திருக்குறள்

தேடல்

கம்ப்யூட்டர் ஆணா... பெண்ணா...?

|கல்லூரியில் ஆசிரியர் ஒருவர் வகுப்பு நடத்திக் கொண்டிருக்கும் போது ஒரு துடுக்கான மாணவன், எழுந்து, "கம்ப்யூட்டர் எந்த வகையைச் சேர்ந்தது?' என்று கேட்டான். (கம்ப்யூட்டர் ஆணா... பெண்ணா...?)

ஆசிரியருக்கு பதில் தெரியவில்லை எனவே, வகுப்பிலுள்ள மாணவர்களை ஒரு குழுவாகவும், மாணவிகளை இன்னொரு குழுவாகவும் பிரித்து, இதற்கான விடையை கண்டுபிடியுங்கள் என்றார். நீங்கள் சொல்லும் விடையை நிரூபிக்கும் வகையில் நான்கு உதாரணங்களையும் கூற வேண்டும் என்றார்.

இரண்டு குழுக்களும் தனித்தனியாக கூடி கம்ப்யூட்டர் குறித்து ஆராய்ச்சி செய்தது. பின்னர் மாணவியர் அனைவரும், "கம்ப்யூட்டர் ஆண் இனத்தை சேர்ந்தது' என்றும்... மாணவர்கள் அனைவரும், "கம்ப்யூட்டர் ஒரு பெண்' என்றும் கூறினர். அதற்கு அவர்கள் கூறிய விளக்கம் என்ன தெரியுமா?

மாணவியர் கூறிய விடை:

* கம்ப்யூட்டரில் ஏதாவது வேலை செய்ய வேண்டுமெனில் முதலில் அதை, "பவர் ஆன்' செய்தல் வேண்டும்.

* ஏகப்பட்ட தகவல் தொகுப்புகள் கம்ப்யூட்டரில் உள்ளன; இருந்தாலும், கம்ப்யூட்டர்கள் தாங்களே சுயமாக சிந்திக்க முடியாதவை.

* கம்ப்யூட்டர்கள் பிரச்னைகளை தீர்க்க உதவினாலும், பல நேரங்களில் அவையே பிரச்னைகளாக அமைகின்றன.

* ஒரு கம்ப்யூட்டர் வாங்கிய உடன் யோசிப்போம்... "ஐயோ... சிறிது காலம் பொறுத்திருந்தால், அதை விட சிறந்த கம்ப்யூட்டராக வாங்கியிருக்கலாமே...' என்று!

"இந்த காரணங்களால் கம்ப்யூட்டர் ஆண் இனத்தை சேர்ந்தது தான் என்று மாணவிகள் முடிவு கூறினர்.


"கம்ப்யூட்டர் பெண்ணுக்குத் தான் சமம் என்பது மாணவர்களின் கருத்து. அதற்கு அவர்கள் கூறும் காரணம் என்ன தெரியுமா?

* கம்ப்யூட்டரின் தொழில்நுட்பம் அதை உருவாக்கியவரை தவிர வேறு யாருக்கும் எளிதில் புரிவதில்லை.

* ஒரு கம்ப்யூட்டரில் பயன்படுத்தும் சாப்ட்வேரை, இன்னொரு கம்ப்யூட்டரில் எளிதில் பயன்படுத்தி விட முடியாது. அதாவது, கம்ப்யூட்டருக்கு கம்ப்யூட்டர் பயன்பாடுகள் மாறுபடும்.

* நாம் செய்யும் சிறு தவறுகள் கூட கம்ப்யூட்டர் நினைவில் பதித்திருக்கும். நெடு நாட்களுக்கு பிறகு கூட அதைத் திரும்ப எடுத்துக் கூறும் ஆற்றல் அதற்கு உண்டு.

* ஒரு கம்ப்யூட்டரை வாங்கிய உடனே, தொடர்ந்து மாத வருமானத்தில் பாதி பணம் அந்த கம்ப்யூட்டரின் மற்ற பாகங்களை வாங்க செலவு செய்ய வேண்டியிருக்கும்.

"இவற்றில் இருந்து கம்ப்யூட்டர் ஆணா, பெண்ணா என்று உங்கள் அனுபவத்தில் நீங்களே முடிவு செய்து கொள்ளுங்கள்...

இந்த சமாச்சாரம், "நெட்'டில் படித்தது...'

