திருக்குறள்

தேடல்

பெற்றோர்களுக்கு -அறிவுரைகள்.

|


1.உங்களுக்குப் பிடித்தவை உங்கள் குழந்தைகளுக்கும் பிடித்திருக்க வேண்டும் என்று எதிர்பார்க்காதீர்கள்.
2.தினந்தோறும் சந்தர்ப்பம் கிடைக்கும்போதெல்லாம் உங்கள் குழந்தைகளிடம் “ I love you” என்று சொல்லுங்கள்.
3.உங்கள் குழந்தைகள் தவறு செய்தால் அதையே சுட்டிக் காட்டிக்கொண்டிருக்காதீர்கள். ஏற்கனவே அவர்கள் குற்ற உணர்வுடன் இருப்பார்கள்.
4.நீங்கள் வளரும்போது நீங்களும் முழுமையானவர்களாக  இருந்திருக்கவில்லை என்பதை நினைவில் வைத்துக்கொள்ளுங்கள். நீங்களே முழுமையானவர்களாக இல்லாதபோது உங்கள் குழந்தைகளிடம் எப்படி அதை எதிர்பார்க்கலாம்?
5.ஒரு குழந்தைக்கு மேல் உங்களுக்கு இருந்தால் தயவுசெய்து அவர்களை ஒப்பிட்டுப் பேசாதீர்கள். ஐந்து விரல்களும் ஒன்றுபோல் இருக்காது.
6.குழந்தைகளிடம் பொறுமையைக் கடைப்பிடியுங்கள். அவர்களுக்கு இது கற்கும் காலம்.
7.தப்பு ஏதாவது நடந்தால் குழந்தைகளை அதற்குப் பொறுப்பாக்காதீர்கள். எல்லாச் சமயங்களிலும் தவறு குழந்தைகளிடம் இருக்காது.
8.சிறு பரிசானாலும் பரவாயில்லை. அடிக்கடி குழந்தைகளை ஆச்சரியத்தில் மூழ்கடியுங்கள்.
9.குழந்தைகள் எப்பொழுதுமே 5 வயது குழந்தைகளாக இருக்க முடியாது. அவர்களும் வளர்கிறார்கள்.
10.குழந்தைகள் முன்னால் வாக்குவாதத்திலோ, சண்டையிலோ ஈடுபடாதீர்கள். 

இதில் பாதியையாவது நீங்கள் கடைப்பிடித்தால் உங்கள் குழந்தைகள் உங்களை நல்ல பெற்றோர்கள் என்று எப்பொழுதும் நினைத்துப் பெருமைப்படுவார்கள்.

நான் முக்கியமில்லையா..?

|

வேலைக்கு போய் திரும்பி வந்த தன் அம்மாவிடம் 5 வயது சிறுமி கேட்டாள்.....
நம்ம வீட்டு பீரோ சாவியை ஆயாகிட்ட ஏம்மா கொடுத்துட்டுப் போகல..?
அதைப் போய் ஆயாகிட்ட கொடுப்பாங்களா..?
நம்ம வீட்டு பீரோல இருக்குற நகை, பணம் எல்லாம் ஆயாகிட்ட ஏம்மா கொடுத்துட்டுப் போகல..? ஷ்ஷு....

அதெல்லாம் ஆயாகிட்டக் கொடுக்கக் கூடாது...
உங்க ATM கார்டை ஆயாகிட்ட ஏம்மா கொடுத்துட்டுப் போகல..? என்ன கேள்வி இது..?
நீ சொல்றதெல்லாம் ரொம்ப முக்கியமான பொருள். அதையெல்லாம் ஆயாகிட்டக் கொடுக்கக் கூடாது...
"அப்போ ஏம்மா என்ன மட்டும் ஆயாகிட்ட விட்டுட்டுப் போற........? அம்மாவுக்கும், அப்பாவுக்கும் நான் முக்கியமில்லையா..? "
இம்முறை அம்மாவிடமிருந்து பதில் இல்லை. கண்களில் கண்ணீர் மட்டுமே இருந்தது...!
படித்ததில் பிடித்தது......

