Welcome to Arivu's Collection

இனிய மாலைப் பொழுதில், இந்த வலைப் பக்கத்திற்கு வந்ததற்கு - நன்றி

திருக்குறள்

தேடல்

Jul
29,
2012

நெல்லிக்காய்

|

பெரிய நெல்லிக்காய் எனப்படும் துவர்ப்பு குணம் கொண்ட நெல்லிக்கனி தான் நம் முன்னோர் நமக்காக பரிந்துரைத்தது. முதலில் துவர்தாலும பின் வாயில் ஒரு இனிப்பு சுவையை நமக்கு அது தரும்.
நம் நாட்டுப் பெண்கள் அனைவருக்கும் ஹீமோகுளோபின், பத்து மி.கி.,க்கும் குறைவு. நெல்லிக்காய் தொடர்ந்து சாப்பிட்டு வந்தால், ஒரே மாதத்தில், 3-4 மி.கி., வரை கூடுவது கண் கூடாக கண்ட உண்மை.
சர்க்கரை வியாதி உள்ள ஆண்கள் நெல்லிக்காய் சாப்பிட்டால், "இல்வாழ்க்கை' மிகவும் சந்தோஷமாக இருக்கும்
இந்த நெல்லிகாய் பொடியை முந்தின நாள்  சிறிது தண்ணிரில் ஊற வைத்து, மறுநாள் தலையில் தேய்த்து குளித்தால் முடி உதிராது
நெல்லிக்காயை கொட்டையை நீக்கிவிட்டு மிக்சியில் போட்டு ஜூஸ் செய்து (இரண்டு நெல்லிக்காய்) இருவர் சாப்பிடலாம். சர்க்கரை வியாதி உள்ளவர் என்றால், இனிப்பு சேர்க்காமல் சாப்பிடலாம் அல்லது நீராவியில் வேக வைத்து, மிகவும் பொடியாக நறுக்கி, நாட்டுச் சர்க்கரையில் சுக்கு, ஏலம் சேர்த்து நன்கு கிளறி, சுருள் பதம் வந்தவுடன் இறக்கி, பிரிட்ஜில் ஆறு மாதம் வரை வைத்திருந்தாலும் கெட்டுப் போகாது. தினமும் ஒன்று அல்லது இரண்டு மேஜைக்கரண்டி அளவு வீட்டில் உள்ளவர்கள் அனைவரும் சாப்பிடலாம்.

நெல்லிக்காய் நிறைய கிடைக்கும் போது நெல்லிக்காயை சிறு துண்டாக வெட்டி, வற்றல் போல் செய்தும் வைத்து கொள்ளலாம். பின் இதை தேனில் ஊற வைத்து வெறும் வயரில் சாப்பிட எந்நாளும் இளமையாய் தோற்றம் தரும்.
நெல்லிக்காயை ஜாம், மோர், துவையல், ஊறுகாய் , ரசம், குழம்பு என்று பலவாறு சமைத்து உண்ணலாம்
சின்ன நெல்லிக்காய் அதிக மருத்துவ குணம் இல்லாதது. ஆனால் வைட்டமின் C நிறைய உண்டு என்பதால் அதையும் ஊறுகாய் செய்து அல்லது பச்சையாய் கூட சாப்பிடலாம்
ஆம்லா பொடி என்று சில இடங்களில் இதை பொடியாக விற்பார்கள். அந்த பொடியை முந்தின நாள் ஊற சிறிது தண்ணிரில் ஊற வைத்து, மறுநாள் தலையில் தேய்த்து குளித்தால் முடி உதிராது. இந்த பொடியை மோரில் கலந்தும் குடிக்கலாம்.

அமிர்தத்திற்கும் மேலானது நெல்லிக்கனி இதனை எப்படி பக்குவபடுதினாலும் இதன் மருத்துவ குணம் குறையாது என்பதே இதன் சிறப்பு. தமிழ் மருத்துவம் பெரிய நெல்லிக்காயை உபயோகிக்க சொல்லுகிறது.

Jul
14,
2012

புதுப்புது வரி யோசனை

|

"பெண்களுக்கெல்லாம் அழகு வரி போடலாம்; ஏராளமாக பணம் சேரும்! அந்தந்தப் பெண்ணையே அவள் அழகுக்கு மதிப்பு போடும்படி சொல்லிவிட வேண்டும். மதிப்பின் உயர்வுக்கு ஏற்ப வரியையும் உயர்த்திப் போட வேண்டும். தன் அழகு விஷயத்தில் எந்தப் பெண்ணும் குறைச்சலா மதிப்புப் போடவே மாட்டாள்; தாராளமாக நடந்து கொள்வாள்...'எப்படி?