உள்ளங்கையும் உடல்நிலையும்

|ஒருவருடைய விரல்களையும், உள்ளங்கையையும் சோதித்தாலே அவருடைய உடல்நிலையைக் கணித்துக் கூற முடியும்...'


"வயிற்றில் அல்சர் உள்ளவர்களின் உள்ளங்கைகள், சுருக்கங்கள் மிகுந்து இருக்கும். வெண்மையான உள்ளங்கைகள் ரத்த சோகைக்கு அறிகுறி... தேவைக்கு அதிகமாக, "தைராய்டு' சுரப்பிகள் இயங்கினால், கைகள் வெதுவெதுப்பாக இருக்கும். அவற்றின் மீது வியர்வை பிசுபிசுப்பும் காணப்படும்.

"அதே நேரம் தைராய்டு சுரப்பிகள் சரிவர இயங்காவிட்டால், தோல் வறண்டு சொர, சொரப்பாகக் காணப்படும்.

"வறண்ட நகங்கள் சத்துக் குறைவை வெளிப்படுத்தும். மூட்டு வாதம், கீழ்வாதம் ஆகிய நோயால் பாதிக்கப்பட்டவர்களின் விரல்கள் வீக்கமடைந்து காணப்படும்...'

ஆசிரியை - மாணவன் உரையாடல்

|


""நீபெரியவனாகிஎன்னபண்ணப்போறே?''
""கல்யாணம்''

""அதுஇல்லடா...நீஎன்னவாகவிரும்பற?''
""கணவனா''

""இல்லை.வந்து,உனக்குவாழ்க்கையிலஎன்னகிடைக்கணும்னு
    எதிர்பார்க்கறே?''
""மனைவி''

""அதுஇல்லடா.உங்கஅப்பாஅம்மாவுக்குநீஎன்னபண்ணப்போற?''
""மருமகள்தேடுவேன்''

""முட்டாள்.உங்கிட்டஉங்கஅப்பா,அம்மாஎன்னஎதிர்பார்க்குறாங்க?''
""பேரக்குழந்தை''

""ஐயோ..உன்வாழ்க்கைலட்சியம்என்ன?''
""நாமிருவர்...நமக்கிருவர்''

""நீஒருநாளும்உருப்படமாட்டே''

நெல்லிக்காய்

|

பெரிய நெல்லிக்காய் எனப்படும் துவர்ப்பு குணம் கொண்ட நெல்லிக்கனி தான் நம் முன்னோர் நமக்காக பரிந்துரைத்தது. முதலில் துவர்தாலும பின் வாயில் ஒரு இனிப்பு சுவையை நமக்கு அது தரும்.
நம் நாட்டுப் பெண்கள் அனைவருக்கும் ஹீமோகுளோபின், பத்து மி.கி.,க்கும் குறைவு. நெல்லிக்காய் தொடர்ந்து சாப்பிட்டு வந்தால், ஒரே மாதத்தில், 3-4 மி.கி., வரை கூடுவது கண் கூடாக கண்ட உண்மை.
சர்க்கரை வியாதி உள்ள ஆண்கள் நெல்லிக்காய் சாப்பிட்டால், "இல்வாழ்க்கை' மிகவும் சந்தோஷமாக இருக்கும்
இந்த நெல்லிகாய் பொடியை முந்தின நாள்  சிறிது தண்ணிரில் ஊற வைத்து, மறுநாள் தலையில் தேய்த்து குளித்தால் முடி உதிராது
நெல்லிக்காயை கொட்டையை நீக்கிவிட்டு மிக்சியில் போட்டு ஜூஸ் செய்து (இரண்டு நெல்லிக்காய்) இருவர் சாப்பிடலாம். சர்க்கரை வியாதி உள்ளவர் என்றால், இனிப்பு சேர்க்காமல் சாப்பிடலாம் அல்லது நீராவியில் வேக வைத்து, மிகவும் பொடியாக நறுக்கி, நாட்டுச் சர்க்கரையில் சுக்கு, ஏலம் சேர்த்து நன்கு கிளறி, சுருள் பதம் வந்தவுடன் இறக்கி, பிரிட்ஜில் ஆறு மாதம் வரை வைத்திருந்தாலும் கெட்டுப் போகாது. தினமும் ஒன்று அல்லது இரண்டு மேஜைக்கரண்டி அளவு வீட்டில் உள்ளவர்கள் அனைவரும் சாப்பிடலாம்.

