திருக்குறள்

தேடல்

தன்னம்பிக்கை சிறு கதை-1

|

வெகு காலத்திற்கு முன்பு…சிறிய தவளைகள் பல ஒன்று சேர்ந்து ஒரு பந்தயத்திற்கு ஏற்பாடு செய்தன. மிகப்பெரிய கோபுரம் ஒன்றில் ஏறி அதன் உச்சியை அடைய வேண்டும் என்பது தான் பந்தயத்தின் இலக்கு.

இந்தப் பந்தயத்தைப் பார்ப்பதற்காகவும், போட்டியாளர்களை உற்சாகப்படுத்துவதற்காகவும் அந்த பெரிய கோபுரத்தைச் சுற்றி மிகப்பெரும் கூட்டம் கூடி விட்டது.

போட்டி ஆரம்பமாகி விட்டது. உண்மையிலேயே அந்தக் கூட்டத்தில் இருந்த ஒருவருக்குக் கூட அந்த சிறிய தவளைகளால் கோபுரத்தின் உச்சியை அடைய முடியும் என்ற நம்பிக்கை இல்லை.
கூட்டத்திலிருந்தவர்கள் பேசிக்கொண்டனர்…..

“வழி மிகவும் கடினமானது”

“இந்தச் சிறிய தவளைகளால் நிச்சயமாக உச்சியை அடைய முடியாது”

“வெற்றிபெற ஒரு சிறிய வாய்ப்பு கூட அவற்றுக்குக்கிடையாது”

“கோபுரத்தின் உயரம் மிகவும் அதிகம்”

பார்வையாளர்களின் இத்தகைய பேச்சைக்கேட்ட அந்த சிறிய தவளைகள் ஒன்றன்பின் ஒன்றாக கோபுரத்தின் மேலே ஏற முடியாமல் சரிய ஆரம்பித்தன. ஒரு ஜான் ஏறினால் ஒரு முழம் சறுக்கியது. தொடர்ந்து உற்சாகத்துடன் இருந்த ஒரு சில தவளைகள் மட்டும் மேலும் அதிக உயரத்திற்கு ஏறிக் கொண்டிருந்தன.

கூடியிருந்த கூட்டம் தொடர்ந்து கூக்குரலிட்டது.

“இது மிகவும் கடினமான விஷயம்”

“உங்களில் ஒருவரும் உச்சியை அடையப்போவதில்லை”

உற்சாகமாக இருந்த அந்த சிறிய தவளைகளில், சில மிகவும் சோர்வடைந்து தங்கள் முயற்சியைக் கைவிட்டு விட்டு கீழ் நோக்கி இறங்கத் தொடங்கின.

ஒரே ஒரு தவளையைத் தவிர அனைத்து தவளைகளும் தங்கள் முயற்சியை கைவிட்டு விட்டன. அது மட்டும் தொடர்ந்து மேலே மேலே ஏறிக்கொண்டே இருந்தது. அது தன் முயற்சியில் சற்றும் மனம் தளரவில்லை. அது மிகுந்த பிரயத்தனத்துடன் கோபுரத்தின் உச்சியை சென்றடைந்தது. 

மற்ற அனைத்துத் தவளைகளும் அந்த ஒரு தவளையால் மட்டும் எப்படி கோபுரத்தின் உச்சியை அடைய முடிந்தது என்பதைத் தெரிந்து கொள்ள மிகுந்த ஆவலாக இருந்தன.

போட்டியில் கலந்து கொண்ட தவளைகளில் ஒன்று, வென்ற தவளையிடம் “உனக்கு மட்டும் கோபுரத்தின் உச்சியை அடைவதற்கு உண்டான பலம் எங்கிருந்து வந்தது?” என்று கேட்டது.

வெற்றி பெற்ற தவளையிடமிருந்து பதில் ஏதும் வரவில்லை.

பிறகு தான் தெரிந்தது, வெற்றி பெற்ற அந்தத் தவளைக்கு காது கேட்காது என்பது.

