Welcome to Arivu's Collection

திருக்குறள்

தேடல்

பிறருக்கு கேடு நினைத்தால்

|


ஒரு ஊரில் ஒரு ராஜா. அந்த ராஜாவின் சபையில் பல பண்டிதர்கள், வித்வான்கள், புலவர்கள்... இவர்களுக்கெல்லாம் ராஜா சம்பளம், சன்மானம் எல்லாம் கொடுப்பதுண்டு. அதேபோல ராஜாவுக்கு சலவைக்கு, ஸ்நானம் செய்து வைக்க, சவரம் செய்ய, எண்ணை தேய்க்க என சில தொழிலாளிகள் இருந்தனர்.
ராஜாவுக்கு எண்ணை தேய்க்கும் தொழிலாளிக்கு, அங்கிருக்கும் வித்வானை கண்டால் பிடிக்காது. அந்த வித்வானை ஒழித்துவிட வேண்டும் என்று தோன்றியது.
 
ஒரு நாள், ராஜாவுக்கு எண்ணை தேய்க்கும்போது, "மகாராஜா... எனக்கு ஒரு குறை இருக்கிறது!' என்று சொல்லி, கும்பிடு போட்டான். ராஜாவும், "என்ன அது?' என்று கேட்டார். "பெரிய ராஜாவுக்கு நான் தான் எண்ணை தேய்ப்பது வழக்கம். நான் இல்லாவிட்டால், அவர் எண்ணை ஸ்நானமே செய்யமாட்டார். சொர்க்கத்தில் அவருக்கு எண்ணை தேய்க்கின்றனரோ, என்னவோ; அதுதான் என் குறை!' என்றான்.
 
"அதற்கு என்ன செய்ய வேண்டும்?' என்று கேட்டார் ராஜா. "நம்ம சபையிலே ஒரு வேத சாஸ்திர வித்வான் இருக்கிறாரே... அவருக்குத் தான் எல்லாம் தெரியுமே... அவரை மேல் உலகத்துக்கு அனுப்பி, பெரிய ராஜா எப்படி இருக்கிறார் என்று பார்த்து வரச் சொல்லலாமே!' என்றான்.
 
ராஜாவும், "... அப்படியா? சரி... நான் நாளைக்கே அவரிடம் சொல்லி, போய் வரச் சொல்கிறேன்!' என்றார். எண்ணை தேய்ப்பவனுக்கோ சந்தோஷம். வேத வித்வானிடம் விஷயத்தைச் சொன்னார் ராஜா.
 
வித்வான் யோசித்தார். "சரி... இது அந்த எண்ணை தேய்ப்பவனின் வேலை தான்!' என்று யூகித்துக் கொண்டார். "அப்படியே ஆகட்டும் மகாராஜா... அதற்கு வேண்டிய ஏற்பாடுகளை செய்யுங்கள். இடுகாட்டில் ஒரு தளம் அமைக்கச் சொல்லுங்கள். நல்ல நாள் பார்த்து, நான் அதில் படுத்துக் கொள்வேன். சிதை அடுக்கி நெருப்பு வைத்து விடுங்கள்.
 
"பிறகு எட்டு நாட்கள் கழித்து நான் திரும்பி வருவேன். அதுவரையில் யாருமே அங்கு வரக்கூடாது!' என்றார்; ராஜாவும் ஒப்புக் கொண்டான். இடுகாட்டில் தளம் அமைக்க உத்தரவிட்டான். குறிப்பிட்ட நாளில் அதில் படுத்துக் கொண்டார் வித்வான். சிதை அடுக்கி, நெருப்பு வைக்கப்பட்டது. எண்ணை தேய்ப்பவர் இதை நேரில் நின்று பார்த்துவிட்டு, "அப்பாடா... தொலைந்தான்!' என்று சந்தோஷப்பட்டான்.
 
இந்த வித்வான் ரகசியமாக ஒரு வேலை செய்தார். யாருக்கும் தெரியாமல் சிதை அடுக்கிய தளத்துக்கு அடியிலிருந்து தம் வீட்டுக்கு சுரங்கப்பாதை அமைக்க ஏற்பாடு செய்திருந்தார். சிதைக்கு நெருப்பு வைத்ததும், இவர், ரகசியமாக சுரங்கப்பாதை வழியாக வீட்டுக்கு போய், ஒளிந்து கொண்டார். எட்டாவது நாள் திரும்பி வருவதாக ராஜாவிடம் சொல்லியிருந்ததால். அவனுக்காக மாலையுடன் காத்திருந்தார் ராஜா.
 
எண்ணை தேய்ப்பவனும் கூட்டத்தோடு ஒருவனாக நின்று, "ஹூம்.. இனி வித்வானாவது, வருவதாவது!' என்று மனதுக்குள் சொல்லி சிரித்துக் கொண்டான். ஆனால், என்ன ஆச்சரியம்! குறிப்பிட்ட நேரத்தில் சிதையை கலைத்துக் கொண்டு வெளியே வந்தார் வித்வான். ராஜாவிடம் போய் வணக்கம் தெரிவித்தார்.
 