ஒரு குட்டி! கதை...

|

ஒரு குட்டிக் கதை முழுசா படிச்சுப் பாருங்க,,.....
சிரிக்க மட்டும்
...
ஒரு பெண் கிளி வாங்க கடைக்குப் போறா..
கடைக்காரன் கிட்ட கேக்குறா,,
எனக்குப் பேசிப் பழகுற மாதிரி ஒரு கிளி வேணும்.. 

கடைக்காரன் ஒரு கிளியை கூண்டோடு தூக்கிட்டு வந்து காட்டிட்டு,,
இது ரொம்ப அறிவாளி கிளி, நீங்க என்ன கேள்வி கேட்டாலும் அதுக்கு சரியான பதில் சொல்லும்..
டெஸ்ட் பண்ணிப் பாத்துக்கோங்கனு சொல்றாப்ல...

உடனே அந்தப் பெண் கிளியிடம் கேள்வி கேக்க தொடங்குறா,,

ஏய் கிளி நான் பார்க்க எப்படி இருக்கேன்,அழகா இருக்கேனா?
கிளியின் பதில்
நீ அழகாத் தான் இருக்க, ஆனா ஐட்டம் மாதிரி இருக்கனு சொல்லிடுச்சு...

கடுப்பான அந்தப் பொண்ணு கடைக்காரன்கிட்ட கம்ப்ளைண்ட் பண்ணிடுச்சு...

கோபமான கடைக்காரன் கிளியைக் கூண்டோடு தூக்கிட்டுப் போயி
என் வியாபாரத்தை கெடுக்குறியா,
அந்தப் பொண்ணு கேக்கறதுக்கு மரியாதையா ஒழுங்கா பதில் சொல்லு, இல்ல உன்ன தண்ணியில முக்கிக் கொன்னுடுவேன்னு மிரட்டுறான்.

கிளியும் சரின்னு ஒத்துக்கிடுச்சு...

மறுபடியும் அந்தப் பொண்ணுகிட்ட கொண்டு வந்து, இப்ப என்ன கேள்வி கேட்டாலும் சமர்த்தா பதில் சொல்லும், கேட்டுப் பாருங்கன்னு சொல்றான்...

உடனே அவளும் அதே கேள்வியை திரும்பவும் கேட்டு ஆரம்பிக்கிறா..

பெண் : ஏய் கிளி நான் எப்படி இருக்கேன், அழகா இருக்கேனா...
கிளி : அழகா இருக்கீங்க மேடம்

பெண் : குட், உன்ன நான் என் வீட்டுக்கு கூட்டிட்டுப் போறேன். லேட் நைட்ல ஒரு பையன் கூட நான் வீட்டுக்கு வந்தா நீ என்ன நினைப்ப.
கிளி : உங்க கணவர்னு நினைப்பேன்

பெண் : வெரி குட்.. சரி, ரெண்டு பசங்கள கூட்டிட்டு வந்தா என்ன நெனப்ப
கிளி : உங்க கணவரும், அவரோட நண்பரும்னு நினைப்பேன்.

பெண் : சோ ஸ்வீட்,, 3 பசங்களோட வந்தா,,
கிளி : உங்க கணவர், அவரோட தம்பி, அவரோட நண்பர்னு நினைப்பேன்..

