மிகத் தெளிவு பெற்றனர்.

அன்பு மகனுக்கு அப்பா எழுதுவது...

|

எழுதியவர் யார் என தெரியாது. படித்ததில் கலங்கியது,

*அன்பு மகனுக்கு அப்பா எழுதுவது*

வசதியாகத்தான்
இருக்கிறது மகனே…
நீ...
கொண்டு வந்து சேர்த்த முதியோர் இல்லம்
பொறுப்பாய் என்னை ஒப்படைத்து விட்டு
வெளியேறிய போது,
முன்பு நானும்
இது போல் உன்னை வகுப்பறையில்
விட்டு விட்டு என் முதுகுக்குப்
பின்னால்
நீ கதறக் கதறக்

கண்ணீரை மறைத்தபடி
புறப்பட்ட காட்சி
ஞாபகத்தில்
எழுகிறது!


முதல் தரமிக்க
இந்த இல்லத்தை
தேடித் திரிந்து
நீ தேர்ந்தெடுத்ததை
அறிகையில்கூட
அன்று உனக்காக
நானும்
பொருத்தமான பள்ளி
எதுவென்றே
ஓடி அலைந்ததை
ஒப்பீடு செய்கிறேன்!

இதுவரையில்
ஒருமுறையேனும்
என் முகம் பார்க்க
நீ வராமல் போனாலும்
என் பராமரிப்பிற்கான
மாதத் தொகையை மறக்காமல்
அனுப்பி வைப்பதற்க
மனம்
மகிழ்ச்சியடைகிறது
நீ விடுதியில்
தங்கிப் படித்த காலத்தில்
உன்னைப் பார்க்க
வேண்டும் என்ற
ஆவல் இருந்தாலும்
படிப்பை நினைத்து
உன்னை சந்திக்க
மறுத்ததன்
எதிர்வினையே இது
இப்போது அறிகிறேன்

இளம் வயதினில்
நீ சிறுகச் சிறுக
சேமித்த
அனுபவத்தை
என் முதுமைப் பருவத்தில்
மொத்தமாக எனக்கே
செலவு செய்கிறாய்
ஆயினும்…
உனக்கும் எனக்கும்
ஒரு சிறு வேறுபாடு
நான்
கற்றுக்கொடுத்தேன்
உனக்கு…
வாழ்க்கை இதுதான் என
நீ கற்றுக் கொடுக்கிறாய்
எனக்கு…
உறவுகள் இதுதானென்று!

இந்தக் கவிதையைப்
படித்ததும் கண்கள்
குளமாகின்றது.
தாய் தந்தை மீது பாசம்
உள்ள
ஒவ்வொருவரும்
பகிர வேண்டிய
பதிவு இது...

எழுதியவர் யார் என தெரியாது.
படித்ததில் கலங்கியது, வாசித்தவுடன் பதிவிடுகிறேன்.

என்ன பிரச்சனை உனக்கு??

|

ஒரு லேடீஸ் கிளப் கூட்டதில் வந்திருந்த நடுவர் அங்கிருந்த பெண்களை நோக்கி, " நீங்கள் உங்கள் கணவரிடம் எப்பொழுது கடைசியாக "I LOVE YOU" என்று சொன்னீர்கள் என்று கேட்டார்.
 
ஒரு பெண்... இன்று என்று கூறினாள்
 
அடுத்த பெண் .. இரண்டு நாட்கள் முன் என்று கூறினாள்
 
ஒரு சிலர் .. ஒரு வாரம் முன்பு என்று கூறினார்கள்.
 
நடுவர் : " நீங்கள் அனைவரும் அவரவர் கணவருக்கு "I LOVE YOU" என்று மெசேஜ் அனுப்புங்கள் இப்பொழுது, யாருக்கு வியப்பான பதில் வருகிறதோ அவர்களுக்கு ஒரு சிறந்த பரிசு காத்திருகிறது" என்றார்.
 
ஒவ்வொருவரும் அவரவர் கணவருக்கு மெசேஜ் அனுப்பத் தொடங்கினார்கள். மெசேஜ்க்கு வந்த பதில்கள்
 
நபர் 1 : அன்பே.... உனக்கு உடம்புக்கு ஒன்னும் பிரச்சனை இல்லையே ??
 
நபர் 2 : இன்னைக்கு நீ சாப்பாடு செய்யலியா??
 
நபர் 3 : நான் குடும்ப செலவுக்கு குடுத்த பணம் தீர்ந்து விட்டதா??
 
