திருக்குறள்

தேடல்

அதிபர் நகைச்சுவை 2

|

இது நெட்டில் படித்தது, பழைய நகைச்சுவை

அமெரிக்காவின் இரட்டை கோபுரங்கள் மீது விமானத்தை மோதி தகர்த்த செப்டம்பர் 2001... அப்போதைய அமெரிக்க அதிபர் புஷ்ஷை போனில் அழைத்தார் பாகிஸ்தான் முன்னாள் அதிபர் முஷாரப்... "புஷ் அவர்களே... என்னுடைய ஆழ்ந்த வருத்தத்தையும், இரங்கலையும் உங்களுக்குத் தெரிவித்துக் கொள்கிறேன்... எவ்வளவு பெரிய பேரழிவு... எத்தனை மக்கள்... எவ்வளவு உயரமான கட்டிடம்... இங்கே ஒன்றை சொல்லிக் கொள்ள விரும்புகிறேன்... இந்த சம்பவத்திற்கும், எங்களுக்கும் கொஞ்சமும் தொடர்பில்லை...' எனக் கூறினார்.

குழம்பிப் போன புஷ், "என்ன கட்டிடம்? மக்களுக்கெல்லாம் என்ன ஆனது?' எனக் கேட்டார். சுதாரித்துக் கொண்ட முஷாரப், "இப்போது அமெரிக்காவில் எத்தனை மணி?' எனக் கேட்டார். "காலை எட்டு மணி ஆகிறது!' என்றார் புஷ். "அப்படியானால், இன்னும் ஒரு மணி நேரம் கழித்து கூப்பிடுகிறேன்!' எனக் கூறி, போனை வைத்தார் முஷாரப்
.

(அமெரிக்க நேரம் நம்மை விட பிந்தியது. அங்குள்ள மாநிலங்களைப் பொறுத்து, பத்து முதல், 12 மணி நேரம் பின்னால் இருக்கும். உதாரணமாக, இங்கு நண்பகல், 12:00 மணி என்றால், அங்குள்ள சில மாநிலங்களில் இரவு, 12:00 மணி ஆக இருக்கும். அதிபர் முஷாரபின் பங்கு இரட்டைக் கோபுர தகர்ப்பில் உள்ளது என்பதும், அவரது முட்டாள்தனத்தை கிண்டலடிப்பது போலவும் இந்த ஜோக்கை அமைத்துள்ளனர்
!)

அடுத்து சொல்லப் போகும் ஜோக், இரட்டை கோபுரம் தகர்ந்த போது நடந்ததை ஒட்டியதே... ஆனால், இதில் முஷாரப் கிடையாது... சீன அதிபர் தொடர்புடையது.
 

இரட்டை கோபுரத்தை தகர்த்த தீவிரவாதிகள், அதே நேரத்தில் அமெரிக்காவின் ராணுவ தலைமை நிலையமான பென்டகனையும் தகர்த்தனர். உடனே, சீன அதிபர், அமெரிக்க அதிபரான புஷ்ஷிற்கு போன் போட்டு, "நடந்த அசம்பாவிதம் பற்றி கேள்விப்பட்டேன்... ரொம்ப வருத்தமாகப் போய் விட்டது... மிகப் பெரிய கோர சம்பவம் இது... உங்களுடைய முக்கியமான தஸ்தாவேஜுகள், ராணுவ ரகசியங்கள் அடங்கிய பைல்கள், அணு ஆயுத கோப்புகள் காணாமலோ, எரிந்தோ போயிருந்தால், என்னிடம் ஒரு வார்த்தை சொல்லுங்கள்... எல்லாவற்றின் நகலும் எங்களிடம் பத்திரமாக இருக்கிறது...' என்றார்...
 
அந்த நேரம், புஷ்ஷின் மனநிலை எப்படி இருக்கும் நினைத்துப் பாருங்கள்...

வாழ்க்கை ஒரு ....

|


வாழ்க்கை ஒரு சவால் - அதைச் சமாளி
வாழ்க்கை ஒரு பரிசு - அதைப்  பெற்றுக்கொள்
வாழ்க்கை ஒரு சாகசம்  - அதில் துணிவு காட்டு
வாழ்க்கை ஒரு சோகம்  - அதைத் துடைத்து விடு
வாழ்க்கை ஒரு கடமை - அதை முடித்து விடு

வாழ்க்கை ஒரு விளையாட்டு  - அதில் பங்குகொள்
வாழ்க்கை ஒரு துன்பம் - அதை எதிர்கொள்
வாழ்க்கை ஒரு புதிர் - அதற்கு விடை காணு
வாழ்க்கை ஒரு பாடல் - அதைப் பாடிவிடு 
 
வாழ்க்கை ஒரு வாய்ப்பு  - அதைப்  பயன்படுத்து
வாழ்க்கை ஒரு பயணம்  - அதை முடித்து விடு 
வாழ்க்கை ஒரு வாக்குறுதி  - அதைக் காப்பாற்று 
வாழ்க்கை ஒரு காதல் - அதை அனுபவி 

வாழ்க்கை ஒரு வனப்பு - அதை புகழ் பாடு
வாழ்க்கை ஒரு போராட்டம் - அதனுடன் போராடு
வாழ்க்கை ஒரு இலக்கு - அதை அடைந்து விடு
வாழ்க்கை  தெய்வீகமானது - அதை புரிந்துகொள்

Related Posts Plugin for WordPress, Blogger...

தலைப்புகள்

anicent tamil (4) Blog Tips (2) Computer (4) ILUSION (1) information (1) LPG சிலிண்டர் (1) safety (1) Short Cut Key (2) SMS (1) tamil (14) tamil friendship poem (2) tamil joke (7) tamil kathai (5) tamil story (6) tamil year (1) Welding Symbol (1) ஆரோக்கியம் (10) ஆவணங்கள் (7) எச்சரிக்கை (2) கணணி பராமரிப்பு (1) கதை (18) கம்ப்யூட்டர்வேலை (1) கலைஞர் (1) கவிதை (11) சாப்ட்வேர் மாப்பிள்ளை (1) செய்தி (9) தமிழர் பண்பாடு (3) தமிழ் (14) தமிழ் அளவை (2) தமிழ் அளவைகள் (1) தமிழ் ஆண்டுகள் (2) தமிழ் எண்கள் (1) தமிழ் எழுத்து (2) தமிழ் காலம் (2) தமிழ் பாட்டு (2) தமிழ் மருத்துவம் (5) தமிழ்நாடு அரசு பாடப் புத்தகங்கள் (1) தீபம் (1) துணுக்கு (14) தெரிந்துகொள்வோம் (1) நகைச்சுவை (27) நகைச்ச்சுவை (4) நகைச்ச்சுவைகடிதம் (1) நட்பு (3) நட்பு கவிதை (2) படம் (1) படித்ததில் பிடித்தது (43) பரோட்டா (1) பழம்தமிழர் (1) பாதுகாப்பு (2) பிரபலமானவர்களின் (1) பெண்பார்க்கும் படலம் (1) பொங்கல் (1) பொழுதுபோக்கு (23) மகிழ்ச்சி (3) மாங்கல்யம் (1) மாய தோற்றம் (1) வலைப்பூ (1) வழி காட்டி (9) வழிகாட்டி (26) வாழ்கை (13) வாழ்க்கை (8) வாழ்த்துகள் (11) விவசாயம் (1) விவசாயி (1) வேலை (3)
 

©2009 அறிவு களஞ்சியம் | Template Blue by TNB