பெண் : வாவ், உன்ன எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு.கடைசியா ஒரு கேள்வி,,
4 பசங்களோட வந்தா என்ன நினைப்ப..
கிளி கடுப்பாகி கடைக்காரன் பக்கம் திரும்பி கொஞ்சம் சத்தமா
ஓ..தா டேய், நான் அப்பவே சொன்னேன்ல, இவ ஒரு ஐட்டம்னு

கடலோர குருவிகள்-பாலகுமாரன்

|

ஓர் அழகான கதை. உழைப்பின் உன்னதத்தை உணர்த்துகின்ற கதை-
______________________________________
கடற்கரை ஓரமாக பெரிய மரம் ஒன்று வளர்ந்திருந்தது. அதன் கிளை ஒன்று மிக நீண்டு கடல் நீருக்கு மேலாக நீட்டிக் கொண்டிருந்தது. அதன் உச்சியில் கடற்குருவி ஒன்று கூடு கட்டியது. அதனுள் நாலைந்து முட்டைகளை இட்டு அடைகாத்து வந்தது. ஆண் குருவியும் பெண் குருவியும் அதே கூட்டில் வசித்தபடி தங்கள் குஞ்சுகள் வெளிவரும் நாளை ஆவலுடன் எதிர்பார்த்துக் கொண்டிருந்தன.
ஒரு நாள் பெரும் காற்று வீசியது. பெரிய அலைகள் பொங்கி எழுந்தன. கிளையில் இருந்த கூடு நழுவி காற்றின் வேகத்தில் கடலில் விழுந்து மூழ்கியது. குருவிகள் மனம் பதறிக் கதறின. கடல் நீரில் விழுந்து கூடு மூழ்கிய இடத்திற்கு மேலாக கீச், கீச் என்று கத்தியபடியே சுற்றிச் சுற்றி வந்தன.
பெண் குருவி மனம் உடைந்து சொல்லியது. எப்படியாவது முட்டைகளை மீண்டும் நான் காண வேண்டும். இல்லையேல் நான் உயிர் வாழ மாட்டேன் என்றது .
ஆண் குருவி சொன்னது. அவசரப்படாதே ஒரு வழி இருக்கிறது. நமது கூடு கரையின் ஓரமாகத் தான் விழுந்துள்ளது. கூட்டுடன் சேர்ந்து முட்டைகள் விழுந்ததால் நிச்சயம் உடைந்திருக்காது. அதனால் இந்த கடலிலுள்ள தண்ணீரை வற்றவைத்து விட்டால் போதும். முட்டைகளை நாம் மீட்டுவிடலாம்.என்று பெண் குருவிக்கு தன்னம்பிக்கை ஊட்டியது .
கடலை எப்படி வற்றவைப்பது?
முட்டைகள் பொரிந்து குஞ்சுகள் வெளிவர இன்னும் பல நாட்கள் ஆகலாம். எனவே நாம் இடைவிடாமல் சில நாட்கள் முயல வேண்டும். நம் வாயில் கொள்ளும் மட்டும் தண்ணீரை எடுத்துக் கொண்டு பறந்து சென்று தொலைவில் கொட்டுவோம். மறுபடியும் திரும்பி வந்து மீண்டும் நீரை நிரப்பிக் கொண்டு போய் தொலைவில் உமிழ்வோம். இப்படியே இடைவிடாமல் செய்து கடல் நீரை வேறு இடத்தில் ஊற்றினால் கடல் நீர் மட்டம் குறைந்து தரை தெரியும். நமது முட்டைகள் வெளிப்படும்.
இதையடுத்து இரண்டு குருவிகளும் தன்னம்பிக்கையுடன் ஊக்கத்துடன் செயலில் இறங்கின. விர்ரென்று பறந்து போய் தங்களது சிறிய அலகில் இரண்டு விழுங்கு நீரை நிரப்பிக் கொண்டன. பறந்து சென்று தொலைவில் போய் உமிழ்ந்தன. மீண்டும் பறந்து வந்து இரண்டு வாய் தண்ணீரை அள்ளின. கொண்டுபோய் தொலைவில் கக்கின. இப்படியே இரவு பகல் நாள் முழுவதும் இடைவிடாமல் நடந்து கொண்டிருந்தது, இவற்றின் நீர் அகற்றும் படலம்.