நெல்லிக்காய் நிறைய கிடைக்கும் போது நெல்லிக்காயை சிறு துண்டாக வெட்டி, வற்றல் போல் செய்தும் வைத்து கொள்ளலாம். பின் இதை தேனில் ஊற வைத்து வெறும் வயரில் சாப்பிட எந்நாளும் இளமையாய் தோற்றம் தரும்.
நெல்லிக்காயை ஜாம், மோர், துவையல், ஊறுகாய் , ரசம், குழம்பு என்று பலவாறு சமைத்து உண்ணலாம்
சின்ன நெல்லிக்காய் அதிக மருத்துவ குணம் இல்லாதது. ஆனால் வைட்டமின் C நிறைய உண்டு என்பதால் அதையும் ஊறுகாய் செய்து அல்லது பச்சையாய் கூட சாப்பிடலாம்
ஆம்லா பொடி என்று சில இடங்களில் இதை பொடியாக விற்பார்கள். அந்த பொடியை முந்தின நாள் ஊற சிறிது தண்ணிரில் ஊற வைத்து, மறுநாள் தலையில் தேய்த்து குளித்தால் முடி உதிராது. இந்த பொடியை மோரில் கலந்தும் குடிக்கலாம்.

அமிர்தத்திற்கும் மேலானது நெல்லிக்கனி இதனை எப்படி பக்குவபடுதினாலும் இதன் மருத்துவ குணம் குறையாது என்பதே இதன் சிறப்பு. தமிழ் மருத்துவம் பெரிய நெல்லிக்காயை உபயோகிக்க சொல்லுகிறது.

புதுப்புது வரி யோசனை

|

"பெண்களுக்கெல்லாம் அழகு வரி போடலாம்; ஏராளமாக பணம் சேரும்! அந்தந்தப் பெண்ணையே அவள் அழகுக்கு மதிப்பு போடும்படி சொல்லிவிட வேண்டும். மதிப்பின் உயர்வுக்கு ஏற்ப வரியையும் உயர்த்திப் போட வேண்டும். தன் அழகு விஷயத்தில் எந்தப் பெண்ணும் குறைச்சலா மதிப்புப் போடவே மாட்டாள்; தாராளமாக நடந்து கொள்வாள்...'எப்படி?

வாழ்கையை சுமூகமாக சந்தோசமாக ஓட்ட 30 வழிகள்

|

மற்றவர்களை புண் படுத்தாமல் நம் வாழ்க்கையை சந்தோசமாக நடத்த1. ஒரு நாளைக்கு ஒரு முறையாவது வாய் விட்டு சிரியுங்கள்

2. குறைந்த பட்சம் எட்டு டம்ளர் தண்ணீர் குடியுங்கள்.

3. நீங்கள் விரும்பும் புத்தகத்தை படிக்க பழகிக் கொள்ளுங்கள்.

4. செய்யக் கூடாது என்று நினைக்கும் செயலை முடிந்த வரை கொஞ்சமாவது செய்ய மனதை பழகிக் கொள்ளுங்கள்.

5. நீண்ட நாளைய பழகிய நண்பர்களை அடிக்கடி சந்தித்து பேசி, உங்கள் பசுமையான பழைய நினைவுகளை ஞாபகப்படுத்திக் கொள்ளுங்கள்.

6. இது வரை நீங்கள் அறிந்திராத ஒரு நாட்டைப் பற்றிய புது விஷயங்களை பற்றி அறிந்து கொள்ள முயற்சி செய்யுங்கள்.

7. ஒவ்வொரு நாளும் நடைப் பயிற்சியை மேற்கொள்ளுங்கள்.

8. ஒரு நாளைக்கு குறைந்த பட்சம் ஐந்து பழத்துண்டுகளையோ, காய்கறிகளையோ, விரும்பி உண்ண பழகுங்கள்.

9. நீங்கள் பகிர்ந்து கொள்ள வேண்டிய விஷயங்களை நீங்கள் விரும்புகின்றவர்களிடமோ, அல்லது நெருக்கமானவர்களிடமோ, மனதார பகிர்ந்து கொள்ளுங்கள்.

10. உங்களுக்கு பிடித்த, உங்களை கவர்ந்த கவிதைகளை அடிக்கடி நினைத்து பார்த்து பரவசமடையுங்கள்

11) அனைவரையும் மகிழ்ச்சி அடையச் செய்யுங்கள் – நீங்கள் மற்றவர்களுக்கு அளிப்பதே உங்களுக்குத் திரும்பி வருகிறது.

