பெண்ணைப் பெற்றவர்.. நல்ல ஜாதகமா இருந்தா சொல்லுங்க தரகரே..
தரகர்.. இருக்கே.. பையன்.. ரொம்ப நேர்மையானவன்.. எம்எஸ்சி.. எம் எட்.. படிச்சிட்டு.. வாத்தியாரா இருக்கான்.. ஸ்கூல்ல கெட்டிக்கார வாத்தியார்னு பேர் எடுத்திருக்கான்.. ரொம்ப ஸ்ட்டிரிக்ட்.. பசங்க ஒழுங்கா வரணும்னு நினைக்கிற ஆளு..
வேண்டாம்.. வேலை நிரந்தரம் இல்லை.. வேற சொல்லுங்க..
என்ன அப்படி சொல்லிட்டேள்.. கவர்மெண்ட் ஸ்கூல்.. 60 ஆயிரம் சம்பளம்.. சாயந்தரம் 5 மணிக்கெல்லாம் வீட்டுக்கு வந்துருவான்..
கவர்மெண்ட் ஸ்கூல்லு சொன்னதாலதான் வேண்டாங்கறேன்..
ஏன்?..
அவன் நல்ல வாத்தியார்னு சொல்றேள் ஸ்ட்ரிக்ட்டுனு வேற சொல்றேள்.. .. பசங்க யூனிபாரம் போட்டுண்டு வரலேன்னா.. வீட்டுப் பாடம் எழுதலேன்னா ,பரீட்சையில காப்பியடிச்சா கண்டிப்பான்.. உடனே அந்த பையனோ பொண்ணோ.. வீட்டுக்குப் போயி கடுதாசு எழுதிவச்சிட்டு ஒன்னு கெடக்க ஒன்னு பண்ணுவா..
உடனே அரசியல் கட்சிகள்.. புரியாத பொதுஜனத்தைக் கூட்டி சாலை மறியல் பண்ணுவா.. ரோட்டு க்ளியர் ஆனா போதும்னு கவர்மெண்ட்.. யாருடா இளிச்சவாயன்னு பார்க்கும்.. வாத்தியாரை சஸ்பெண்ட் பண்ணுவா.. சம்பளம் ஒசத்தறதுக்கு போராடவா இதுக்கு ஒன்னு சேர்ந்து வரமாட்டா.. அட.. அந்த கல்வி அதிகாரியும்.. அந்த வகுப்புல மத்த பசங்ககிட்ட கேட்டு.. அந்த வாத்தியார் எப்படின்னு விசாரிக்க மாட்டா.. எல்லாரும் அரிப்புக்கு சொறிஞ்சிண்டு.. அந்த நல்லவாத்தியை கை கழுவிடுவா.. இப்ப புரிஞ்சுதா?.. நான் ஏன் கவர்ன்மெண்ட் ஸ்கூல் மாப்பிள்ளை வேண்டான்னு சொல்றேன்னு..
தரகர் தன் பையில் இருந்த அத்தனை கவர்மெண்ட் ஸ்கூல் வாத்தியார் ஜாதகத்தையும் எடுத்து தனியே வைத்து விட்டார்.. எதுக்கு வம்பு?..
சிரிப்பது போல இருந்தாலும், எழுத்தின் வலி புரிகிறது
0 comments:
Post a Comment