அப்போது அந்தக் கடற்கரை ஓரமாக முனிவர் ஒருவர் நடந்து வந்து கொண்டிருந்தார். மகா சக்திகள் நிறைந்த மகான் அவர். ஆளில்லாத அந்தப் பகுதியில் கீச் கீச் என்ற சப்தம் கேட்கவும் அவர் திரும்பிப் பார்த்தார். இரண்டு குருவிகள் பறந்து போவது கண்டு சிரித்தபடி மேலே நடந்தார்.
மீண்டும் கீச் கீச் என்ற சப்தம். குருவிகள் கடலுக்கு மேல் பறந்தன. எதையோ அள்ளின. மீண்டும் பறந்தன. இப்படி பலமுறை நடைபெறவும், முனிவருக்கு வியப்பு. கடலில் இருக்கும் எதைக் கொத்துகின்றன இவை? அங்கு இரை ஏதும் இல்லையே என்று நினைத்தார் அவர்.
உடனே அந்த மகான் கண்களை மூடினார். உள்ளுக்குள் அமிழ்ந்தார். மறுகணம் அவர் மனதில் எல்லா நிகழ்ச்சிகளும் படம்போல் ஓடின. அவர் மனம் உருகியது. முட்டைகளை இழந்த தாயின் தவிப்பும் கடலையே வற்ற வைத்தாவது முட்டைகளை மீட்க வேண்டும் என்ற அதன் துடிப்பும் அவரது உள்ளத்தை நெகிழச் செய்தன.
உடனே தனது தவ பலத்தை ஒன்று திரட்டிய முனிவர் கையை உயர்த்தினார். மறுகணம் கடல் சில அடிகள் பின் வாங்கியது. அங்கே கூட்டுடன் இருந்த முட்டைகள் தென்பட்டன. குருவிகள் அதைப் பார்த்து குதூகலத்துடன் கீச்சிட்டன. ஆளுக்கொன்றாக முட்டைகளை பற்றிக் கொண்டு போய் வேறிடத்தில் சேர்த்தன.
நான் அப்போதே சொன்னேன் பார்த்தாயா? நமது ஒரு நாள் உழைப்பில் கடல் நீரை குறைத்து முட்டைகளை மீட்டு விட்டோம் பார்த்தாயா? என்றது ஆண் குருவி பெருமிதமாக.
முனிவர் சிரித்தபடி தொடர்ந்து நடந்தார். இங்கே குருவிகள் முட்டைகளை மீட்டது அவற்றின் உழைப்பாலா? இல்லை. முனிவரின் அருளால். ஆனால் அந்தக் குருவிகளுக்கு முனிவர் என்ற ஒருவரைப் பற்றியோ தவ வலிமை என்றால் என்ன என்பது பற்றியோ, எதுவுமே தெரியாது.ஆனால் தன்னம்பிக்கையுடன் கடல் நீரை அள்ளின .
அதே சமயம் குருவிகள் மட்டுமே கடல் நீரை மொண்டு சென்று ஊற்றிக் கொண்டிருக்காவிட்டால் முனிவர் தம் வழியே போயிருப்பார். அவரை மனம் நெகிழ வைத்தது எது? அவற்றின் உழைப்பும் முயற்சியும்தான். ஆக இங்கே முட்டைகள் மீட்கப்பட்டது, குருவிகளாலும் தான். முனிவராலும் தான். முனிவரின் ஆற்றல் அவற்றுக்குப் பக்க பலமாக வந்து சேர்ந்தது. குருவிகளின் உழைப்புத்தான் அதற்கு அடிப்படையாக அமைந்தது.
அன்பு நண்பர்களே .
எல்லையில்லா ஆற்றல் பெற்றவர்களே இளமைப் பருவம் வாழ்வின் இன்றியமையாப் பருவம். பருவத்தே பயிர் செய் என்பார்களே. இளமையில் வியர்வை சிந்தாவிட்டால் முதுமையில் கண்ணீர் சிந்த வேண்டி இருக்கும்.
எனவே விழித்திருக்கும் நேரமெல்லாம் உழைத்துக் கொண்டிருங்கள். வாழ்வில் எல்லா நேரமும் நல்ல நேரம்தான். உழைக்காத நேரம்தான் ராகு காலம். திட்டமிடுங்கள். ஒவ்வொன்றையும் திட்டமிட்டு உழைத்திடுங்கள் .
இந்த கதை பாலகுமாரன் அய்யாவின் கடலோர குருவிகள் நாவல் புத்தகத்தில் படித்தவை .