Jul
7,
2012

வாழ்கையை சுமூகமாக சந்தோசமாக ஓட்ட 30 வழிகள்

|

மற்றவர்களை புண் படுத்தாமல் நம் வாழ்க்கையை சந்தோசமாக நடத்த



1. ஒரு நாளைக்கு ஒரு முறையாவது வாய் விட்டு சிரியுங்கள்

2. குறைந்த பட்சம் எட்டு டம்ளர் தண்ணீர் குடியுங்கள்.

3. நீங்கள் விரும்பும் புத்தகத்தை படிக்க பழகிக் கொள்ளுங்கள்.

4. செய்யக் கூடாது என்று நினைக்கும் செயலை முடிந்த வரை கொஞ்சமாவது செய்ய மனதை பழகிக் கொள்ளுங்கள்.

5. நீண்ட நாளைய பழகிய நண்பர்களை அடிக்கடி சந்தித்து பேசி, உங்கள் பசுமையான பழைய நினைவுகளை ஞாபகப்படுத்திக் கொள்ளுங்கள்.

6. இது வரை நீங்கள் அறிந்திராத ஒரு நாட்டைப் பற்றிய புது விஷயங்களை பற்றி அறிந்து கொள்ள முயற்சி செய்யுங்கள்.

7. ஒவ்வொரு நாளும் நடைப் பயிற்சியை மேற்கொள்ளுங்கள்.

8. ஒரு நாளைக்கு குறைந்த பட்சம் ஐந்து பழத்துண்டுகளையோ, காய்கறிகளையோ, விரும்பி உண்ண பழகுங்கள்.

9. நீங்கள் பகிர்ந்து கொள்ள வேண்டிய விஷயங்களை நீங்கள் விரும்புகின்றவர்களிடமோ, அல்லது நெருக்கமானவர்களிடமோ, மனதார பகிர்ந்து கொள்ளுங்கள்.

10. உங்களுக்கு பிடித்த, உங்களை கவர்ந்த கவிதைகளை அடிக்கடி நினைத்து பார்த்து பரவசமடையுங்கள்

11) அனைவரையும் மகிழ்ச்சி அடையச் செய்யுங்கள் – நீங்கள் மற்றவர்களுக்கு அளிப்பதே உங்களுக்குத் திரும்பி வருகிறது.

12) நீங்கள் சந்திக்கும் ஒவ்வொருவரையும் மனதாரப் பாராட்டுங்கள் – பாராட்டுக்களால் மகிழ்வுறுவது ஒரு இயற்கையான மனித சுபாவம்.

13) மன்னிப்பைக் கேட்குமுன்பே மன்னித்து விடுங்கள் – இரவு உறங்கு முன்பு தனக்கு எதேனும் தவறு இழைதவர்களை மனதார மன்னித்து விடுங்கள்.

14) எவரைப் பற்றியும் விரோத மனப்பான்மையை வளர்த்துக் கொள்ளாதீர்கள்.

15) மனத்தை ஒரு குப்பையாக வைத்துக் கொள்ளாமல் தூய்மையாக வைத்துக் கொள்ளுங்கள் – எதிர்மறையான எண்ணங்கள், பொறாமை, பேராசை, கோபம் ஆகியவை துன்பம் விளைவிக்கும்.

16) எது நடக்கிறது என்பதைவிட நடந்ததை நாம் எவ்வாறு அணுகுகிறோம் என்பதே முக்கியம் – சில நடப்புக்களை நம்மால் தவிர்க்க முடியாது. ஆனால் அதை எப்படி எதிர்கொள்கிறோம் என்பதுதான் வாழ்க்கையின் நிம்மதியை நிச்சயிக்கிறது.

17) நல்லது நடக்குமென்றே நம்புவோம் ஆனால் மோசமானவை நடந்தாலும் அதை எதிர்கொள்ளத் தயாராக இருப்போம்.

18) குழந்தைகளிடம் தன்னுடைய பெற்றோர்கள் எப்போதும் தங்களிடம் அக்கறை காட்டவும், வழிகாட்டவும் இருக்கிறார்கள் என்ற முறையில் பழக வேண்டும்.

19) மனதையும் உடலையும் ஆரோக்கியமாகவும் வலிமையாகவும் வைத்துக் கொள்ளவேண்டும்.

20) நாம் எப்போதுமே வெற்ற்¢ பெற்றுக் கொண்டிருக்க முடியாது என்பதை உணர்ந்துகொள்ள வேண்டும்.