மாலை போட்டு மரியாதை செய்து, "பெரிய ராஜாவை பார்த்தீர்களா... எப்படி இருக்கிறார்? என்ன சொன்னார்?' என்று ஆவலோடு கேட்டார் ராஜா. வித்வானும், "அவர் நன்றாகவே இருக்கிறார்; ஆனால், எண்ணை மட்டும் தேய்த்துக் கொள்வதில்லையாம். அவருக்கு, நம்மிடம் உள்ள எண்ணை தேய்ப்பவர் வந்தால் தான் திருப்தியாம்... அதனால், அவரை உடனே அனுப்பச் சொன்னார்!' என்றார்.
 
ராஜாவும் எண்ணை தேய்ப்பவரைக் கூப்பிட்டு, "நீ நாளைக்கே புறப்பட்டு போய் பெரிய ராஜாவுக்கு எண்ணை தேய்த்து விடு! உனக்காக சிதை தயாராக இருக்கும்!' என்று உத்தரவு போட்டார். எண்ணை தேய்ப்பவருக்கு உடம்பெல்லாம் நடுங்கியது. ராஜாவின் காலில் விழுந்து, வித்வானை ஒழித்துக்கட்டவே, தான் அப்படிச் சொன்னதாக ஒப்புக் கொண்டு, மன்னிப்பு கேட்டான்.
 
ராஜாவுக்கு கோபம் வந்தது. எண்ணை தேய்ப்பவனை உடனே நாடு கடத்த உத்தரவிட்டு, வித்வானிடம் மன்னிப்பு கேட்டார். தான் தெரியாத்தனமாக, அவன் பேச்சைக் கேட்டு நடந்து கொண்டதற்காக வருந்தினார்.
 
"பிறருக்கு கேடு நினைத்தால் தனக்கே கேடு விளையும்!' என்று இப்போது புரிகிறதா? எனவே, பிறருக்கு கேடு நினையாதீர்.

வாய் புண்கள் குணமாக

|

வாயில், வயிற்றில் புண் இருந்தால் பாலில் சிறிது தேனைக் கலந்து சாப்பிட்டுவர சில நாட்களில் புண் குணமாகும். வாய்ப்புண் அதிகமாகி விட்டால் காரத்தை அடியோடு நிறுத்த வேண்டும்.
 
மாசிக் காயை உடைத்து அதன் தோலை மட்டும் வாயில்போட்டு அப்படியே அடக்கிக் கொள்ளுங்கள். ஊறிவரும் நீரை விழுங்குங்கள். வாய்ப்புண் சரியாகிவிடும்.

நெல்லி இலைகளை அவித்த நீரீனால் அடிக்கடி வாய் கொப்பளித்துவர வாய்ப்புண்கள் ஆறிவிடும்.

நெல்லிச் சாறையும், தேனையும் சமமாகக் கலந்து, மூச்சுத் திணறல், நீண்ட கால விக்கல் நோய் முதலியவற்றிற்குக் கொடுத்து வரலாம். சில மருத்துவர்கள் இதோடு திப்பிலி சூரணத்தையும் சேர்த்துக் கொடுப்பார்கள்.

வாய்ப்புண் போக, மணத்தக்காளி இலைகளை நிறைவாய் போட்டு மென்று, சற்று நேரம் வாயில் வைத்திருந்து விழுங்கவும். இவ்வாறு முற்றின தேங்காயையும் உபயோகிக்கலாம்.

வாயில் புண் இருந்தால், அகத்திக்கீரையைச் சமைத்துப் சாப்பிடவும். வாய்ப்புண்ணும் நாக்குப் புண்ணும் குணமாகும். புண் அதிகமாக இருந்தால், புண் மீது பசு வெண்ணையைத் தடவுங்கள். குழந்தைகளுக்கு வாய்ப்புண் வந்தால், மாசிக்காயை பாலில் கரைத்து தேனில் குழைத்து நாக்கில் தடவ குணமாகும்.

தீராத வாய்ப்புண்ணிற்கு கடுக்காயை உடைத்து ஒரு துண்டை வாயில் போட்டு வைத்திருக்கவும். சாறு தொண்டையில் போகப்போக உடனடியாக குணம் கிடைக்கும்.

மணத் தக்காளிக் கீரையையும், அகத்திக் கீரையையும் பொரியலாகச் செய்து, தேங்காய்ப் பருப்பு சேர்த்து சாப்பிட்டால், வாய்புண் இரண்டே நாட்களில் குணமாகும்.

ஆவணங்கள் தொலைந்தால்...1

|

எவ்வளவுதான் கவனமாக இருந்தாலும் சில நேரங்களில் ரேஷன் கார்டு, டிரைவிங் லைசென்ஸ், கிரயப் பத்திரம், இன்ஷூரன்ஸ் பாலிசி என ஏதாவது ஒரு முக்கியமான ஆவணத்தைத் தொலைத்துவிட்டு பலரும் தவிப்பதை நாம் பார்க்கலாம். அப்படி தொலைந்து போனால் அல்லது மழையில் நனைந்து கிழிந்து அழிந்து போனால் அவற்றை திரும்பப் பெறுவது எப்படி என்பதை இங்கே தெரிந்துகொள்ளலாம்.