நாவலன் தீவு

|மூழ்கிப் போன உண்மைகள் வெளிவர தொடங்கியுள்ளது. நம் வரலாற்றை தெரிந்து கொள்ள இந்த முறை உங்களை 20,000 வருடங்களுக்கு முந்தைய கடலில் மூழ்கிய ஒரு உலகிற்கு அழைத்து செல்லவிருக்கிறேன், என்னுடன் சேர்ந்து பயணிக்க உங்களின் பொன்னான நிமிடங்களை ஒதுக்குங்கள்.


இங்கு தான் உலகின் முதல் மனிதன் பிறந்ததாக வரலாற்று ஆய்வாளர்கள் தெரிவிக்கிறார்கள், இங்கு தான் நம் மூதாதையர் வாழ்ந்தனர். இங்கு தான் நாம் இன்று பேசிக்கொண்டிருக்கும் நம் தமிழ் பிறந்தது. இங்கு தான் இன்னும் பல வரலாற்று அதிசயங்கள் நிகழ்ந்துள்ளது, ஆம் இது தான் "நாவலன் தீவு" என்று அழைக்கப்பட்ட "குமரிக்கண்டம்.

கடலுக்கடியில் இன்று அமைதியாக உறங்கி கொண்டிருக்கும் இது, ஒரு காலத்தில் பிரம்மாண்டமாக இயங்கி கொண்டிருந்த ஒரு தமிழ் கண்டம் !!. இன்று தனித்தனி நாடுகளாக உள்ள ஆஸ்திரேலியா, தென் ஆப்ரிக்க, இலங்கை, மற்றும் இன்றுள்ள சில சிறு, சிறு தீவுகளை இணைத்தவாறு இருந்த ஒரு பிரம்மாண்டமான இடம் தான் "குமரிக்கண்டம்".
ஏழுதெங்க நாடு, ஏழுமதுரை நாடு, ஏழுமுன்பலைநாடு, ஏழுபின்பலைநாடு, ஏழுகுன்ற நாடு, ஏழுகுனக்கரை நாடு, ஏழுகுரும்பனை நாடு என இங்கு நாற்பது ஒன்பது நாடுகள் இருந்துள்ளது !! பறுளி, குமரி என்ற இரண்டு ஆறுகள் ஓடியுள்ளது !!. குமரிக்கொடு, மணிமலை என இரண்டு மலைகள் இருந்துள்ளது !!. தென்மதுரை, கபாடபுரம், முத்தூர் என பிரம்மாண்டமான மூன்று நகரங்கள் இருந்தன.உலகின் தொன்மையான நாகரீகம் என்று அழைக்கப்படும் சுமரியன் நாகரீகம் வெறும் நான்காயிரம் வருடங்கள் முந்தையது தான். நக்கீரர் "இறையனார் அகப்பொருள்" என்ற நூலில் மூன்று தமிழ்ச் சங்கங்கள் 9990 வருடங்கள் தொடர்து நடைபெற்றதாக கூறியுள்ளார்.

தமிழின் முதல் சங்கம் இந்த கடலடியில் உள்ள "தென் மதுரையில் "கி.மு 4440இல் 4449புலவர்கள்களுடன் , சிவன், முருகர், அகஸ்தியருடன் 39 மன்னர்களும் இணைந்து, "பரிபாடல், முதுநாரை, முடுகுருக்கு, கலரியவிரை, பேரதிகாரம்" ஆகிய நூல்களை இயற்றப்பட்டது .இதில் அனைத்துமே அழிந்து விட்டது .