நபர் 4 : என்ன பிரச்சனை உனக்கு??
 
நபர் 5 : நீ கனவு கண்டுட்டு இருக்கியா இல்லை நான் கனவு காண்கிறேனா??
 
நபர் 6 : இன்னைக்கு போன கல்யாணத்துல உன் பிரண்டு போட்ட நகை டிசைன் எதாவது உனக்கு ரொம்ப பிடிச்சு, வாங்க பிளான் போட்டுருக்கியா ??
 
நபர் 7 : நான் ஏற்கனவே ஆபிசில் பல டென்சன்ல இருக்கேன், இதுல நீ வேற..
 
நபர் 8 : என் காரை எடுத்துட்டு போய் மறுபடியும் எங்கயாவது முட்ட வச்சுட்டியா??
 
நபர் 9 : இந்த சீரியல்கள் பார்க்கதேன்னு எத்தனை தடவை சொல்லி இருக்கிறேன் உன்கிட்ட??
 
நபர் 10 : குழந்தைகளை பள்ளிக் கூடத்திலிருந்து கூட்டிட்டு வரணுமா???
 
கடைசியாக பரிசு பெற்ற பெண்ணுக்கு வந்த பதில் மெசேஜ்..
*
*
*
நபர் 11 : யார் இது... என் பொண்டாட்டி மொபைல்ல இருந்து எனக்கு மெசேஜ் அனுப்பறது??
 

ஏழு விஷயங்கள்

|


நம்மை உயர்த்தும் ஏழு விஷயங்கள்
1) ஏழ்மையிலும் நேர்மை
2) கோபத்திலும் பொறுமை
3) தோல்வியிலும் விடாமுயற்சி
4) வறுமையிலும் உதவிசெய்யும் மனம்
5) துன்பத்திலும் துணிவு
6) செலவத்திலும் எளிமை
7) பதவியிலும் பணிவுவழிகாட்டும் ஏழு விஷயங்கள்
1) சிந்தித்து பேசவேண்டும்
2) உண்மையே பேசவேண்டும்
3) அன்பாக பேசவேண்டும்.
4) மெதுவாக பேசவேண்டும்
5) சமயம் அறிந்து பேசவேண்டும்
6) இனிமையாக பேசவேண்டும்
7) பேசாதிருக்க பழகவேண்டும்
நல்வாழ்வுக்கான ஏழு விஷயங்கள்
1) மகிழ்ச்சியாக இருக்க பழகுங்கள்
2) பரிசுத்தமாக சிரிக்ககற்று கொள்ளுங்கள்
3) பிறருக்கு உதவுங்கள்
4) யாரையும் வெறுக்காதீர்கள்
5) சுறுசுறுப்பாக இருங்கள்
6) தினமும் உற்சாகமாக வரவேற்கத்தயாராகுங்கள்
7) மகிழ்ச்சியாக இருக்க முயற்ச்சி மேற்கொள்ளுங்கள்

கவனிக்க ஏழு விஷயங்கள்
1) கவனி உன் வார்த்தைகளை
2) கவனி உன் செயல்களை
3) கவனி உன் எண்ணங்களை
4) கவனி உன் நடத்தையை
5) கவனி உன் இதயத்தை
6) கவனி உன் முதுகை
7) கவனி உன் வாழ்க்கையை
அரைஞாண் கயிறு ..

|


ஆண்கள் இடுப்பில் அரைஞாண் கயிறு ..

அரைஞாண் நாம் சின்ன வயதில் நம் பெற்றோர் வற்புறுத்தி இடுப்பில் கட்டிவிடும் ஒரு கருப்பு கயிறு. எதற்கு இதை நான் அணிந்து கொள்ள வேண்டும் என்று கேட்டால், திருஷ்டி படகூடாதுன்னு கட்டிவிடுறோம்னு சொல்லுவாங்க.

உண்மையிலேயே இதுக்கு தான் இந்த கருப்பு கயிற்றை கட்டுகிறோமா?நிச்சயமாக இல்லை அந்த அரைஞாண் கயிற்றின் ரகசியத்தை நம் முன்னோர்கள் கண்டுபிடித்த ஒரு மருத்துவ ரகசியமே அடங்கியுள்ளது அந்த ரகசியம்.
 