மதிப்பெண் பட்டியல்!
யாரை அணுகுவது..?
பள்ளித் தலைமை ஆசிரியர் மற்றும் மாவட்ட கல்வி அதிகாரி.
என்னென்ன ஆவணங்கள் தர வேண்டும்?
மதிப்பெண் பட்டியல் நகல், பள்ளி மாற்றுச் சான்றிதழ், கட்டணம் செலுத்திய ரசீது.
எவ்வளவு கட்டணம்?  
உயர்நிலைப் பொதுத்தேர்வு (10-ம் வகுப்பு) ரூ.105.
மேல்நிலை பொதுத்தேர்வு ( +2) பட்டியல் ரூ.505.  
கால வரையறை: விண்ணப்பம் செய்ததிலிருந்து 60 நாட்கள்.
நடைமுறை: காவல் துறையில் புகார் அளித்து 'கண்டுபிடிக்க முடியவில்லைஎன சான்றிதழ் வாங்கியபிறகு, முன்பு படித்த பள்ளி/நிறுவனத்தின் மூலம் விண்ணப்பம் வாங்கி அதை பூர்த்தி செய்து தாசில்தாரிடம் கையப்பம் வாங்க வேண்டும். அந்த விண்ணப்பத்தோடு ஒரு கடிதம் மற்றும் இணைப்புகள் சேர்த்து மாவட்ட கல்வித்துறை அதிகாரிக்கு அனுப்ப வேண்டும். இந்த விவரங்களை அரசிதழில் வெளியிட்டு அதன் அடிப்படையில் அவர் பள்ளித் தேர்வுத்துறை இயக்குநருக்கு அனுப்புவார். தனித் தேர்வர்கள் நேரடியாக தேர்வுத் துறை இயக்குநர் அலுவலகத்திற்கு அனுப்ப வேண்டும். பட்டம் மற்றும் அதற்கு மேற்பட்ட உயர் கல்விக்கு சம்பந்தப்பட்ட பல்கலைக்கழகங்களை அணுக வேண்டும்.

Related Posts Plugin for WordPress, Blogger...

தலைப்புகள்

anicent tamil (4) Blog Tips (2) Computer (4) ILUSION (1) information (1) LPG சிலிண்டர் (1) safety (2) Short Cut Key (2) SMS (1) tamil (14) tamil friendship poem (2) tamil joke (7) tamil kathai (5) tamil story (6) tamil year (1) Welding Symbol (1) அபூர்வ தகவல் (2) ஆரோக்கியம் (16) ஆவணங்கள் (7) இதிகாசம் (1) இயற்கை (4) எச்சரிக்கை (4) எடக்கு-மடக்கு (2) எனது பதில்கள் மற்றும் அனுபவங்கள் (1) கணணி பராமரிப்பு (1) கதை (21) கம்ப்யூட்டர்வேலை (1) கலைஞர் (1) கவிதை (11) காமராஜர் (1) குண்டக்க-மண்டக்க (2) சாப்ட்வேர் மாப்பிள்ளை (1) சிந்தனை (4) செய்தி (13) செல்வம் (1) சேமிப்பு (1) தமிழர் பண்பாடு (6) தமிழ் (18) தமிழ் அளவை (2) தமிழ் அளவைகள் (1) தமிழ் ஆண்டுகள் (2) தமிழ் எண்கள் (1) தமிழ் எழுத்து (2) தமிழ் காலம் (2) தமிழ் பாட்டு (2) தமிழ் மருத்துவம் (6) தமிழ்நாடு அரசு பாடப் புத்தகங்கள் (1) தன்னம்பிக்கை (2) தீபம் (1) துணுக்கு (19) தெரிந்துகொள்வோம் (15) நகைச்சுவை (33) நகைச்ச்சுவை (6) நகைச்ச்சுவைகடிதம் (1) நட்பு (3) நட்பு கவிதை (2) படம் (1) படித்ததில் பிடித்தது (64) படித்தேன்-இரசித்தேன் (3) பணம் (2) பரோட்டா (1) பழமொழி (3) பழம்தமிழர் (1) பறவை (1) பாதுகாப்பு (2) பிரபலமானவர்களின் (4) பெண்பார்க்கும் படலம் (2) பெற்றோர் (2) பொங்கல் (1) பொழுதுபோக்கு (32) மகாபாரதம் (1) மகிழ்ச்சி (3) மாங்கல்யம் (1) மாய தோற்றம் (1) வரலாற்று நிகழ்வு (2) வலைப்பூ (1) வழி காட்டி (9) வழிகாட்டி (30) வாழ்கை (14) வாழ்க்கை (11) வாழ்த்துகள் (16) விவசாயம் (2) விவசாயி (1) வேலை (3)

Contact Form

Name

Email *

Message *

 

©2009 அறிவு களஞ்சியம் | Template Blue by TNB