இரண்டாம் தமிழ்ச் சங்கம் "கபாடபுரம்" நகரத்தில் கி.மு 3700 இல் 3700 புலவர்கள்களுடன் "அகத்தியம், தொல்காப்பியம், பூதபுராணம், மாபுராணம்" ஆகிய நூல்கள் இயற்றப்பட்டது.இதில் "தொல்காப்பியம் மட்டுமே நமக்கு கிடைத்துள்ளது.

மூன்றாம் தமிழ்ச் சங்கம் இன்றைய "மதுரையில்" கி.மு 1850 இல் 449 புலவர்கள்களுடன் "அகநானூறு, புறநானூறு, நாலடியார், திருக்குறள்" ஆகிய நூல்கள் இயற்றப்பட்டது. இவ்வளவு பழமையான தமிழனின் வரலாற்றை பெருமையுடன் உலகிற்கு தெரியப்படுத்த வேண்டும்.

இனிமேல் நாம் 2000 வருடம் பழமையானவர்கள் என்ற பழங்கதையை விட்டு விட்டு 20,000 வருட உலகின் முதல் இனம் ,நம் தமிழ் இனம் என்று பெருமையுடன் கூறுவோம்

கவர்மெண்ட் ஸ்கூல் வாத்தியார்

|

பெண்ணைப் பெற்றவர்.. நல்ல ஜாதகமா இருந்தா சொல்லுங்க தரகரே..
தரகர்.. இருக்கே.. பையன்.. ரொம்ப நேர்மையானவன்.. எம்எஸ்சி.. எம் எட்.. படிச்சிட்டு.. வாத்தியாரா இருக்கான்.. ஸ்கூல்ல கெட்டிக்கார வாத்தியார்னு பேர் எடுத்திருக்கான்.. ரொம்ப ஸ்ட்டிரிக்ட்.. பசங்க ஒழுங்கா வரணும்னு நினைக்கிற ஆளு..

வேண்டாம்.. வேலை நிரந்தரம் இல்லை.. வேற சொல்லுங்க..
என்ன அப்படி சொல்லிட்டேள்.. கவர்மெண்ட் ஸ்கூல்.. 60 ஆயிரம் சம்பளம்.. சாயந்தரம் 5 மணிக்கெல்லாம் வீட்டுக்கு வந்துருவான்..
கவர்மெண்ட் ஸ்கூல்லு சொன்னதாலதான் வேண்டாங்கறேன்..
ஏன்?..
அவன் நல்ல வாத்தியார்னு சொல்றேள் ஸ்ட்ரிக்ட்டுனு வேற சொல்றேள்.. .. பசங்க யூனிபாரம் போட்டுண்டு வரலேன்னா.. வீட்டுப் பாடம் எழுதலேன்னா ,பரீட்சையில காப்பியடிச்சா கண்டிப்பான்.. உடனே அந்த பையனோ பொண்ணோ.. வீட்டுக்குப் போயி கடுதாசு எழுதிவச்சிட்டு ஒன்னு கெடக்க ஒன்னு பண்ணுவா..
உடனே அரசியல் கட்சிகள்.. புரியாத பொதுஜனத்தைக் கூட்டி சாலை மறியல் பண்ணுவா.. ரோட்டு க்ளியர் ஆனா போதும்னு கவர்மெண்ட்.. யாருடா இளிச்சவாயன்னு பார்க்கும்.. வாத்தியாரை சஸ்பெண்ட் பண்ணுவா.. சம்பளம் ஒசத்தறதுக்கு போராடவா இதுக்கு ஒன்னு சேர்ந்து வரமாட்டா.. அட.. அந்த கல்வி அதிகாரியும்.. அந்த வகுப்புல மத்த பசங்ககிட்ட கேட்டு.. அந்த வாத்தியார் எப்படின்னு விசாரிக்க மாட்டா.. எல்லாரும் அரிப்புக்கு சொறிஞ்சிண்டு.. அந்த நல்லவாத்தியை கை கழுவிடுவா.. இப்ப புரிஞ்சுதா?.. நான் ஏன் கவர்ன்மெண்ட் ஸ்கூல் மாப்பிள்ளை வேண்டான்னு சொல்றேன்னு..
தரகர் தன் பையில் இருந்த அத்தனை கவர்மெண்ட் ஸ்கூல் வாத்தியார் ஜாதகத்தையும் எடுத்து தனியே வைத்து விட்டார்.. எதுக்கு வம்பு?..
சிரிப்பது போல இருந்தாலும், எழுத்தின் வலி புரிகிறது

