திருக்குறள்

தேடல்

கவர்மெண்ட் ஸ்கூல் வாத்தியார்

|

பெண்ணைப் பெற்றவர்.. நல்ல ஜாதகமா இருந்தா சொல்லுங்க தரகரே..
தரகர்.. இருக்கே.. பையன்.. ரொம்ப நேர்மையானவன்.. எம்எஸ்சி.. எம் எட்.. படிச்சிட்டு.. வாத்தியாரா இருக்கான்.. ஸ்கூல்ல கெட்டிக்கார வாத்தியார்னு பேர் எடுத்திருக்கான்.. ரொம்ப ஸ்ட்டிரிக்ட்.. பசங்க ஒழுங்கா வரணும்னு நினைக்கிற ஆளு..

வேண்டாம்.. வேலை நிரந்தரம் இல்லை.. வேற சொல்லுங்க..
என்ன அப்படி சொல்லிட்டேள்.. கவர்மெண்ட் ஸ்கூல்.. 60 ஆயிரம் சம்பளம்.. சாயந்தரம் 5 மணிக்கெல்லாம் வீட்டுக்கு வந்துருவான்..
கவர்மெண்ட் ஸ்கூல்லு சொன்னதாலதான் வேண்டாங்கறேன்..
ஏன்?..
அவன் நல்ல வாத்தியார்னு சொல்றேள் ஸ்ட்ரிக்ட்டுனு வேற சொல்றேள்.. .. பசங்க யூனிபாரம் போட்டுண்டு வரலேன்னா.. வீட்டுப் பாடம் எழுதலேன்னா ,பரீட்சையில காப்பியடிச்சா கண்டிப்பான்.. உடனே அந்த பையனோ பொண்ணோ.. வீட்டுக்குப் போயி கடுதாசு எழுதிவச்சிட்டு ஒன்னு கெடக்க ஒன்னு பண்ணுவா..
உடனே அரசியல் கட்சிகள்.. புரியாத பொதுஜனத்தைக் கூட்டி சாலை மறியல் பண்ணுவா.. ரோட்டு க்ளியர் ஆனா போதும்னு கவர்மெண்ட்.. யாருடா இளிச்சவாயன்னு பார்க்கும்.. வாத்தியாரை சஸ்பெண்ட் பண்ணுவா.. சம்பளம் ஒசத்தறதுக்கு போராடவா இதுக்கு ஒன்னு சேர்ந்து வரமாட்டா.. அட.. அந்த கல்வி அதிகாரியும்.. அந்த வகுப்புல மத்த பசங்ககிட்ட கேட்டு.. அந்த வாத்தியார் எப்படின்னு விசாரிக்க மாட்டா.. எல்லாரும் அரிப்புக்கு சொறிஞ்சிண்டு.. அந்த நல்லவாத்தியை கை கழுவிடுவா.. இப்ப புரிஞ்சுதா?.. நான் ஏன் கவர்ன்மெண்ட் ஸ்கூல் மாப்பிள்ளை வேண்டான்னு சொல்றேன்னு..
தரகர் தன் பையில் இருந்த அத்தனை கவர்மெண்ட் ஸ்கூல் வாத்தியார் ஜாதகத்தையும் எடுத்து தனியே வைத்து விட்டார்.. எதுக்கு வம்பு?..
சிரிப்பது போல இருந்தாலும், எழுத்தின் வலி புரிகிறது

யாருக்காக யார் சாவது?

|


இராமன் என்பவர் இறந்து விட்டார்.. அவருக்கு வயது 40 கூட ஆகவில்லை.
அவரது மனைவி,9 வயதான மகன்,பெற்றோர் அனைவரும் உடலின் அருகே அமர்ந்து கதறி அழுது கொண்டிருந்தனர்.


இந்தக் குடுமபத்துக்கே குருஜியாக விளங்கும் அறிஞர் ஒருவர் அப்போது அங்கு வந்தார்.,


அவரைக் கண்டதும் அவர்கள் மேலும் பெரிதாக அழ ஆரம்பித்தனர்.
இராமனின் மனைவி சொன்னாள்குருஜி!இவ்வளவு இளம் வயதில் என்னையும் என் மகனையும் நிர்க்கதியாக விட்டுப் போய் விட்டாரே? நான் என்ன செய்வேன்?அவர் உயிருடன் வருவாரறென்றால் அதற்காக நான் எதுவும் செய்வேன்


குருஜி அவர்கள் அனைவருக்கும் ஆறுதல் சொல்லி சமாதானப் படுத்த முயன்றார் ஆனால் அவர்கள் சோகம் குறையவில்லை. கடைசியில் அவர் கேட்டார்ஒரு கோப்பை தண்ணீர் கொண்டு வாருங்கள்தண்ணீர் வந்தது. அவர் கோப்பையை உடலின் அருகில் வைத்துத் தானும் அமர்ந்தார்.


பின் சொன்னார்இராமன் உயிருடன் திரும்பி வர வேண்டும் என நினைப்பவர்,இந்தத் தண்ணீரை அருந்தலாம். இராமன் திரும்பி வருவார். ஆனால் அதற்குப் பதில் நீரை அருந்தியவர் மரணமடைவார்
அவர்கள் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டனர்..ஆனால் யாரும் முன் வரவில்லை.


