Welcome to Arivu's Collection

திருக்குறள்

தேடல்

வாய் புண்கள் குணமாக

|

வாயில், வயிற்றில் புண் இருந்தால் பாலில் சிறிது தேனைக் கலந்து சாப்பிட்டுவர சில நாட்களில் புண் குணமாகும். வாய்ப்புண் அதிகமாகி விட்டால் காரத்தை அடியோடு நிறுத்த வேண்டும்.
 
மாசிக் காயை உடைத்து அதன் தோலை மட்டும் வாயில்போட்டு அப்படியே அடக்கிக் கொள்ளுங்கள். ஊறிவரும் நீரை விழுங்குங்கள். வாய்ப்புண் சரியாகிவிடும்.

நெல்லி இலைகளை அவித்த நீரீனால் அடிக்கடி வாய் கொப்பளித்துவர வாய்ப்புண்கள் ஆறிவிடும்.

நெல்லிச் சாறையும், தேனையும் சமமாகக் கலந்து, மூச்சுத் திணறல், நீண்ட கால விக்கல் நோய் முதலியவற்றிற்குக் கொடுத்து வரலாம். சில மருத்துவர்கள் இதோடு திப்பிலி சூரணத்தையும் சேர்த்துக் கொடுப்பார்கள்.

வாய்ப்புண் போக, மணத்தக்காளி இலைகளை நிறைவாய் போட்டு மென்று, சற்று நேரம் வாயில் வைத்திருந்து விழுங்கவும். இவ்வாறு முற்றின தேங்காயையும் உபயோகிக்கலாம்.

வாயில் புண் இருந்தால், அகத்திக்கீரையைச் சமைத்துப் சாப்பிடவும். வாய்ப்புண்ணும் நாக்குப் புண்ணும் குணமாகும். புண் அதிகமாக இருந்தால், புண் மீது பசு வெண்ணையைத் தடவுங்கள். குழந்தைகளுக்கு வாய்ப்புண் வந்தால், மாசிக்காயை பாலில் கரைத்து தேனில் குழைத்து நாக்கில் தடவ குணமாகும்.

தீராத வாய்ப்புண்ணிற்கு கடுக்காயை உடைத்து ஒரு துண்டை வாயில் போட்டு வைத்திருக்கவும். சாறு தொண்டையில் போகப்போக உடனடியாக குணம் கிடைக்கும்.

மணத் தக்காளிக் கீரையையும், அகத்திக் கீரையையும் பொரியலாகச் செய்து, தேங்காய்ப் பருப்பு சேர்த்து சாப்பிட்டால், வாய்புண் இரண்டே நாட்களில் குணமாகும்.

ஆவணங்கள் தொலைந்தால்...1

|

எவ்வளவுதான் கவனமாக இருந்தாலும் சில நேரங்களில் ரேஷன் கார்டு, டிரைவிங் லைசென்ஸ், கிரயப் பத்திரம், இன்ஷூரன்ஸ் பாலிசி என ஏதாவது ஒரு முக்கியமான ஆவணத்தைத் தொலைத்துவிட்டு பலரும் தவிப்பதை நாம் பார்க்கலாம். அப்படி தொலைந்து போனால் அல்லது மழையில் நனைந்து கிழிந்து அழிந்து போனால் அவற்றை திரும்பப் பெறுவது எப்படி என்பதை இங்கே தெரிந்துகொள்ளலாம்.

மதிப்பெண் பட்டியல்!
யாரை அணுகுவது..?
பள்ளித் தலைமை ஆசிரியர் மற்றும் மாவட்ட கல்வி அதிகாரி.
என்னென்ன ஆவணங்கள் தர வேண்டும்?
மதிப்பெண் பட்டியல் நகல், பள்ளி மாற்றுச் சான்றிதழ், கட்டணம் செலுத்திய ரசீது.
எவ்வளவு கட்டணம்?  
உயர்நிலைப் பொதுத்தேர்வு (10-ம் வகுப்பு) ரூ.105.
மேல்நிலை பொதுத்தேர்வு ( +2) பட்டியல் ரூ.505.  
கால வரையறை: விண்ணப்பம் செய்ததிலிருந்து 60 நாட்கள்.
நடைமுறை: காவல் துறையில் புகார் அளித்து 'கண்டுபிடிக்க முடியவில்லைஎன சான்றிதழ் வாங்கியபிறகு, முன்பு படித்த பள்ளி/நிறுவனத்தின் மூலம் விண்ணப்பம் வாங்கி அதை பூர்த்தி செய்து தாசில்தாரிடம் கையப்பம் வாங்க வேண்டும். அந்த விண்ணப்பத்தோடு ஒரு கடிதம் மற்றும் இணைப்புகள் சேர்த்து மாவட்ட கல்வித்துறை அதிகாரிக்கு அனுப்ப வேண்டும். இந்த விவரங்களை அரசிதழில் வெளியிட்டு அதன் அடிப்படையில் அவர் பள்ளித் தேர்வுத்துறை இயக்குநருக்கு அனுப்புவார். தனித் தேர்வர்கள் நேரடியாக தேர்வுத் துறை இயக்குநர் அலுவலகத்திற்கு அனுப்ப வேண்டும். பட்டம் மற்றும் அதற்கு மேற்பட்ட உயர் கல்விக்கு சம்பந்தப்பட்ட பல்கலைக்கழகங்களை அணுக வேண்டும்.