12) நீங்கள் சந்திக்கும் ஒவ்வொருவரையும் மனதாரப் பாராட்டுங்கள் – பாராட்டுக்களால் மகிழ்வுறுவது ஒரு இயற்கையான மனித சுபாவம்.

13) மன்னிப்பைக் கேட்குமுன்பே மன்னித்து விடுங்கள் – இரவு உறங்கு முன்பு தனக்கு எதேனும் தவறு இழைதவர்களை மனதார மன்னித்து விடுங்கள்.

14) எவரைப் பற்றியும் விரோத மனப்பான்மையை வளர்த்துக் கொள்ளாதீர்கள்.

15) மனத்தை ஒரு குப்பையாக வைத்துக் கொள்ளாமல் தூய்மையாக வைத்துக் கொள்ளுங்கள் – எதிர்மறையான எண்ணங்கள், பொறாமை, பேராசை, கோபம் ஆகியவை துன்பம் விளைவிக்கும்.

16) எது நடக்கிறது என்பதைவிட நடந்ததை நாம் எவ்வாறு அணுகுகிறோம் என்பதே முக்கியம் – சில நடப்புக்களை நம்மால் தவிர்க்க முடியாது. ஆனால் அதை எப்படி எதிர்கொள்கிறோம் என்பதுதான் வாழ்க்கையின் நிம்மதியை நிச்சயிக்கிறது.

17) நல்லது நடக்குமென்றே நம்புவோம் ஆனால் மோசமானவை நடந்தாலும் அதை எதிர்கொள்ளத் தயாராக இருப்போம்.

18) குழந்தைகளிடம் தன்னுடைய பெற்றோர்கள் எப்போதும் தங்களிடம் அக்கறை காட்டவும், வழிகாட்டவும் இருக்கிறார்கள் என்ற முறையில் பழக வேண்டும்.

19) மனதையும் உடலையும் ஆரோக்கியமாகவும் வலிமையாகவும் வைத்துக் கொள்ளவேண்டும்.

20) நாம் எப்போதுமே வெற்ற்¢ பெற்றுக் கொண்டிருக்க முடியாது என்பதை உணர்ந்துகொள்ள வேண்டும்.

21) நண்பர்கள் வாழ்கையில் முக்கியமானவர்கள்.

22) மனிதன் என்பவன் நல்லது கெட்டது கலந்த ஒரு கலவை. ஒவ்வொரு மனிதனுக்கும் ஒரு தனித்துவம் உண்டு. இதைப் புரிந்து கொண்டு நாம் சாதனையை நோக்கி நடையிடவேண்டும்.

23) உங்கள் மீது நம்பிக்கை வையுங்கள். ஆனால் உங்களுடைய குறைபாடுகளையும் புரிந்து கொள்ளுங்கள்.

24) மற்றவர்களிடம் நல்லதையே பாருங்கள் – குறைகளைப் பெரிது படுத்தாதீர்கள்.

25) அச்சம் தவிருங்கள்.

26) இறைவனின் அருளால் எல்லாமே சாத்தியம்தான்.

27) நாளை நடப்பதைப் பற்றிக் கவலையுறாமல் இறைவன் உடன் இருக்கிறான் என்பதை நம்புங்கள்.

28) ஹாஸ்ய உணர்ச்சியை வளர்த்துக் கொள்ளுங்கள். சிரித்து வாழக் கற்றுக்கொள்ள வேண்டும். மற்றவர்களோடு இணைந்து ஒண்றாகச் சிரித்து வாழ வேண்டும். ஆனால் மற்றவர்க¨ளைப் பார்த்து நகைக்கக்கூடாது.

29) வெற்றி என்பது பணத்தினாலோ, பொருள்களினாலோ அளவிடப்படுவதில்லை. மகிழ்ச்சி என்பது நம் மனதின் நிலையைப் பொறுத்தே இருக்கிறது.

30) எந்த நிலையிலும் இறைவனை மனதார நினையுங்கள்

லிங்கை கிளிக் செய்தால் அது புதிய டேபில் திறக்க வேண்டுமா?

|

நண்பர்களே! உங்கள் பிளாக்கில் எந்த லிங்கை கிளிக் செய்தாலும் அது புதிய டேபில் திறக்க வேண்டுமா? கீழே உள்ள படத்தில் உள்ளவாறு செல்லுங்கள்:

டாஷ்போர்டு / Over view செல்லுங்கள்.


பிறகு டெம்பிளேட்டு என்பதை கிளிக் (1) செய்யுங்கள்.

