திருக்குறள்

தேடல்

என்ன படிக்கனும்

|

சிரிக்க சிந்திக்க:

என் தம்பி: அண்ணே அடுத்தவாரம் +2 ரிசல்ட் வருது..
நானு: அதுக்கு என்னல தம்பி?

அடுத்தாப்ல என்ன படிக்கனும்னு தெரியலணே,
மொதல்ல ஒன்னோட ஆசையச் சொல்லுடே..

அண்ணே டாக்டருக்கு படிக்கவா?
ஏலேய், டாக்டராகி சேவை செய்வேனு பேட்டி மட்டும் தான் கொடுக்கத்தெரியும், ஆனா செய்யமாட்டிங்க, வேற சொல்லு..

அப்போ இன்ஜினியருக்கு படிக்கவா?
இன்ஜினியர் முடிச்சவன் வீட்ல நாலுபேரு கெடக்கானுவோடே..

அப்போ வக்கீலுக்கு படிக்கவாணே?,
ஏன்டா? ஏன்? நான் படுற பாடு போதாதா? (நோட் திஸ் பாய்ண்ட் ப்ரெண்ட்ஸ்) அட பொண்ணு கெடைக்காதுடா..

அப்போ பைலட்டுக்கு படிக்கட்டுமா?
ஏதுக்கு? உனக்கோ மேலே பார்த்தாலே பயம், பத்தாதற்கு அடிக்கடி நடு வானில் பிளேன காணலனு செய்தி வருது. அது சரியா இருக்காது...

அப்போ மரைன் ஓகேவா?
வேணாம்ல உனக்கு தண்ணியில கண்டம், நீச்சல் வேற தெரியாது..

பேசாம ராணுவத்துக்கு போகட்டுமாணே?
அதுக்கு நீ சரிபட்டு வரமாட்டல..

போலீசு வேலைக்காவது ட்ரை 
பன்னவாணே?
லஞ்சத்த வாங்கி தின்னுட்டு, பொம்பள போலீசு கூட போன்ல "ஒன்னு குடுக்கட்டுமா?னு" கேப்ப, வெளுத்துபுடுவேன் ரஸ்கல்..

அப்போ ஏதாவது டிகிரியவாது முடிக்கவாணே?
சத்தியமா வேலை கிடைக்காதுல, தமிழ் நாட்ல டிகிரி முடிச்சவன் ஒரு கோடி பேரு கெடக்கான்..

அண்ணே கேட்ரிங் ஓகேவா?

சமையல் செய்றதெல்லாம் கல்யாணம் முடிஞ்சதும் நீயே கத்துப்ப தம்பி, வேஸ்ட்ல..

டீ கடை வைக்கட்டுமாணே?
வேனாம் போயிடு, வாயில் ஏதாவது வந்துடும்.

LIC ஏஜெண்ட்டா ஆகட்டுமாணே?
ஏன்டா? எப்ப பார்த்தாலும் வாழ்வதற்கு வழி சொல்லாமல் சாவை பற்றியே பேச வேண்டுமா?

ஏதாவது சீட்டு கம்பேனி பிசினஸ் பன்னட்டுமா?
ஊர்துட்ட திங்க அலையாத, அது நல்லது இல்ல தம்பி..

ஏதாவது யாவாரம் பன்ன கடைய 
ஆரமிக்கட்டுமா?
இன்னொருத்தன் உழைச்சி தர்ரத உக்காந்த இடத்தில யாவாரம் பண்ணி திங்கலாம்னு பாக்க, "குண்டக்கா மண்டக்கா" திட்டீருவேன்..

வெளிநாட்டுக்கு போய் சம்பாதிக்கட்டுமாணே?
அங்க பாதி பேரு தாய், தகப்பனுக்காக கெடக்குறாங்கடா, மீதி பேரு தாய் நாட்டப்பத்தி கூட சிந்திக்க மாட்டானுங்கல..

யண்ணே அப்போ நான் என்னதான் பன்ன?

அந்தா கெடக்கு பாரு மம்புட்டி, அத தூக்கு, போய் வயல கொத்து, நாலு வருசம் நாயா கஷ்டப்படு, அடுத்த பத்து பத்து வருசத்து அப்புறம் நீ தான் சாமி எங்களுக்கு கடவுள்.

ஏன்ணே இப்புடி சொல்ற?
ஆமால தம்பி, எல்லா படிப்ப படிக்குறதுக்கும் ஆள் இருக்கு, ஆனா எல்லோரும் சாப்பிடுறதுக்கு விவசாயம் பன்ற ஆள் இல்லடே..

அப்புடி சொல்லாதணே நான் இருக்கேன்,
அப்புடி சொல்றா என் சிங்கக்குட்டி, தூக்குடா மம்புட்டிய, வாடா வயலுக்கு போவோம், உனக்கு நான் உதவி பன்றேன்டா..

விவசாயி_அழிந்தால் ? 
விவசாயம்_அழியும் ,
விவசாயம்_அழிந்தால் ? உலகமே_அழியும் .

