Welcome to Arivu's Collection

இனிய மாலைப் பொழுதில், இந்த வலைப் பக்கத்திற்கு வந்ததற்கு - நன்றி

திருக்குறள்

தேடல்

Dec
25,
2011

பரோட்டா எச்சரிக்கை!!!

|

உங்கள் அனைவருக்கும் கிறிஸ்துமஸ் வாழ்த்துக்கள்.

ஏழைக்கு ஏத்த (Fast  Food ) உணவு. இரவு எவ்வளவு நேரம் ஆனாலும் இரவு முழுவதும் கிடைக்கும் உணவு.  பரோட்டா செய்வதில் பிரச்சனையில்லை, ஆனால் அதன் மூலப் பொருளில் தான் பிரச்சனை. அதை பற்றிய ஒரு விழிப்புணர்வு. இதை எனக்கு மின் அஞ்சலில் அனுப்பிய நண்பருக்கு நன்றி.



Dec
18,
2011

தமிழ்நாடு அரசு பாடப் புத்தகங்கள்

|


உங்கள் நண்பர்கள், உறவினர்கள், அக்கம் பக்கம் வீட்டில் உள்ள யாருடைய குழந்தைகளாவது தமிழ் மாநில கல்வி படிப்பார்கலேயனால் அவர்களுக்கு அவர்களது புத்தகங்களை இலவசமாக தரவிறக்கம் செய்து கொள்ளலாம்.

தள முகவரி : http://www.textbooksonline.tn.nic.in/

இந்த தளத்திற்கு சென்றால் கீழ்க்கண்டவாறு தோன்றும் . தமிழ்நாடு அரசு பாடப் புத்தகங்கள் ஒன்றாம் வகுப்பு முதல் பண்ணிரன்டாம் வகுப்பு வரை அனைத்து பாடங்களும் உள்ளன.
இதில் உங்களுக்கு தேவையான வகுப்பை தேர்வு செய்யவும்

எடுத்து காட்டாக 12 ஆம் வகுப்பு புத்தகத்தை பார்க்கலாம் (இதில் தான் அதிக புத்தகங்கள் உள்ளன) தேர்வு செய்தபின் கீழ்க்கண்டவாறு புத்தக அட்டவணை தோன்றும்.

12 ஆம் வகுப்பு மொழி பாடநூல்கள். இதில் தமிழ் தவிர தெலுங்கு, மலையாளம், கன்னடம் மற்றும் உருது மொழிகளும் உள்ளன 
சிறப்பு பாடநூல்கள் (Academic Stream Books) இதில் தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் உள்ளன.
சிறப்பு பாடநூல்கள் மற்றும் தொழில் கல்வி பாடநூல்கள் (Vocational Stream Books)இதில் பாடங்கள் தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் உள்ளன

தேவையான புத்தகத்தை தேர்வு செய்தபின் அது வேறொரு பக்கத்தில் (New Window) தோன்றும். முழு புத்தகமும் தோன்ற சிறுது கால அவகாசம் எடுக்கும். இது உங்களது இணைய வேகத்தை பொருத்தது. தரவிறக்கம் PDF FORMல் இருக்கும்.

உதவும் மனம் கொண்டவர்கள் ஏழை மாணவர்களுக்கு தேவையான புத்தகத்தை நகல் எடுத்து கொடுக்கலாம் .

தரவிறக்கம் செய்ய இங்கே தமிழ்நாடு அரசு பாடப் புத்தகங்கள் அழுத்தவும்

வாழ்க வளமுடன்

Nov
13,
2011

மாய தோற்ற படம் -1

|

எனக்கு மின்அஞ்சலில் வந்த அருமையான படம்


முதலில் ஒரு கண் கொண்டு படத்தை கூர்ந்து பார்க்கவும், பின்பு படத்திலுள்ள முகம் திரும்புவதை கவனிக்கலாம். மிகவும் ரசிக்க தக்க படம். இதை உருவாக்கியவருக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள்


Nov
6,
2011

ராஜராஜ சோழன் காலத்து தமிழ் அளவை

|

சமீபத்தில் நான் ராஜராஜ சோழன் பற்றிய நூலை படித்தேன், அதில் அவருடைய காலத்தில் எப்படி அளந்தார்கள் என தெரிய வந்தது. அதை உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன்