பிறகு HTML-ஐத் திருத்து என்பதை கிளிக் (2) செய்யுங்கள் படம் மேலேஅது கீழ்க்கண்டவாறு தோன்றும்
பிறகு மேலே உள்ள படத்தில் உள்ளபடி Proceed என்பதை கிளிக் (3) செய்யுங்கள் .

பிறகு மேலே உள்ள படத்தில் உள்ளபடி விட்ஜெட் டெம்பிளேட்டுகளை விரிவாக்கு என்ற இடத்தில் உள்ள கட்டத்தில் டிக் செய்யுங்கள்டெம்பிளேட்டுகளை திருத்துவதற்கு முன் அவற்றை பேக்கப் எடுப்பது நல்லது.எனவே இந்த பக்கத்தில் உள்ள முழு டெம்பிளேட்டையும் பதிவிறக்கு என்பதை கிளிக் (5) செய்து டெம்பிளேட்டை தரவிறக்கிக் கொள்ளுங்கள்.
பிறகு ctrl+f அழுத்தி சர்ச் பாக்சை வரவழையுங்கள். படம் மேலே(6): இவ்வாறு சர்ச் பாக்ஸ் தோன்றியதும் அதில் கீழ்கண்ட கோடிங்கை டைப் செய்யுங்கள் அல்லது காப்பி பேஸ்ட் செய்து கொள்ளுங்கள்.

மேலே உள்ள ஹெட் என்பதை டைப் செய்தால் அது படத்தில் உள்ளவாறு Orange Colour செலக்ட் செய்யப்பட்டு காண்பிக்கப்படும். head என்பதன் கீழே இதை காப்பி செய்து பேஸ்ட் செய்துவிடுங்கள். (8) பார்க்க படம் கீழேபிறகு டெம்பிளேட்டை சேமியுங்கள் என்பதை கிளிக் (9) செய்யுங்கள்  அவ்வளவுதான். இனி உங்கள் பிளாக்கில் லிங்குகள் புதிய டேபில் திறக்கும்.

Related Posts Plugin for WordPress, Blogger...

தலைப்புகள்

anicent tamil (4) Blog Tips (2) Computer (4) ILUSION (1) information (1) LPG சிலிண்டர் (1) safety (1) Short Cut Key (2) SMS (1) tamil (14) tamil friendship poem (2) tamil joke (7) tamil kathai (5) tamil story (6) tamil year (1) Welding Symbol (1) அபூர்வ தகவல் (1) ஆரோக்கியம் (12) ஆவணங்கள் (7) இயற்கை (3) எச்சரிக்கை (3) கணணி பராமரிப்பு (1) கதை (21) கம்ப்யூட்டர்வேலை (1) கலைஞர் (1) கவிதை (11) சாப்ட்வேர் மாப்பிள்ளை (1) சிந்தனை (2) செய்தி (10) தமிழர் பண்பாடு (5) தமிழ் (14) தமிழ் அளவை (2) தமிழ் அளவைகள் (1) தமிழ் ஆண்டுகள் (2) தமிழ் எண்கள் (1) தமிழ் எழுத்து (2) தமிழ் காலம் (2) தமிழ் பாட்டு (2) தமிழ் மருத்துவம் (6) தமிழ்நாடு அரசு பாடப் புத்தகங்கள் (1) தன்னம்பிக்கை (1) தீபம் (1) துணுக்கு (16) தெரிந்துகொள்வோம் (4) நகைச்சுவை (31) நகைச்ச்சுவை (4) நகைச்ச்சுவைகடிதம் (1) நட்பு (3) நட்பு கவிதை (2) படம் (1) படித்ததில் பிடித்தது (53) பணம் (1) பரோட்டா (1) பழம்தமிழர் (1) பாதுகாப்பு (2) பிரபலமானவர்களின் (3) பெண்பார்க்கும் படலம் (1) பெற்றோர் (1) பொங்கல் (1) பொழுதுபோக்கு (27) மகிழ்ச்சி (3) மாங்கல்யம் (1) மாய தோற்றம் (1) வரலாற்று நிகழ்வு (1) வலைப்பூ (1) வழி காட்டி (9) வழிகாட்டி (28) வாழ்கை (13) வாழ்க்கை (8) வாழ்த்துகள் (13) விவசாயம் (2) விவசாயி (1) வேலை (3)
 

©2009 அறிவு களஞ்சியம் | Template Blue by TNB