க‌ண‌னியை எ‌வ்வாறு பராம‌ரி‌ப்பது?

|

எ‌ந்த‌ப் பொருளாக இரு‌ந்தாலு‌ம் முறையாக‌ப் பராம‌ரி‌க்க வே‌ண்டியது ‌மிகவு‌ம் அவ‌சியமாகு‌ம். அதுபோல‌த்தா‌ன் க‌ணி‌னியு‌ம்.எவ்வளவு கூடுதல் கான்பிகேரேஷனில் கம்ப்யூட்டர் வங்கினாலும், அதை சரியாக பராமரிக்காவிட்டால், அத‌ன் செய‌ல்பாடு குறை‌ந்து‌விடு‌ம்.எனவே ஒரு க‌ணி‌னியை ‌சிற‌ப்பான முறை‌யி‌ல் பராம‌ரி‌ப்பது எ‌வ்வாறு எ‌ன்று பா‌ர்‌ப்போ‌ம்.

1.தினமும் ரிசைக்கிள் பின்னை காலி செய்ய வேண்டும்.

2.எ‌ப்போது‌ம் இய‌ங்‌கி‌க் கொ‌ண்டிரு‌க்க ‌விடாம‌ல், ‌சில நேர‌ங்க‌ளி‌லாவது ஆ‌ப் செ‌ய்து க‌ணி‌னி‌க்கு ஓ‌ய்வு கொடு‌ங்க‌ள்.

3.கம்ப்யூட்டரில் உள்ள, நீண்ட காலம் நாம் பயன்படுத்தாத புரோக்கிராம் மற்றும் சாப்ட்வேர்களை நீக்கிவிடவேண்டும்.

4.தேவைய‌ற்ற, பய‌ன்பா‌ட்டி‌ல் இ‌ல்லாத பை‌ல்களையு‌ம் ‌நீ‌க்‌கி‌விடு‌ங்க‌ள். அதனை ‌ரீ சை‌க்‌கி‌ள் ‌பி‌ன்‌னி‌ல் இரு‌ந்து‌ம் ‌நீ‌க்கு‌ங்க‌ள்.

5.டெம்பரவரி இண்டர்நெட் பைல்களை அழித்து விடுங்கள்.

6.அவ்வப்போது டிஸ்க் கிளீன் அப் செய்யுங்கள்.

7.குறைந்த பட்சம் மாதம் ஒரு முறையாவது டிஸ்க் டிபிராக்மெண்டேஷன் செய்யுங்கள். அல்லது எப்போதெல்லாம் அதிக வேலை கொடுக்கிறீர்களோ, அதற்கு பிறகு டிஸ்க் டிபிராக்மெண்ட் செய்வது நல்லது.

8.குறிப்பிட்ட கால இடைவெளியில் ஏரர் செக்கிங் யுடிலிட்டி மேற்கொள்ள வேண்டும். ஒவ்வொரு முறை ஹார்டு டிஸ்கை கம்ப்யூட்டர் பயன்படுத்தும்போதும், சில வேண்டாத செக்டார்கள் உருவாகும். அவற்றை நீக்க, கம்ப்யூட்டரில் உள்ள எரர் செக்கிங் யுடிலிட்டி ஸ்கேனை பயன்படுத்த வேண்டும்.

9.தேவையில்லாத சாப்ட்வேர் தொகுப்புக்கள், மொழித்தொகுப்புக்கள் போன்றவற்றை நீக்கிவிடலாம். தேவைப்படும் நேரத்தில் அவற்றை இணையத்திலிருந்து டவுன்லோடு செய்து கொள்ளலாம்.

10.ஸ்பைவேர் எனப்படும் ரகசியங்களை திருடும் சாப்ட்வேர்களில் இருந்து கம்ப்யூட்டரை பாதுகாத்து கொள்ளவேண்டும். இதற்கான சாப்ட்வேர் தொகுப்புக்கள், விண்டோஸ் உடன் கிடைக்கின்றன.

11.தினமும் அல்லது குறிப்பிட்ட கால இடைவெளியில் ஆண்ட்டி வைரஸ் ஸ்கேனை இயக்கி, கம்ப்யூட்டர் போல்டர்கள், டிரைவ்களில் உள்ள வைரஸ்களை நீக்க வேண்டும்.

12.ஒவ்வொரு முறை டவுன்லோடு செய்யும்போதும், வைரஸ் ஸ்கேன் செய்ய வேண்டும்.

13.யு.எஸ்.பி., ஸ்பீக்கர் போன்றவற்றை கம்ப்யூட்டருடன் இணைக்கும் போர்டுகளை கவனமாக சொருக வேண்டும். போர்டு உடைந்துவிட்டால், சரி செய்ய செலவு அதிகம் பிடிக்கும்.