21) நண்பர்கள் வாழ்கையில் முக்கியமானவர்கள்.

22) மனிதன் என்பவன் நல்லது கெட்டது கலந்த ஒரு கலவை. ஒவ்வொரு மனிதனுக்கும் ஒரு தனித்துவம் உண்டு. இதைப் புரிந்து கொண்டு நாம் சாதனையை நோக்கி நடையிடவேண்டும்.

23) உங்கள் மீது நம்பிக்கை வையுங்கள். ஆனால் உங்களுடைய குறைபாடுகளையும் புரிந்து கொள்ளுங்கள்.

24) மற்றவர்களிடம் நல்லதையே பாருங்கள் – குறைகளைப் பெரிது படுத்தாதீர்கள்.

25) அச்சம் தவிருங்கள்.

26) இறைவனின் அருளால் எல்லாமே சாத்தியம்தான்.

27) நாளை நடப்பதைப் பற்றிக் கவலையுறாமல் இறைவன் உடன் இருக்கிறான் என்பதை நம்புங்கள்.

28) ஹாஸ்ய உணர்ச்சியை வளர்த்துக் கொள்ளுங்கள். சிரித்து வாழக் கற்றுக்கொள்ள வேண்டும். மற்றவர்களோடு இணைந்து ஒண்றாகச் சிரித்து வாழ வேண்டும். ஆனால் மற்றவர்க¨ளைப் பார்த்து நகைக்கக்கூடாது.

29) வெற்றி என்பது பணத்தினாலோ, பொருள்களினாலோ அளவிடப்படுவதில்லை. மகிழ்ச்சி என்பது நம் மனதின் நிலையைப் பொறுத்தே இருக்கிறது.

30) எந்த நிலையிலும் இறைவனை மனதார நினையுங்கள்

Pages (150)1234 Next
Related Posts Plugin for WordPress, Blogger...

தலைப்புகள்

anicent tamil (4) Blog Tips (2) Computer (4) ILUSION (1) information (1) LPG சிலிண்டர் (1) safety (2) Short Cut Key (2) SMS (1) tamil (14) tamil friendship poem (2) tamil joke (7) tamil kathai (5) tamil story (6) tamil year (1) Welding Symbol (1) அபூர்வ தகவல் (2) ஆரோக்கியம் (16) ஆவணங்கள் (7) இதிகாசம் (1) இயற்கை (4) எச்சரிக்கை (4) எடக்கு-மடக்கு (2) எனது பதில்கள் மற்றும் அனுபவங்கள் (1) கணணி பராமரிப்பு (1) கதை (21) கம்ப்யூட்டர்வேலை (1) கலைஞர் (1) கவிதை (11) காமராஜர் (1) குண்டக்க-மண்டக்க (2) சாப்ட்வேர் மாப்பிள்ளை (1) சிந்தனை (4) செய்தி (13) செல்வம் (1) சேமிப்பு (1) தமிழர் பண்பாடு (6) தமிழ் (18) தமிழ் அளவை (2) தமிழ் அளவைகள் (1) தமிழ் ஆண்டுகள் (2) தமிழ் எண்கள் (1) தமிழ் எழுத்து (2) தமிழ் காலம் (2) தமிழ் பாட்டு (2) தமிழ் மருத்துவம் (6) தமிழ்நாடு அரசு பாடப் புத்தகங்கள் (1) தன்னம்பிக்கை (2) தீபம் (1) துணுக்கு (17) தெரிந்துகொள்வோம் (14) நகைச்சுவை (33) நகைச்ச்சுவை (5) நகைச்ச்சுவைகடிதம் (1) நட்பு (3) நட்பு கவிதை (2) படம் (1) படித்ததில் பிடித்தது (63) படித்தேன்-இரசித்தேன் (2) பணம் (2) பரோட்டா (1) பழமொழி (3) பழம்தமிழர் (1) பறவை (1) பாதுகாப்பு (2) பிரபலமானவர்களின் (4) பெண்பார்க்கும் படலம் (2) பெற்றோர் (2) பொங்கல் (1) பொழுதுபோக்கு (31) மகாபாரதம் (1) மகிழ்ச்சி (3) மாங்கல்யம் (1) மாய தோற்றம் (1) வரலாற்று நிகழ்வு (2) வலைப்பூ (1) வழி காட்டி (9) வழிகாட்டி (30) வாழ்கை (14) வாழ்க்கை (9) வாழ்த்துகள் (15) விவசாயம் (2) விவசாயி (1) வேலை (3)

Contact Form

Name

Email *

Message *

 

©2009 அறிவு களஞ்சியம் | Template Blue by TNB