1.உங்களுக்குப் பிடித்தவை உங்கள் குழந்தைகளுக்கும் பிடித்திருக்க வேண்டும் என்று எதிர்பார்க்காதீர்கள்.
2.தினந்தோறும் சந்தர்ப்பம் கிடைக்கும்போதெல்லாம் உங்கள் குழந்தைகளிடம் “ I love you” என்று சொல்லுங்கள்.
3.உங்கள் குழந்தைகள் தவறு செய்தால் அதையே
சுட்டிக் காட்டிக்கொண்டிருக்காதீர்கள்.
ஏற்கனவே அவர்கள் குற்ற உணர்வுடன் இருப்பார்கள்.
4.நீங்கள் வளரும்போது நீங்களும் முழுமையானவர்களாக இருந்திருக்கவில்லை
என்பதை நினைவில் வைத்துக்கொள்ளுங்கள். நீங்களே முழுமையானவர்களாக இல்லாதபோது உங்கள் குழந்தைகளிடம் எப்படி அதை எதிர்பார்க்கலாம்?
5.ஒரு குழந்தைக்கு மேல்
உங்களுக்கு இருந்தால் தயவுசெய்து அவர்களை ஒப்பிட்டுப் பேசாதீர்கள். ஐந்து விரல்களும் ஒன்றுபோல் இருக்காது.
6.குழந்தைகளிடம் பொறுமையைக் கடைப்பிடியுங்கள். அவர்களுக்கு இது கற்கும் காலம்.
7.தப்பு ஏதாவது நடந்தால் குழந்தைகளை அதற்குப் பொறுப்பாக்காதீர்கள். எல்லாச் சமயங்களிலும் தவறு குழந்தைகளிடம் இருக்காது.
8.சிறு பரிசானாலும் பரவாயில்லை.
அடிக்கடி குழந்தைகளை ஆச்சரியத்தில் மூழ்கடியுங்கள்.
9.குழந்தைகள் எப்பொழுதுமே 5 வயது குழந்தைகளாக இருக்க
முடியாது. அவர்களும் வளர்கிறார்கள்.
10.குழந்தைகள் முன்னால் வாக்குவாதத்திலோ, சண்டையிலோ ஈடுபடாதீர்கள்.
இதில் பாதியையாவது நீங்கள் கடைப்பிடித்தால் உங்கள் குழந்தைகள் உங்களை நல்ல பெற்றோர்கள் என்று
எப்பொழுதும் நினைத்துப் பெருமைப்படுவார்கள்.
0 comments:
Post a Comment