யாருக்காக யார் சாவது?

|


இராமன் என்பவர் இறந்து விட்டார்.. அவருக்கு வயது 40 கூட ஆகவில்லை.
அவரது மனைவி,9 வயதான மகன்,பெற்றோர் அனைவரும் உடலின் அருகே அமர்ந்து கதறி அழுது கொண்டிருந்தனர்.


இந்தக் குடுமபத்துக்கே குருஜியாக விளங்கும் அறிஞர் ஒருவர் அப்போது அங்கு வந்தார்.,


அவரைக் கண்டதும் அவர்கள் மேலும் பெரிதாக அழ ஆரம்பித்தனர்.
இராமனின் மனைவி சொன்னாள்குருஜி!இவ்வளவு இளம் வயதில் என்னையும் என் மகனையும் நிர்க்கதியாக விட்டுப் போய் விட்டாரே? நான் என்ன செய்வேன்?அவர் உயிருடன் வருவாரறென்றால் அதற்காக நான் எதுவும் செய்வேன்


குருஜி அவர்கள் அனைவருக்கும் ஆறுதல் சொல்லி சமாதானப் படுத்த முயன்றார் ஆனால் அவர்கள் சோகம் குறையவில்லை. கடைசியில் அவர் கேட்டார்ஒரு கோப்பை தண்ணீர் கொண்டு வாருங்கள்தண்ணீர் வந்தது. அவர் கோப்பையை உடலின் அருகில் வைத்துத் தானும் அமர்ந்தார்.


பின் சொன்னார்இராமன் உயிருடன் திரும்பி வர வேண்டும் என நினைப்பவர்,இந்தத் தண்ணீரை அருந்தலாம். இராமன் திரும்பி வருவார். ஆனால் அதற்குப் பதில் நீரை அருந்தியவர் மரணமடைவார்
அவர்கள் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டனர்..ஆனால் யாரும் முன் வரவில்லை.


அவர் இராமனின் தந்தையைக் கேட்டார்ஐயா! நீங்கள் உங்கள் மகனுக்காக உங்கள் உயிரைக் கொடுக்க மாட்டீர்களா?”

தந்தை சொன்னார்நான் இறந்து விட்டால் என் மனைவிக்கு யார் ஆதரவு?அவளுக்காக நான் வாழ வேண்டும்


தாயைக் கேட்க அவள் சொன்னாள்அடுத்த மாதம் என் மகளுக்குப் பேறுகாலம்.நான் இறந்து விட்டால் அவளுக்கு யார் உதவுவது?”


மனைவி சொன்னாள்நான் இறந்தால் என் பையனை யார் கவனித்து வளர்ப்பது? அவனுக்காக நான் வாழ வேண்டும்


குருஜி பையனைப் பார்த்துக்கேட்டார்குழந்தாய்,உன் தந்தைக்காக நீ உயிர் விடுவாயா?”
அவன் தாய் உடனே அவனை இழுத்து அணைத்துக்கொண்டு சொன்னாள் குருஜி,உங்களுக்கென்ன பைத்தியமா?அவன் ஒரு குழந்தை.இனிமேல் தான் அவன் வாழ்க்கையே இருக்கிறது. அவனைப் போய் நீங்கள் கேட்கலாமா?”