சிரிப்போம் சிந்திப்போமுடன்
உங்க நண்பன்.

உலகப் புத்தக நாள்- 2024

|

உங்கள் அனைவருக்கும் எங்களது இனிய உலகப் புத்தக நாள் வாழ்த்துகள்! இன்று உலக புத்தக நாள் அல்லது உலகப் புத்தக மற்றும் பதிப்புரிமை நாள். (ஏப்ரல் 23)

ஒரு மனிதனுக்கு புத்தம்தான் சிறந்த தோழன் என்ற கூற்று உள்ளது. புத்தகங்கள், அவற்றின் அனைத்து வடிவங்களிலும், கற்றுக்கொள்ளவும் நம்மை நாமே அறிந்து கொள்ளவும் அனுமதிக்கின்றன. அவை நம்மை மகிழ்விப்பதோடு, உலகத்தைப் புரிந்துகொள்ளவும் உதவுகின்றன.

அறிவைப் பரப்புவதற்கும், உலகெங்கிலும் உள்ள பல்வேறு கலாசாரங்கள் பற்றிய விழிப்புணர்வினைப் பெறுவதற்கும், புரிதல், சகிப்புத்தன்மை போன்றவற்றின் மூலம் மனிதர்களின் ஒழுக்கத்தினை மேம்படுத்தவும், புத்தகம் ஒரு சிறந்த கருவியாக உள்ளதால் ஏப்ரல் 23 உலக புத்தக தினமாக கொண்டாட யுனெஸ்கோவின் 28வது மாநாட்டில் ஒரு தீர்மானம் நிறைவேற்றப்படது.

இந்த நாளில் மற்றொரு கவனிக்க தகுந்த விஷயமாக உலகின் சிறந்த எழுத்தாளர்களான வில்லியம் சேக்ஸ்பியர், பிரபல ஸ்பானிஷ் வரலாற்று ஆசிரியர் இன்கா கார்சிலாசோ டி லா வேகா ஆகியோரின் நினைவு நாளாக அமைந்துள்ளது. அதுமட்டுமில்லாமல் உலக அளவில் புகழ் பெற்ற பிரபல எழுத்தாளர்களான மாரிஸ் ட்ரூன், ஹால்டோர் கே. லக்ஸ்னஸ், விளாடிமிர் நபோகோவ் மற்றும் மானுவல் மெஜியா வலேஜோ ஆகியோரின் பிறந்தநாளாக உள்ளது.

ஒரு புத்தகம் 100 நண்பர்களுக்கு சமம் போன்றது. நமக்கு தெரியாத அனைத்து விஷயங்களையும் ஒரு புத்தகத்தில் நாம் தெரிந்துக்கொள்ளலாம். கல்வி கற்பது ஒருநாளும் வீண்போவதில்லை. இந்தியா உள்ளிட்ட 100-ற்கும் மேற்பட்ட நாடுகளில் புத்தக தினம் கொண்டாடப்படுகிறது.

எனது சிறு வயது முதல் எனக்கு இருந்த ஆசைகளில் ஒன்று எனது சொந்த வீட்டில் ஒரு புத்தக அலமாரியை வைக்க வேண்டும் என்பதே அவ்வாறே எனக்கு வசதிகள் வந்த பின்பு கட்டிய வீட்டில் புத்தக அலமாரியை ஒன்றையும் அமைத்துக் கொண்டேன்.

இன்று முதல் படித்தேன்-இரசித்தேன் என்ற தலைப்புகளின் கீழ் நான் படித்து ரசித்த (வரலாற்று நூல்கள், சுயசரிதைகள், அரசியல் மற்றும் சமூக நூல்கள்) மேற்கோள்களையும் கருத்துக்களையும் உவமைகளையும் பழமொழிகளையும் உங்களுடன் பகிர்ந்து கொள்வதில் மிகுந்த ஆனந்தம் அடைகிறேன்.

படித்தேன்-இரசித்தேன்

1. "வாதம் பலவீனப்படும்போதுதான் வாதிப்பவனுக்குக் கோபம் வரும். விவாதம் புரியும் இருவரில் யாருக்கு முதலில் கோபம் வருகிறதோ, அவன் தோல்வியடையத் தொடங்குகிறான்".

2. “உலகத்திலுள்ள அத்தனை காவல்காரர்களும் தங்கள் கண்முன் நடமாடுகிற எல்லோரையும் திருடர்கள் என்று சந்தேகப்படுகிறார்கள். அதேபோல் உலகத்திலுள்ள அத்தனை திருடர்களும் தங்களை உற்றுப்பார்கிற எல்லோரையும் காவற்காரர்கள் என்று பயப்படுகிறார்கள்.

3. "ஒரு மொழியை அவசியத்துக்காக யார் வேண்டுமானாலும் கற்கலாம். ஆனால் நயங்களையும், சமத்காரங்களையும் உண்டாக்கி அணி நலம்பட எழுதவோ பேசவோ அதை தாய் மொழியாகக் கொண்டவர்களால் தான் முடியும்"..