ஆண்கள் இடுப்பில் கட்டுகிற அரைஞாண் கயிறு ஒரு நோய் தடுப்பு முறை ...என்பது இன்று பலருக்குத் தெரியாது. ஆண்களுக்குப் பொதுவாக குடல் இறக்க நோய் வருவதுண்டு. அந்நோயைத் தடுக்கவே இடுப்பில் அரைஞாண் கயிறு முன்பெல்லாம் கட்டுகிற பழக்கம் தமிழர்களிடையே இருந்தது. பிறகு அக்கயிறு வெள்ளிக்கொடியாக மாறியது.

இன்றைக்கு அநாகரீகம் எனக் கருதி அரைஞாண் கயிறும் கட்டுவதும் குறைந்து விட்டது. உடல் பெருத்தலின் ஒரு அதிகபட்ச தீமை 'குடல் இறக்க நோய்' ஆங்கிலத்தில் ஹெரணியா என்பார்கள். இது தொண்ணூறு சதவீதம் ஆண்களுக்குத் தான் வரும் என ஆய்வுக் குறிப்புகள் சொல்கின்றன. இதை தடுக்கத்தான் நம் முன்னோர்கள் இடுப்பில் அரைஞாண் கயிறு கட்ட அறிவுறுத்தினார்கள்.

இப்போது வெள்ளி, தங்கத்தில் அறுணாக் கொடி கட்டுகிறார்கள் தான். அது பகட்டுக்கு. சில விசயங்கள் நாகரீக மாற்றங்களுக்குட்பட்டு மாறிவிட்டாலும் இன்றும் கறுப்புக் கயிற்றில் முத்து மணிகள் சில கோர்த்து அறுணாக் கொடி கட்டத்தான் செய்கிறார்கள்.நம் முன்னோர்கள் பாரம்பரியத்தை நம் பிள்ளைகளுக்கு ஆதாரத்தோடு கற்பிப்போம்.

புத்தாண்டு வாழ்த்துக்கள் - 2017

|

அன்புள்ள வாசகர்களுக்கு,

தங்களுக்கும் தங்களது குடும்பத்தினருக்கும் இனிய புத்தாண்டு நல் வாழ்த்துக்கள்

அறிவுமதி மற்றும் நிலாமகள்

Related Posts Plugin for WordPress, Blogger...

தலைப்புகள்

anicent tamil (4) Blog Tips (2) Computer (4) ILUSION (1) information (1) LPG சிலிண்டர் (1) safety (1) Short Cut Key (2) SMS (1) tamil (14) tamil friendship poem (2) tamil joke (7) tamil kathai (5) tamil story (6) tamil year (1) Welding Symbol (1) அபூர்வ தகவல் (1) ஆரோக்கியம் (12) ஆவணங்கள் (7) இயற்கை (3) எச்சரிக்கை (3) கணணி பராமரிப்பு (1) கதை (21) கம்ப்யூட்டர்வேலை (1) கலைஞர் (1) கவிதை (11) சாப்ட்வேர் மாப்பிள்ளை (1) சிந்தனை (2) செய்தி (10) தமிழர் பண்பாடு (5) தமிழ் (14) தமிழ் அளவை (2) தமிழ் அளவைகள் (1) தமிழ் ஆண்டுகள் (2) தமிழ் எண்கள் (1) தமிழ் எழுத்து (2) தமிழ் காலம் (2) தமிழ் பாட்டு (2) தமிழ் மருத்துவம் (6) தமிழ்நாடு அரசு பாடப் புத்தகங்கள் (1) தன்னம்பிக்கை (1) தீபம் (1) துணுக்கு (16) தெரிந்துகொள்வோம் (4) நகைச்சுவை (31) நகைச்ச்சுவை (4) நகைச்ச்சுவைகடிதம் (1) நட்பு (3) நட்பு கவிதை (2) படம் (1) படித்ததில் பிடித்தது (53) பணம் (1) பரோட்டா (1) பழம்தமிழர் (1) பாதுகாப்பு (2) பிரபலமானவர்களின் (3) பெண்பார்க்கும் படலம் (1) பெற்றோர் (1) பொங்கல் (1) பொழுதுபோக்கு (27) மகிழ்ச்சி (3) மாங்கல்யம் (1) மாய தோற்றம் (1) வரலாற்று நிகழ்வு (1) வலைப்பூ (1) வழி காட்டி (9) வழிகாட்டி (28) வாழ்கை (13) வாழ்க்கை (8) வாழ்த்துகள் (13) விவசாயம் (2) விவசாயி (1) வேலை (3)
 

©2009 அறிவு களஞ்சியம் | Template Blue by TNB