முன்னூற்று அறுபது நெல் = ஒரு சோடு

ஐந்து சோடு = ஒரு ஆழாக்கு

இரண்டு ஆழாக்கு = ஒரு உழக்கு

இரண்டு உழக்கு = ஒரு உரி

இரண்டு உரி = ஒரு நாழி

எட்டு நாழி = ஒரு குறுணி

இரண்டு குறுணி = ஒரு பதக்கு

இரண்டு பதக்கு = ஒரு தூணி

மூன்று தூணி = ஒரு கலம்

இன்றும் கிராமங்களில் ஆழாக்கு, உழக்கு போன்றவை வழக்கத்தில் உள்ளன.

Oct
16,
2011

அன்புள்ளஅம்மாவுக்குஒருகடுதாசி.....!!!!

|

படித்ததில் பிடித்த கவிதை

(அன்னையைபிரிந்து வேலைக்காக ஊர்விட்டு ஊர் வந்த ஒருவனின் மனதின்வலிகள் )


அம்மா...
எழுதவார்த்தைகள்இல்லாமல்
தொடங்குகிறேன்...!!

பருவம்வரைபக்குவமாய்
வளர்த்துவிட்டாயே
ஊர்சண்டைஇழுத்துவந்தாலும்
உத்தமன்என்பிள்ளைஎன்று
விட்டுகொடுக்காமல்பேசுவாயே
அம்மா..!!

நீசொன்னவேலைகளைவிளையாட்டாய்
தட்டிசென்றநாட்கள்..!!

செல்லம்,தங்கம், "மள்ளிகைகடைக்கு "
போய்வாடஎனநீசொல்ல
இந்தவயதில்கடைக்குபோவதா?..
எனநான்சொன்னேன்..!!

இன்றோ..
இங்கேகண்ணுக்குதெரியாத
யாரோஒருவருக்காகஓயாமல்
வேலைசெய்கிறேன்அம்மா..!!

நெற்றிவியர்வைசிந்தபரிமாறும்
உந்தன்கைபக்குவஉணவு
நான்அறிந்தஅமுதத்தின்அசல்தான்.
இருந்தும்தவறவிட்டபலநாட்கள்..!!




கண்ணு "பத்துநிமிஷம்"பொறுத்துக்கோடா
சூடாசாப்பிட்டுட்டுபோய்டுவஎனநீசொல்ல
பத்துநிமிஷமா..!,நான்வெளியல
சாப்பிட்டுகொள்கிறேன்எனநான்சொல்லி
கிளம்பியதருணங்கள்..!!

இன்றோ..
இங்கேஉப்பு.,சப்பில்லாசாப்பாடு
சாப்பிடும்போதேகண்கள்களங்க
இன்றுகாரம்கொஞ்சம்அதிகம்
போய்விட்டதுஎனகடைக்காரர்
சொல்ல..!!

என்னக்குமட்டும்தெரிந்த
உண்மை..!!
பாசமுடன்நீஅளித்தஉந்தன்
ஒற்றைபிடிசோற்றுக்காகஇப்போது
ஏங்குகிறேன்அம்மா..!!

அன்றையபொழுதில்சுற்றிதிரிந்தநாட்கள்
வரண்டதலைமுடியில்வலுக்கட்டாயமாய்
தடவிவிடும்எண்ணெய்துளிகள்
வேண்டாவெறுப்பாய்நிற்கும்
நான்..!!

இன்றும்
என்தலைமுடிசகாராதான்அம்மா
உந்தன்கைஒற்றைஎண்ணெய்
துளிக்காகஏங்கிநிற்கிறது..!!


ஆசையால்..
மழையில்நனைந்துவர
முனுமுனுத்தபடிதுடைப்பாய்
உந்தன்முந்தானையில்

இப்போதுநனைகிறேன்
ஆசையால்அல்ல,ஏக்கத்தால்..,


அத்திபூக்கும்தருணமாய்..!
என்றாவதுஒருநாள்என்னை
திட்டும்நீ..!அந்தநொடியில்
எதிர்த்துபேசினேனேஅம்மா..!!

