
பச்சைப்பயறு, கொண்டக்கடலை, வெந்தயம், எள்ளு, வேர்க்கடலை, சூரியகாந்தி
விதை, வெள்ளரி விதை, கொள்ளு,
கறுப்பு உளுந்து போன்ற தானியங்களை
வீட்டிலேயே முளைக்கச் செய்து சாப்பிடுவதுதான், முளைதானிய
உணவு எனப்படும் இயற்கை உணவாகும்.
இந்த தானியங்களை நன்றாக கழுவி, 8 மணி
நேரம் ஊற வைத்து, பின்
ஈரமான பருத்தி துணியில் சுற்றி
வைத்து விட்டால், 8 - 10 மணிக்குள் தானியம் முளைவிட்டு இருக்கும்.
(இப்போது இந்த வேலையைச் செய்யும்,
"ஸ்பிரவுட்ஸ் மேக்கர்' என்ற பிளாஸ்டிக் டப்பாக்கள்
விற்கப்படுகின்றன). இப்படி தயாரான இந்த
தானியத்துடன் விருப்பம் போல தேங்காய், வெல்லம்,
தக்காளி, வெங்காயம், மிளகுத்தூள் ஆகியவைகளை சேர்த்தோ, சேர்க்காமாலோ சாப்பிட வேண்டியதுதான்.
இந்த தானிய உணவானது ஆரோக்கியத்தையும்,
அளவற்ற சக்தியையும் அள்ளித்தரும் மலிவான, உன்னதமான உயிர்
உணவு.
இதன் பயனை உணர்ந்து கொண்டால்,
கட்டாயம் உங்கள் குடும்ப உணவாகவே
மாறி விடும். இந்த முளை
தானியத்தில் இருந்து முளை தானியக்
கஞ்சி, சப்பாத்தி, தோசை, அடை போன்ற
உணவுகளையும் தயாரித்து, சாப்பிடலாம்.
இந்த உணவின் மூலம் புரதம்,
கால்சியம், சோடியம், இரும்புத்தாது, பொட்டாசியம், பாஸ்பரஸ் போன்றவைகள் கூடுதலாக கிடைப்பதுடன், விட்டமின் ஏ, பி1, பி2
போன்றவையும் அபரிமிதமாக கிடைக்கிறது.

முளைவிட்ட பச்சைப்பயிறு சாப்பிட்டால், சர்க்கரை நோய் கட்டுப்பாட்டில் இருக்கும்.
முளைவிட்ட கோதுமை சாப்பிட்டால், புற்றுநோய்
மட்டுப்படும். முளைவிட்ட எள்ளு சாப்பிட்டால், ஒல்லியானவர்களுக்கு
உடல் போடும், கண்பார்வை மேம்படும்.
முளைவிட்ட கொண்டக்கடலையை விளையாட்டு வீரர்கள் மற்றும் கடினமான உடல்
உழைப்பாளிகள் அதிகம் சாப்பிடலாம். காரணம்,
தங்களது சக்தி குறையாமல் பார்த்துக்
கொள்ளலாம். முளைவிட்ட கறுப்பு உளுந்து, தாய்ப்பால்
சுரப்பை அதிகரிக்க செய்யும். முளைவிட்ட கொள்ளு சாப்பிட்டால், உடல்
பருமன் குறையும், மூட்டுவலி தீரும்.இன்னும், இன்னும்
இப்படி எத்தனையோ மகத்துவத்தை செய்யவல்லதுதான் முளைவிட்ட தானியங்கள்.
இப்படி நோய்களை தீர்ப்பது மட்டுமல்ல,
எந்தவித நோய்களும் வராமல் தடுக்கும் சக்தியும்
இந்த முளைவிட்ட தானியங்களுக்கு அதிகம் உண்டு. இருந்தும்
இந்த முளைவிட்ட தானியம் மக்களிடம் பிரபலமடையாத
தற்கு காரணம், வேகமான உலகில்
நாம் இருப்பதுதான். இதற்காக கொஞ்சம் மெனக்கெட
வேண்டும். ஆனால், அதற்கு யாரும்
தயாராக இல்லை. ஒரே வார்த்தைதான்,
நீங்கள் உங்கள் உடலின் நண்பன்
என்றால் மெனக்கெடலாம். இல்லை, எதிரி என்றால்
விருப்பம் போல இருந்து கொள்ளுங்கள்.