தமிழ் புத்தாண்டு- குரோதி

|

உங்கள் அனைவருக்கும் எங்களது இனிய  குரோதி ஆண்டின் தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்!

இந்த புத்தாண்டு உங்கள் வாழ்வில்

மகிழ்ச்சி, செழிப்பு, அமைதி

நிறைந்ததாக அமைய

இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்

இப்படிக்கு 

அறிவுமதி மற்றும் நிலாமகள் 

இந்த ஆண்டின் இந்த நேரத்தில் தங்கள் பாரம்பரிய புத்தாண்டைக் கொண்டாடும் பிராந்தியங்களைப் பற்றிய ஒரு சுவாரஸ்யமான தகவல் இது. குறிப்பாக வரைபடத்தில் உள்ள பல்வேறு பகுதிகளுக்கு இடையே உள்ள புவியியல் இணைப்பு சுவாரஸ்யமானது.

இந்தியாவில் மட்டுமின்றி, Vaisakhi வைசாகி (பஞ்சாப்), Poyla Boishakh பொய்லா பொய்ஷாக் (வங்காளம்), தமிழ் புத்தாண்டு, Rongali Bihu ரோங்காலி பிஹு (அஸ்ஸாம்), Bishu பிஷு (ஒடிசா),Vishu விஷு (கேரளா), Jud Sheetal ஜூட் ஷீடல் (பீகார்) ஆகியவை புத்தாண்டாகக் கொண்டாடப்படுகின்றன. சூரிய நாட்காட்டி, ஆனால் பங்களாதேஷ், நேபாளம், இலங்கை, மியான்மர், லாவோஸ், கம்போடியா மற்றும் தாய்லாந்து போன்ற தெற்கு மற்றும் தென்கிழக்கு ஆசியாவில் உள்ள பிற பகுதிகளும் இந்த முறை புத்தாண்டைக் கொண்டாடுகின்றன.

985 மற்றும் 1014 க்கு இடையில் சோழ சாம்ராஜ்யத்தின் பேரரசர் முதலாம் ராஜ ராஜ சோழனின் ஆட்சியின் தடயங்கள் பற்றிய மிகவும் சுவாரஸ்யமான வரலாற்று ஆதாரங்களை இது வழங்குகிறது.

Related Posts Plugin for WordPress, Blogger...

தலைப்புகள்

anicent tamil (4) Blog Tips (2) Computer (4) ILUSION (1) information (1) LPG சிலிண்டர் (1) safety (1) Short Cut Key (2) SMS (1) tamil (14) tamil friendship poem (2) tamil joke (7) tamil kathai (5) tamil story (6) tamil year (1) Welding Symbol (1) அபூர்வ தகவல் (1) ஆரோக்கியம் (15) ஆவணங்கள் (7) இயற்கை (4) எச்சரிக்கை (3) எடக்கு-மடக்கு (1) கணணி பராமரிப்பு (1) கதை (21) கம்ப்யூட்டர்வேலை (1) கலைஞர் (1) கவிதை (11) குண்டக்க-மண்டக்க (1) சாப்ட்வேர் மாப்பிள்ளை (1) சிந்தனை (3) செய்தி (12) தமிழர் பண்பாடு (5) தமிழ் (15) தமிழ் அளவை (2) தமிழ் அளவைகள் (1) தமிழ் ஆண்டுகள் (2) தமிழ் எண்கள் (1) தமிழ் எழுத்து (2) தமிழ் காலம் (2) தமிழ் பாட்டு (2) தமிழ் மருத்துவம் (6) தமிழ்நாடு அரசு பாடப் புத்தகங்கள் (1) தன்னம்பிக்கை (2) தீபம் (1) துணுக்கு (16) தெரிந்துகொள்வோம் (9) நகைச்சுவை (31) நகைச்ச்சுவை (5) நகைச்ச்சுவைகடிதம் (1) நட்பு (3) நட்பு கவிதை (2) படம் (1) படித்ததில் பிடித்தது (57) படித்தேன்-இரசித்தேன் (1) பணம் (1) பரோட்டா (1) பழமொழி (1) பழம்தமிழர் (1) பறவை (1) பாதுகாப்பு (2) பிரபலமானவர்களின் (3) பெண்பார்க்கும் படலம் (1) பெற்றோர் (1) பொங்கல் (1) பொழுதுபோக்கு (28) மகிழ்ச்சி (3) மாங்கல்யம் (1) மாய தோற்றம் (1) வரலாற்று நிகழ்வு (2) வலைப்பூ (1) வழி காட்டி (9) வழிகாட்டி (30) வாழ்கை (14) வாழ்க்கை (9) வாழ்த்துகள் (15) விவசாயம் (2) விவசாயி (1) வேலை (3)
 

©2009 அறிவு களஞ்சியம் | Template Blue by TNB