Welcome to Arivu's Collection

இரவுநேரம் ஆகியும் , இந்த வலைப் பக்கத்தை படிப்பதற்கு நன்றி !!!

திருக்குறள்

தேடல்

Jan
14,
2018

எம் உழவன் ....

|

உங்கள் அனைவருக்கும்  இனிய பொங்கல்  நல்வாழ்த்துக்கள் .

இந்த இனிய நாளில் நாம் அனைவரும் சந்தோஷமாக  இருக்க அதற்கு காரமான உழவனின் நிலையை இன்று நாம் நினைக்காமல் வேறு எப்பொழுது நினைப்பது?

இணையத்தில் நான் படித்து  மனமுருகி கண்ணீர் வரவைத்த கவிதை. நீங்களும் படித்து பரவசம் அடைவீர்களாக . இன்று முதல் அவர்களின் உழைப்பை மதித்து அவர்களின் உரிமைகளுக்காக நாமும் குரல் கொடுப்போம்.


உச்சியிலே கண் சுருக்கி,
அண்ணாந்து பாத்து பாத்து ...

வராத மழைக்காக ஏங்கி நிற்கும்
ஏழை உழவன்,
தூரல் கொஞ்சம் விழுந்ததுமே,
விதைபோட கடன் வாங்கி,
இருப்பதெல்லாம் அடகு வச்சு,
ஏரோட்டி விதைச்சுடுவான்.,

முளை விட்ட பயிர்கண்டு
பிள்ளை பெற்ற ஆனந்தம்
களை வெட்டி உரம் வச்சு
கண்ணைபோல பாதுகாத்து
ஒட்டிப்போன வயிறோடு
மாடாக உழைச்சிடுவான்


போட்டதுல அரைவாசி
வேசையில கருகிடவே
கலங்காம அறுவடைய
காலத்துல செஞ்சிருவான்

அடிச்சு வச்ச மூட்டையெல்லாம்,
மனக்கணக்கு போட்டிடுவான்
வருசமெல்லாம் கஞ்சிக்கு வழியொன்னு தெரியுதுன்னு மனசுக்குள்ள மகிழ்ந்திடுவான்.,

வாங்க வந்த வியாபாரி விலையில்லனு சொல்லிப்போக,
நொந்து போயி போன விலைக்கு வித்திடுவான்
வாங்கியது வட்டிக்கு பத்தாம போகையிலே,
மனசுக்குள்ளே மருகிடுவான்.,

கடன்காரன் வாசலிலே
கத்திவிட்டு போகையிலே
வழியின்றி நிற்கையிலே
கண்ணில் படும் காளை மாடு,
கண்ணுக்குள்ள வச்சு வளத்த காளை இரண்டும் கடன்காரன் புடிச்சு போக
மரணவலி கொண்டிடுவான்

மானமுள்ள உழவன் மகன்
இருப்பதெல்லாம் போனாலும்,
உழவையவன் விடுவதில்லை.,
காஞ்சு போன காட்டுக்குள்ள காலாற நடந்திடுவான் அடுத்த பட்டம் வரட்டுமென்று ....


பட்டமுந்தான் வந்தபின்னும்
பருவமழை பொய்க்கையிலே
போக்கத்தை வாழ்க்கையெண்ணி அனுதினமும் அழுதிடுவான்.,

தண்ணி பாத்து நாளான வெடிச்சு
நிக்கும் மண்ணை பாத்து,
கண்ணீரைச் சிந்தியவன் கடைசியாக
கடன் கேட்டு,
நாலு முல கயிறு வாங்கி
நிக்க வச்ச கலப்பையிலே
தலைப்பாகம் பாத்துக்கட்டி
நாண்டுகிட்டு செத்துருவான் ....

அனுதாபம் தெரிவிச்சு அடுத்தநாளு செய்தியில 2 லட்சம் தருவோம்னு அரசாங்கம் அறிவிப்பு.,

சேர்ந்துச்சா பாத்தவன்தான் எவனுமில்ல ...
கொடுக்கும் 2 இலட்சம் போயி
வங்கியிலே வட்டி தரும்,
ஏர்க்கலப்பையில் மாட்டை
பூட்டி உழுதிடுமா???

