சிரிக்க சிந்திக்க:
என் தம்பி: அண்ணே அடுத்தவாரம் +2 ரிசல்ட் வருது..
நானு: அதுக்கு என்னல தம்பி?
அடுத்தாப்ல என்ன படிக்கனும்னு தெரியலணே,
மொதல்ல ஒன்னோட ஆசையச் சொல்லுடே..
மொதல்ல ஒன்னோட ஆசையச் சொல்லுடே..
ஏலேய், டாக்டராகி சேவை செய்வேனு பேட்டி மட்டும் தான் கொடுக்கத்தெரியும், ஆனா செய்யமாட்டிங்க, வேற சொல்லு..
அப்போ இன்ஜினியருக்கு படிக்கவா?
இன்ஜினியர் முடிச்சவன் வீட்ல நாலுபேரு கெடக்கானுவோடே..
அப்போ வக்கீலுக்கு படிக்கவாணே?,
ஏன்டா? ஏன்? நான் படுற பாடு போதாதா? (நோட் திஸ் பாய்ண்ட் ப்ரெண்ட்ஸ்) அட பொண்ணு கெடைக்காதுடா..
ஏதுக்கு? உனக்கோ மேலே பார்த்தாலே பயம், பத்தாதற்கு அடிக்கடி நடு வானில் பிளேன காணலனு செய்தி வருது. அது சரியா இருக்காது...
வேணாம்ல உனக்கு தண்ணியில கண்டம், நீச்சல் வேற தெரியாது..
அதுக்கு நீ சரிபட்டு வரமாட்டல..
போலீசு வேலைக்காவது ட்ரை பன்னவாணே?
லஞ்சத்த வாங்கி தின்னுட்டு, பொம்பள போலீசு கூட போன்ல "ஒன்னு குடுக்கட்டுமா?னு" கேப்ப, வெளுத்துபுடுவேன் ரஸ்கல்..
சத்தியமா வேலை கிடைக்காதுல, தமிழ் நாட்ல டிகிரி முடிச்சவன் ஒரு கோடி பேரு கெடக்கான்..
சமையல் செய்றதெல்லாம் கல்யாணம் முடிஞ்சதும் நீயே கத்துப்ப தம்பி, வேஸ்ட்ல..
டீ கடை வைக்கட்டுமாணே?
வேனாம் போயிடு, வாயில் ஏதாவது வந்துடும்.
LIC ஏஜெண்ட்டா ஆகட்டுமாணே?
ஏன்டா? எப்ப பார்த்தாலும் வாழ்வதற்கு வழி சொல்லாமல் சாவை பற்றியே பேச வேண்டுமா?
ஊர்துட்ட திங்க அலையாத, அது நல்லது இல்ல தம்பி..
ஏதாவது யாவாரம் பன்ன கடைய ஆரமிக்கட்டுமா?
இன்னொருத்தன் உழைச்சி தர்ரத உக்காந்த இடத்தில யாவாரம் பண்ணி திங்கலாம்னு பாக்க, "குண்டக்கா மண்டக்கா" திட்டீருவேன்..
வெளிநாட்டுக்கு போய் சம்பாதிக்கட்டுமாணே?
அங்க பாதி பேரு தாய், தகப்பனுக்காக கெடக்குறாங்கடா, மீதி பேரு தாய் நாட்டப்பத்தி கூட சிந்திக்க மாட்டானுங்கல..
யண்ணே அப்போ நான் என்னதான் பன்ன?
அந்தா கெடக்கு பாரு மம்புட்டி, அத தூக்கு, போய் வயல கொத்து, நாலு வருசம் நாயா கஷ்டப்படு, அடுத்த பத்து பத்து வருசத்து அப்புறம் நீ தான் சாமி எங்களுக்கு கடவுள்.
ஆமால தம்பி, எல்லா படிப்ப படிக்குறதுக்கும் ஆள் இருக்கு, ஆனா எல்லோரும் சாப்பிடுறதுக்கு விவசாயம் பன்ற ஆள் இல்லடே..
அப்புடி சொல்றா என் சிங்கக்குட்டி, தூக்குடா மம்புட்டிய, வாடா வயலுக்கு போவோம், உனக்கு நான் உதவி பன்றேன்டா..
0 comments:
Post a Comment