15.முறைப்படியே, கம்ப்யூட்டரை ஷட்- டவுன் செய்ய வேண்டும். ஆன்/ஆப் சுவிட்சை பயன்படுத்தவேண்டாம்.

16.கம்ப்யூட்டர் அதிக சூடு ஆகாமல் பார்த்துக் கொள்ளுங்கள். அவ்வப்போது நீங்களும் ஓய்வு எடுத்துக் கொள்ளுங்கள்; கம்ப்யூட்டருக்கு, ஓய்வு கொடுங்கள்.

17.யு.எஸ்.பி. மூலமே கம்ப்யூட்டரை இயக்குங்கள். இதனால் மின் தடை ஏற்படும்போது, கம்ப்யூட்டர் திடீரென க்ராஷ் ஆவதில் இருந்து தப்பிக்கும்.

18.ஆண்டுக்கு ஒரு முறையோ அல்லது இரு முறையோ சி.பி.யு மற்றும் மானிட்டரை திறந்து அதில் சேர்ந்திருக்கும் மெல்லிய தூசுக்களை அப்புறப்படுத்துங்கள்.

19.எ‌ப்போது‌ம் கு‌ளி‌ர்‌ந்த அறை‌யி‌ல் க‌ணி‌னி இரு‌க்க வே‌ண்டியது ‌மிகவு‌ம் அவ‌சிய‌ம். அ‌ல்லது குறை‌ந்தப‌ட்ச‌ம் ந‌ல்ல கா‌ற்றோ‌ட்டமான இட‌த்‌திலாவது இரு‌க்க வே‌ண்டு‌ம்.

கணினி சிஸ்ட கவசம்

|

எனக்கு வந்த நகைச்சுவையான email...

துதிப்போர்க்கு தொங்குதல்போம் வைரஸ்போம்-நெஞ்சில்
பதிப்போர்க்கு பிராட்பேண்ட் களிப்பேற்றும்
கீபோர்டு விரைந்தோடும் அனுதினமும் கணினி சிஸ்ட கவசமதனை
பின்னிப்பெடலெடுத்த பில்கேட்ஸ்தனை
உன்னிப்புடன் நெஞ்சே குறி!

காக்க காக்க கம்ப்யூட்டர் காக்க
அடியேன் சிஸ்ட அழகுவேல் காக்க
வின்டோசைக் காக்க வேலன் வருக
கனெக்ஷன் கொடுத்து கனகவேல் காக்க
இன்டெர்நெட் தன்னை இனியவேல் காக்க

பன்னிருவிழியால் பாஸ்வேர்ட் காக்க
செப்பிய வால்யூம் செவ்வேல் காக்க
வீடியோ ஆடியோ வெற்றி வேல் காக்க
முப்பத்திரு ஃபைல் முனைவேல் காக்க
வைரஸ் வாராமல் வைரவேல் காக்க

சேவிங் தன்னை செந்தில் வேல் காக்க
எக்ஸ்டர்நல் மோடம் எதிர் வேல் காக்க
பில்ட் இன்மோடம் பிரிய வேல் காக்க
ஈமெயில் தன்னை இணையவேல் காக்க
மவுசை மகேசன் மைந்தன் காக்க

எர்ரர் வாராமல் எழில் வேல் காக்க
அடியேன் ப்ரின்டர் அமுதவேல் காக்க
எக்ஸ்ப்ளோரரை ஏரகத்தான் வேல் காக்க
அடியேன் ப்ரௌஸ் செய்கையில் அயில் வேல் காக்க
அல்லல் படுத்தும் அடங்கா எரர்கள்

நில்லாதோட நீ எனக்கருள்வாய்
ஹாங் ப்ராப்ளமும்
ஹார்ட் டிஸ்க் ப்ராபளமும்
என் பெயர் சொல்லவும்
இடி விழுந்தோடிட

ஆப்பரேட்டிங் சிஸ்டத்தை
அலறவே வைத்திடும்
ஃப்ளக்சுவேஷன் பவர் சார்ஜுகளும்
வாட்டம் விளைக்கும் வோல்ட்டேஜுகளும்
அடியேனைக் கண்டால் அலறி கலங்கிட

பிரிண்டர் சற்றும் பிழையாதிருக்க
பேப்பர் ஃபீடிங் சூப்பராய்த் திகழ
மை சப்ளை செய்யும் காட்ரிட்ஜ் தன்னை
மைய நடனம் செய்யும் மயில் வாகனனார் காக்க
மூவாகல் மூர்க்கம் செய்யும்