தமிழ் எழுத்துக்கள், "அ' முதல், "ஒள'வரை

|


தமிழ் எழுத்துக்கள், "' முதல், "ஒள'வரை, வாழ்க்கையின் பல உண்மைகளை உணர்த்துகின்றன.
 
முதல் இரண்டு எழுத்துக்களான, ", ' மனிதன் குழந்தையாகவும், பாலகனாகவும் உலக நடப்புகளைப் புரிந்து கொள்ள முடியாமல், "... !' என்று வாய் பிளந்து அதிசயிக்கும் காட்சியைக் குறிக்கும்.
 
பாலகன் இளைஞனாகி வாலிப முறுக்கில், பெண்ணின் மையலில் அசடாகி, "......' என்று இளிக்கிறான்.
 
தாம்பத்திய சுகத்தை அனுபவிக்கும் நிலையில், "......ம்... இது தானா?' என்று புதிரைப் புரிந்து கொள்கிறான். 

"ஊ'வின் முதுகில் ஏறியிருக்கும், "' குடும்பச் சுமை குடியிருப்பதைக் காட்டும்.
 
அடுத்து, குடும்பத் தலைவனாக, "... ஏய்!' என்று பிள்ளைகளையும், மற்றவரையும் ஆட்சி செய்கிறான்.

மகனுக்கு, மனைவி வருகிறாள். தந்தை, பெரியவராகி, தன்னை அடக்கிச் சுருட்டிக் கொண்டு, "' என்று உட்கார நேருகிறது.

மகன், இளம் மனைவியின் புது மயக்கத்தில், தலை கால் புரியாமல் ஆடுகிறான். பெரியவர், "......' அவ்வளவு தூரத்துக்கு ஆயிட்டுதா!' என்று ஈன ஸ்வரத்தில் அங்கலாய்க்கிறார்.
 
பெரியவர் தாத்தாவாகிறார். வளைந்து, குடும்பத்தில் தனித்து தேவையற்ற பொருளாகி விடுகிறார். "ஒள' வில், "' போல. 

எதையும் மும்முறை செய்துவிட்டால், இறுதியாகச் செய்து விட்டதாக அர்த்தம். பிறப்பில் தொடங்கிய வாழ்க்கை, இறப்பில் இறுதி நிலை அடைந்து, "முக்தி' பெறுவதற்கு இந்தப் பிராயம் சாதனம் என்பதை, மூன்று புள்ளியிட்ட ஆயுத எழுத்து உணர்த்தும்.

Related Posts Plugin for WordPress, Blogger...

தலைப்புகள்

anicent tamil (4) Blog Tips (2) Computer (4) ILUSION (1) information (1) LPG சிலிண்டர் (1) safety (2) Short Cut Key (2) SMS (1) tamil (14) tamil friendship poem (2) tamil joke (7) tamil kathai (5) tamil story (6) tamil year (1) Welding Symbol (1) அபூர்வ தகவல் (2) ஆரோக்கியம் (16) ஆவணங்கள் (7) இதிகாசம் (1) இயற்கை (4) எச்சரிக்கை (4) எடக்கு-மடக்கு (2) எனது பதில்கள் மற்றும் அனுபவங்கள் (1) கணணி பராமரிப்பு (1) கதை (21) கம்ப்யூட்டர்வேலை (1) கலைஞர் (1) கவிதை (11) காமராஜர் (1) குண்டக்க-மண்டக்க (2) சாப்ட்வேர் மாப்பிள்ளை (1) சிந்தனை (4) செய்தி (13) செல்வம் (1) சேமிப்பு (1) தமிழர் பண்பாடு (6) தமிழ் (18) தமிழ் அளவை (2) தமிழ் அளவைகள் (1) தமிழ் ஆண்டுகள் (2) தமிழ் எண்கள் (1) தமிழ் எழுத்து (2) தமிழ் காலம் (2) தமிழ் பாட்டு (2) தமிழ் மருத்துவம் (6) தமிழ்நாடு அரசு பாடப் புத்தகங்கள் (1) தன்னம்பிக்கை (2) தீபம் (1) துணுக்கு (19) தெரிந்துகொள்வோம் (15) நகைச்சுவை (33) நகைச்ச்சுவை (6) நகைச்ச்சுவைகடிதம் (1) நட்பு (3) நட்பு கவிதை (2) படம் (1) படித்ததில் பிடித்தது (64) படித்தேன்-இரசித்தேன் (3) பணம் (2) பரோட்டா (1) பழமொழி (3) பழம்தமிழர் (1) பறவை (1) பாதுகாப்பு (2) பிரபலமானவர்களின் (4) பெண்பார்க்கும் படலம் (2) பெற்றோர் (2) பொங்கல் (1) பொழுதுபோக்கு (32) மகாபாரதம் (1) மகிழ்ச்சி (3) மாங்கல்யம் (1) மாய தோற்றம் (1) வரலாற்று நிகழ்வு (2) வலைப்பூ (1) வழி காட்டி (9) வழிகாட்டி (30) வாழ்கை (14) வாழ்க்கை (11) வாழ்த்துகள் (16) விவசாயம் (2) விவசாயி (1) வேலை (3)

Contact Form

Name

Email *

Message *

 

©2009 அறிவு களஞ்சியம் | Template Blue by TNB