இது நெட்டில் படித்தது, பழைய நகைச்சுவை
அமெரிக்காவின் இரட்டை கோபுரங்கள் மீது விமானத்தை மோதி தகர்த்த செப்டம்பர் 2001... அப்போதைய அமெரிக்க அதிபர் புஷ்ஷை போனில் அழைத்தார் பாகிஸ்தான் முன்னாள் அதிபர் முஷாரப்... "புஷ் அவர்களே... என்னுடைய ஆழ்ந்த வருத்தத்தையும், இரங்கலையும் உங்களுக்குத் தெரிவித்துக் கொள்கிறேன்... எவ்வளவு பெரிய பேரழிவு... எத்தனை மக்கள்... எவ்வளவு உயரமான கட்டிடம்... இங்கே ஒன்றை சொல்லிக் கொள்ள விரும்புகிறேன்... இந்த சம்பவத்திற்கும், எங்களுக்கும் கொஞ்சமும் தொடர்பில்லை...' எனக் கூறினார்.
குழம்பிப் போன புஷ், "என்ன கட்டிடம்? மக்களுக்கெல்லாம் என்ன ஆனது?' எனக் கேட்டார். சுதாரித்துக் கொண்ட முஷாரப், "இப்போது அமெரிக்காவில் எத்தனை மணி?' எனக் கேட்டார். "காலை எட்டு மணி ஆகிறது!' என்றார் புஷ். "அப்படியானால், இன்னும் ஒரு மணி நேரம் கழித்து கூப்பிடுகிறேன்!' எனக் கூறி, போனை வைத்தார் முஷாரப்.
(அமெரிக்க நேரம் நம்மை விட பிந்தியது. அங்குள்ள மாநிலங்களைப் பொறுத்து, பத்து முதல், 12 மணி நேரம் பின்னால் இருக்கும். உதாரணமாக, இங்கு நண்பகல், 12:00 மணி என்றால், அங்குள்ள சில மாநிலங்களில் இரவு, 12:00 மணி ஆக இருக்கும். அதிபர் முஷாரபின் பங்கு இரட்டைக் கோபுர தகர்ப்பில் உள்ளது என்பதும், அவரது முட்டாள்தனத்தை கிண்டலடிப்பது போலவும் இந்த ஜோக்கை அமைத்துள்ளனர்!)
அடுத்து சொல்லப் போகும் ஜோக், இரட்டை கோபுரம் தகர்ந்த போது நடந்ததை ஒட்டியதே... ஆனால், இதில் முஷாரப் கிடையாது... சீன அதிபர் தொடர்புடையது.
இரட்டை கோபுரத்தை
தகர்த்த தீவிரவாதிகள்,
அதே
நேரத்தில் அமெரிக்காவின் ராணுவ தலைமை நிலையமான பென்டகனையும் தகர்த்தனர்.
உடனே, சீன அதிபர், அமெரிக்க அதிபரான புஷ்ஷிற்கு போன் போட்டு,
"நடந்த அசம்பாவிதம் பற்றி கேள்விப்பட்டேன்...
ரொம்ப வருத்தமாகப் போய்
விட்டது... மிகப் பெரிய கோர சம்பவம் இது... உங்களுடைய முக்கியமான தஸ்தாவேஜுகள்,
ராணுவ ரகசியங்கள் அடங்கிய பைல்கள்,
அணு
ஆயுத கோப்புகள் காணாமலோ,
எரிந்தோ போயிருந்தால்,
என்னிடம் ஒரு வார்த்தை சொல்லுங்கள்...
எல்லாவற்றின் நகலும் எங்களிடம் பத்திரமாக இருக்கிறது...'
என்றார்...
அந்த நேரம், புஷ்ஷின் மனநிலை எப்படி இருக்கும்
நினைத்துப் பாருங்கள்...
0 comments:
Post a Comment