மவுஸ் என்கை பட்டதும் ஸ்மூத்தாக
நகர நீ எனக்கருள்வாய்
கிர்ரு, கிர்ரு, கிரு, கிரு என
டிஸ்கனெக்ட் ஆகும் டெலிபோன்களை
போட்டதும் கனெக்ட் ஆக புனிதவேல் காக்க

கன்னா பின்னாவென்று வரும்
கமான்ட் இன்டட் ரெப்டுகளை
கந்தன் கைவேல் காக்க
அல்லல் படுத்தும் அடங்கா பசங்களும்
பந்துகள் ஆடும்பாலர் பட்டாளமும்

மானிட்டர் பக்கம் வந்து விடாமல்
என் பெயர் சொல்லவும் எகிறியே ஓட
ரேமும், ரோமும் மெமரியோடிருக்க
அனைத்து ஃபோர்டர்ஸீம்
ஆயுளோடு விளங்க

டௌன்லோடு, அப்லோடு டக்கராய்
விளங்கும் சிஸ்டம் பெற்று அடியேன்
சிறப்புடன் வாழ்க.

அலட்சியம் செய்யும் அலசியஸர்வீஸhர்
அழைத்ததும் வந்திட அருள் நீ புரிவாய்
ஷட்டௌன் தடங்கல்
சட்டென்று நீங்க
ஷண்முகன் நீயும் சடுதியில் வருக

கணினி சிஸ்டம் கவசம் இதனை
சிந்தை கலங்காது கேட்பவர்கள்,
படிப்பவர்கள் எந்நாளும் பாடாய்
படுத்தாத கணினியுடன் வேலை செய்வார்.
வாழ்க கணினி. வளர்க மவுஸ்.

சிரிக்க, சிரிக்க, கணினி சிஸ்டம் கேட்க.

Related Posts Plugin for WordPress, Blogger...

தலைப்புகள்

anicent tamil (4) Blog Tips (2) Computer (4) ILUSION (1) information (1) LPG சிலிண்டர் (1) safety (1) Short Cut Key (2) SMS (1) tamil (14) tamil friendship poem (2) tamil joke (7) tamil kathai (5) tamil story (6) tamil year (1) Welding Symbol (1) அபூர்வ தகவல் (1) ஆரோக்கியம் (12) ஆவணங்கள் (7) இயற்கை (3) எச்சரிக்கை (3) கணணி பராமரிப்பு (1) கதை (21) கம்ப்யூட்டர்வேலை (1) கலைஞர் (1) கவிதை (11) சாப்ட்வேர் மாப்பிள்ளை (1) சிந்தனை (2) செய்தி (10) தமிழர் பண்பாடு (5) தமிழ் (14) தமிழ் அளவை (2) தமிழ் அளவைகள் (1) தமிழ் ஆண்டுகள் (2) தமிழ் எண்கள் (1) தமிழ் எழுத்து (2) தமிழ் காலம் (2) தமிழ் பாட்டு (2) தமிழ் மருத்துவம் (6) தமிழ்நாடு அரசு பாடப் புத்தகங்கள் (1) தன்னம்பிக்கை (1) தீபம் (1) துணுக்கு (16) தெரிந்துகொள்வோம் (4) நகைச்சுவை (31) நகைச்ச்சுவை (4) நகைச்ச்சுவைகடிதம் (1) நட்பு (3) நட்பு கவிதை (2) படம் (1) படித்ததில் பிடித்தது (53) பணம் (1) பரோட்டா (1) பழம்தமிழர் (1) பாதுகாப்பு (2) பிரபலமானவர்களின் (3) பெண்பார்க்கும் படலம் (1) பெற்றோர் (1) பொங்கல் (1) பொழுதுபோக்கு (27) மகிழ்ச்சி (3) மாங்கல்யம் (1) மாய தோற்றம் (1) வரலாற்று நிகழ்வு (1) வலைப்பூ (1) வழி காட்டி (9) வழிகாட்டி (28) வாழ்கை (13) வாழ்க்கை (8) வாழ்த்துகள் (13) விவசாயம் (2) விவசாயி (1) வேலை (3)
 

©2009 அறிவு களஞ்சியம் | Template Blue by TNB