திருக்குறள்
தேடல்
Jul15,2024
கல்லாமை - காமராஜர்
Labels: காமராஜர், செய்தி, படித்ததில் பிடித்தது, பிரபலமானவர்களின் | author: S. Arivazhagan
Jul7,2024
மனசை Control பண்றது கஷ்டம்..
Labels: எடக்கு-மடக்கு, குண்டக்க-மண்டக்க, நகைச்சுவை, படித்ததில் பிடித்தது | author: அறிவுமதிபோன வாரம் யோகா கிளாஸ்க்கு போயிருந்தேன்...
முதல் நாள் :
எங்க குரு மனசை பத்தி Class எடுத்திட்டு இருந்தார்..
நம்ம உடம்பை Control பண்றதை விட.,
மனசை Control பண்றது கஷ்டம்..
ஏன்னா நம்ம மனசு சாமி கும்பிடும் போது
வெளியில விட்ட செருப்பை நினைக்கும்..
விரதம் இருக்கும் போதுதான் பிரியாணியபத்தி நினைக்கும்..
இதுக்கு எங்க குரு சொன்ன ஒரு உதாரணம்..
நீங்க ஒரு காரை Start பண்றீங்க..
ஆனா அந்த கார்...
Right-ல திருப்பினா - Left-ல போகுது.,
Left-ல திருப்பினா - Right-ல போகுது.,
Gear-ஐ முன்னாடி போட்டா - பின்னாடி போகுது..,
பின்னாடி போட்டா - முன்னாடி போகுது..,
அப்ப நீங்க என்ன பண்ணுவீங்கன்னு கேட்டார்..
மெக்கானிக்கிட்ட விடுவேன்னு ஒருத்தரும்..,
காரை விட்டு இறங்கிடுவேன்னு இன்னொருத்தரும் சொன்னாங்க..
அந்த காரை வித்திடுவேன்னு மற்றொருவரும் சொன்னாங்க..
ஆனா எங்க குருவோ..,
" Brake போட்டு காரை முதல்ல நிறுத்தணும்..! "
அதுதான் நீங்க உடனடியா செய்ய வேண்டியதுன்னு சொன்னார்..
அப்ப பக்கத்துல இருந்தவர் கிட்ட கிசுசிசுன்னு ஒன்னு கேட்டேன் ... அவர் அப்படியே ஷாக் ஆயிட்டார்..
அப்ப குரு பார்த்துட்டார்..
என்ன கேட்டேனா.. ?
" ஏன் சார்.. அந்த டப்பா கார்ல ப்ரேக் மட்டும் ஒழுங்கா வேலை செய்யுமா..?
நிக்கிறதுக்கு பதிலா வேகமா போயிடிச்சின்னா என்ன பண்றதுன்னு? "
இப்ப முதல்ல வாயை Control பண்ணுறது எப்படின்னு பயிற்சி நடக்குது .,😜