அவர் இராமனின் தந்தையைக் கேட்டார்ஐயா! நீங்கள் உங்கள் மகனுக்காக உங்கள் உயிரைக் கொடுக்க மாட்டீர்களா?”

தந்தை சொன்னார்நான் இறந்து விட்டால் என் மனைவிக்கு யார் ஆதரவு?அவளுக்காக நான் வாழ வேண்டும்


தாயைக் கேட்க அவள் சொன்னாள்அடுத்த மாதம் என் மகளுக்குப் பேறுகாலம்.நான் இறந்து விட்டால் அவளுக்கு யார் உதவுவது?”


மனைவி சொன்னாள்நான் இறந்தால் என் பையனை யார் கவனித்து வளர்ப்பது? அவனுக்காக நான் வாழ வேண்டும்


குருஜி பையனைப் பார்த்துக்கேட்டார்குழந்தாய்,உன் தந்தைக்காக நீ உயிர் விடுவாயா?”
அவன் தாய் உடனே அவனை இழுத்து அணைத்துக்கொண்டு சொன்னாள் குருஜி,உங்களுக்கென்ன பைத்தியமா?அவன் ஒரு குழந்தை.இனிமேல் தான் அவன் வாழ்க்கையே இருக்கிறது. அவனைப் போய் நீங்கள் கேட்கலாமா?”


குருஜி சொன்னார்உங்கள் அனைவருக்கும் ஏதாவது கடமை, பொறுப்பு இருக்கிறது என்று நீங்கள் சொல்கிறீர்கள். அப்படியானால் இராமனுக்கு இங்கு வேலையில்லை என்றாகிறது. எனவே தான் கடவுள் அவனை எடுத்துக் கொண்டார் .இப்போது இறுதி யாத்திரைக்கான ஏற்பாடுகளைக் கவனியுங்கள்சொல்லி விட்டு அவர் சென்று விட்டார்.


ஆம் பிறப்பையும் இறப்பையும் தீர்மானிப்பவன் அவன்.


எந்தப் பூவை எப்போது பறிக்க வேண்டும் என்பது அவன் எடுக்கும் முடிவு.
நாம் யார் அதைக் குறை சொல்ல? கேள்வி கேட்க?


நாம் ஒரு செடிக்குத் தண்ணீர் ஊற்றிப் பராமரிக்கிறோம்,அதில் பச்சை இலைகள் இருக்கும் வரை இலைகள் வாடிப்போய், அது உயிரற்ற குச்சியானால் அதை நாம் கவனிக்கப் போவதில்லை. அதனிடம் அன்பு செலுத்தப் போவதில்லை.”


உயிர் இருக்கும் வரையே அன்பு, பாசம் எல்லாம்


பின் மிஞ்சுவது மகிழ்ச்சியான நாட்களின் நினைவுகள் மட்டுமே

Related Posts Plugin for WordPress, Blogger...

தலைப்புகள்

anicent tamil (4) Blog Tips (2) Computer (4) ILUSION (1) information (1) LPG சிலிண்டர் (1) safety (1) Short Cut Key (2) SMS (1) tamil (14) tamil friendship poem (2) tamil joke (7) tamil kathai (5) tamil story (6) tamil year (1) Welding Symbol (1) அபூர்வ தகவல் (1) ஆரோக்கியம் (14) ஆவணங்கள் (7) இயற்கை (3) எச்சரிக்கை (3) கணணி பராமரிப்பு (1) கதை (21) கம்ப்யூட்டர்வேலை (1) கலைஞர் (1) கவிதை (11) சாப்ட்வேர் மாப்பிள்ளை (1) சிந்தனை (2) செய்தி (10) தமிழர் பண்பாடு (5) தமிழ் (14) தமிழ் அளவை (2) தமிழ் அளவைகள் (1) தமிழ் ஆண்டுகள் (2) தமிழ் எண்கள் (1) தமிழ் எழுத்து (2) தமிழ் காலம் (2) தமிழ் பாட்டு (2) தமிழ் மருத்துவம் (6) தமிழ்நாடு அரசு பாடப் புத்தகங்கள் (1) தன்னம்பிக்கை (1) தீபம் (1) துணுக்கு (16) தெரிந்துகொள்வோம் (6) நகைச்சுவை (31) நகைச்ச்சுவை (4) நகைச்ச்சுவைகடிதம் (1) நட்பு (3) நட்பு கவிதை (2) படம் (1) படித்ததில் பிடித்தது (54) பணம் (1) பரோட்டா (1) பழம்தமிழர் (1) பாதுகாப்பு (2) பிரபலமானவர்களின் (3) பெண்பார்க்கும் படலம் (1) பெற்றோர் (1) பொங்கல் (1) பொழுதுபோக்கு (27) மகிழ்ச்சி (3) மாங்கல்யம் (1) மாய தோற்றம் (1) வரலாற்று நிகழ்வு (1) வலைப்பூ (1) வழி காட்டி (9) வழிகாட்டி (30) வாழ்கை (13) வாழ்க்கை (9) வாழ்த்துகள் (13) விவசாயம் (2) விவசாயி (1) வேலை (3)
 

©2009 அறிவு களஞ்சியம் | Template Blue by TNB