அழிஞ்சு போகும் இனமுன்னு சில
விலங்குகளை பாதுகாக்க,
கோடிக்கணக்கில் செலவு பண்ணி
சரணாலயம் இருக்குதுங்க ... 
அழிஞ்சு போற எம் உழவன்
இனம் யாருக்கும் தெரியலயா?? ...

இந்த கவிதையை படித்த பின்பு நான் நிறய மாறியுள்ளேன் , எனது சிந்தனைகள் மற்றும் உழவர்களை பற்றிய கருத்து மாறியுள்ளது . எழுதியவருக்கு  மிக்க நன்றி.

Jan
1,
2018

புத்தாண்டு வாழ்த்துகள் -2018

|



இனிய வாசகர்களுக்கு

Click here to get more
உங்கள் அனைவருக்கும் எங்களது இனிய ஆங்கில புத்தாண்டு வாழ்த்துகள்.
அறிவுமதி மற்றும் நிலமகள்
Provided by MasterGreetings.com

Pages (150)1234 Next
Related Posts Plugin for WordPress, Blogger...

தலைப்புகள்

anicent tamil (4) Blog Tips (2) Computer (4) ILUSION (1) information (1) LPG சிலிண்டர் (1) safety (2) Short Cut Key (2) SMS (1) tamil (14) tamil friendship poem (2) tamil joke (7) tamil kathai (5) tamil story (6) tamil year (1) Welding Symbol (1) அபூர்வ தகவல் (2) ஆரோக்கியம் (16) ஆவணங்கள் (7) இதிகாசம் (1) இயற்கை (4) எச்சரிக்கை (4) எடக்கு-மடக்கு (2) எனது பதில்கள் மற்றும் அனுபவங்கள் (1) கணணி பராமரிப்பு (1) கதை (21) கம்ப்யூட்டர்வேலை (1) கலைஞர் (1) கவிதை (11) காமராஜர் (1) குண்டக்க-மண்டக்க (2) சாப்ட்வேர் மாப்பிள்ளை (1) சிந்தனை (4) செய்தி (13) செல்வம் (1) சேமிப்பு (1) தமிழர் பண்பாடு (6) தமிழ் (18) தமிழ் அளவை (2) தமிழ் அளவைகள் (1) தமிழ் ஆண்டுகள் (2) தமிழ் எண்கள் (1) தமிழ் எழுத்து (2) தமிழ் காலம் (2) தமிழ் பாட்டு (2) தமிழ் மருத்துவம் (6) தமிழ்நாடு அரசு பாடப் புத்தகங்கள் (1) தன்னம்பிக்கை (2) தீபம் (1) துணுக்கு (17) தெரிந்துகொள்வோம் (14) நகைச்சுவை (33) நகைச்ச்சுவை (5) நகைச்ச்சுவைகடிதம் (1) நட்பு (3) நட்பு கவிதை (2) படம் (1) படித்ததில் பிடித்தது (63) படித்தேன்-இரசித்தேன் (2) பணம் (2) பரோட்டா (1) பழமொழி (3) பழம்தமிழர் (1) பறவை (1) பாதுகாப்பு (2) பிரபலமானவர்களின் (4) பெண்பார்க்கும் படலம் (2) பெற்றோர் (2) பொங்கல் (1) பொழுதுபோக்கு (31) மகாபாரதம் (1) மகிழ்ச்சி (3) மாங்கல்யம் (1) மாய தோற்றம் (1) வரலாற்று நிகழ்வு (2) வலைப்பூ (1) வழி காட்டி (9) வழிகாட்டி (30) வாழ்கை (14) வாழ்க்கை (9) வாழ்த்துகள் (15) விவசாயம் (2) விவசாயி (1) வேலை (3)

Contact Form

Name

Email *

Message *

 

©2009 அறிவு களஞ்சியம் | Template Blue by TNB