பதினாறும் பெற்று பெருவாழ்வு வாழ்க! - பழமொழி
பொருள்:
மணமான பின் பதினாறு குழந்தைகளை பெற்று வளமான வாழ்க்கை வாழ வேண்டும் என ஆசிர்வாதம் செய்வார்கள்.
உண்மையான பொருள்;
வாழ்க்கையில் பதினாறு வகையான செல்வங்களான
1.உடலில் நோயின்மை,
2.நல்ல கல்வி,
3. தீதற்ற செல்வம்,
4. நிறைந்த தானியம்,
5. ஒப்பற்ற அழகு,
6. அழியாப் புகழ்,
7. சிறந்த பெருமை,
8. சீரான இளமை,
9. நுண்ணிய அறிவு,
10. குழந்தைச் செல்வம்,
11. நல்ல வலிமை,
12. மனத்தில் துணிவு,
13. நீண்ட வாழ்நாள் (ஆயுள்),
14. எடுத்த காரியத்தில் வெற்றி
15. நல்ல ஊழ் (விதி),
மற்றும்
16. இன்பு நுகர்ச்சி
பெற்று வளமாக வாழுங்கள் என்று பொருள்.