குருஜி சொன்னார்உங்கள் அனைவருக்கும் ஏதாவது கடமை, பொறுப்பு இருக்கிறது என்று நீங்கள் சொல்கிறீர்கள். அப்படியானால் இராமனுக்கு இங்கு வேலையில்லை என்றாகிறது. எனவே தான் கடவுள் அவனை எடுத்துக் கொண்டார் .இப்போது இறுதி யாத்திரைக்கான ஏற்பாடுகளைக் கவனியுங்கள்சொல்லி விட்டு அவர் சென்று விட்டார்.


ஆம் பிறப்பையும் இறப்பையும் தீர்மானிப்பவன் அவன்.


எந்தப் பூவை எப்போது பறிக்க வேண்டும் என்பது அவன் எடுக்கும் முடிவு.
நாம் யார் அதைக் குறை சொல்ல? கேள்வி கேட்க?


நாம் ஒரு செடிக்குத் தண்ணீர் ஊற்றிப் பராமரிக்கிறோம்,அதில் பச்சை இலைகள் இருக்கும் வரை இலைகள் வாடிப்போய், அது உயிரற்ற குச்சியானால் அதை நாம் கவனிக்கப் போவதில்லை. அதனிடம் அன்பு செலுத்தப் போவதில்லை.”


உயிர் இருக்கும் வரையே அன்பு, பாசம் எல்லாம்


பின் மிஞ்சுவது மகிழ்ச்சியான நாட்களின் நினைவுகள் மட்டுமே

Related Posts Plugin for WordPress, Blogger...

தலைப்புகள்

anicent tamil (4) Blog Tips (2) Computer (4) ILUSION (1) information (1) LPG சிலிண்டர் (1) safety (1) Short Cut Key (2) SMS (1) tamil (14) tamil friendship poem (2) tamil joke (7) tamil kathai (5) tamil story (6) tamil year (1) Welding Symbol (1) அபூர்வ தகவல் (1) ஆரோக்கியம் (11) ஆவணங்கள் (7) இயற்கை (3) எச்சரிக்கை (2) கணணி பராமரிப்பு (1) கதை (21) கம்ப்யூட்டர்வேலை (1) கலைஞர் (1) கவிதை (11) சாப்ட்வேர் மாப்பிள்ளை (1) சிந்தனை (2) செய்தி (10) தமிழர் பண்பாடு (5) தமிழ் (14) தமிழ் அளவை (2) தமிழ் அளவைகள் (1) தமிழ் ஆண்டுகள் (2) தமிழ் எண்கள் (1) தமிழ் எழுத்து (2) தமிழ் காலம் (2) தமிழ் பாட்டு (2) தமிழ் மருத்துவம் (6) தமிழ்நாடு அரசு பாடப் புத்தகங்கள் (1) தன்னம்பிக்கை (1) தீபம் (1) துணுக்கு (16) தெரிந்துகொள்வோம் (3) நகைச்சுவை (29) நகைச்ச்சுவை (4) நகைச்ச்சுவைகடிதம் (1) நட்பு (3) நட்பு கவிதை (2) படம் (1) படித்ததில் பிடித்தது (50) பணம் (1) பரோட்டா (1) பழம்தமிழர் (1) பாதுகாப்பு (2) பிரபலமானவர்களின் (2) பெண்பார்க்கும் படலம் (1) பெற்றோர் (1) பொங்கல் (1) பொழுதுபோக்கு (25) மகிழ்ச்சி (3) மாங்கல்யம் (1) மாய தோற்றம் (1) வரலாற்று நிகழ்வு (1) வலைப்பூ (1) வழி காட்டி (9) வழிகாட்டி (27) வாழ்கை (13) வாழ்க்கை (8) வாழ்த்துகள் (12) விவசாயம் (2) விவசாயி (1) வேலை (3)
 

©2009 அறிவு களஞ்சியம் | Template Blue by TNB