இன்றோ..
இங்கேஉயர்அதிகாரிதிட்ட
சுரணைஇல்லாதகல்லாய்நிற்கிறேனே
அம்மா..!!
என்னைமன்னித்துவிடேன்அம்மா..!!



தொலைபேசியில்...
உனக்காக,தேடிதிரிந்துபார்த்து,
பார்த்துவாங்கியபுடைவையைபற்றி
சொல்வதற்குமுன்உன்வார்த்தைகள்
வருமே..!கண்ணுஉனக்காக
ஒருசட்டைவாங்கிருக்கேன்வரும்போது
எடுத்துகிட்டுபோடாஎன்று..!!


எப்படிஅம்மாசொல்வேன்எந்தன்
அன்பையும் ,எண்ணத்தையும்

என்ஏக்கங்களைசொல்லதுடிக்க...
கைபேசியைஎடுத்து ,அம்மா....என்று
சொல்லும்நொடிகனத்தில்மாறுகின்றது
எந்தன்வார்த்தைகள்.,நான்இங்கு
நலமாய்இருக்கேன்..!நீஎப்படியம்மா
இருக்க..!!!

என்அன்னைஆயிற்றே...
எந்தன்ஒற்றைவார்த்தையில்
புரிந்துகொள்வாய்எந்தன்
மனதை..!!

நான்சொல்லமறந்தவார்த்தைகளை
பக்குவமாய்பட்டியளிடுவாய்..,
"
வேலைக்குஒழுங்காசாப்டுகண்ணு "
"
மறக்காமஎண்ணதேச்சிகுளிடா"
"
ரோட்லபத்திரமாபாத்துபோடா"
"
உடம்பபாத்துக்கோடாதங்கம் "

என்கண்கள்கட்டுபடுத்திக்கொண்டாலும்
என்இதையம்மட்டும்கதறிஅழுகிறதே
அம்மா..!!


உன்னைஎன்னிடம்இருந்துபிரித்த
இந்தவாழ்க்கையைதிட்டுவதா..?
இல்லை..
உந்தன்மேல்நான்வைத்திருக்கும்
பாசத்தைகாட்டியதற்குநன்றிசொல்வதா.?
தெரியவில்லையேஅம்மா..!!

உனக்காகஉயிரற்றபொருட்களால்
அன்புசின்னம்அமைத்துஎன்ன
பயன்..!!

உதிரம்என்னும்பசைதடவி
எலும்புஎன்னும்கற்கள்அடுக்கி
உன்அன்பின்சின்னமாய்இருப்பேன்
அம்மாஎன்றும்உந்தன்
காலடியில்...!!!



Oct
6,
2011

தமிழ் எண்கள்

|

ஆங்கிலத்தில் உள்ளது போல் தமிழிலும் எண்கள் உள்ளன.







0 முதல் 10 வரையும் மற்றும் 100 ,1000 கீழே
 
0 =௦
1=௧
2=௨
3=௩
4=௪
5=௫
6= ௬
7= ௭
8= ௮
9= ௯
10=௰
100=௱
1000=௲

நம் குழந்தைகளுக்கு இதை நாம் சொல்லி கொடுக்கலாம்

Feb
20,
2011

மாங்கல்ய தத்துவம்

|

திருமணத்தின் போது மணப்பெண்ணுக்கு அணிவிக்கப்படும் திருமாங்கல்யம் ஒன்பது இழைகளால் ஆனது. இதன் இழைகள் ஒவ்வொன்றுக்கும் ஒரு தத்துவம் உள்ளது.
1.வாழ்க்கையை புரிந்துகொள்
2.வாழ்க்கையில் மேன்மை
3.ஆற்றல்
4.தூய்மை

5.தெய்வ பக்தி
6.உத்தம நிலை
7.விவேகம்
8.தன்னடக்கம்

9.தொண்டு செய்தல்

Jan
30,
2011

தீபம் தரும் பலன்கள்

|

நெய்தீபம் - ஞானம் ஏற்படும், சகலவித சுகமும் சந்தோஷமும் இல்லத்தில் நிறைந்திருக்கும்.

நல்லெண்ணெய் தீபம் - எம பயம் அணுகாது, , குடும்பத்தை ஆட்டிப்படைக்கும் எல்லாப் பீடைகளும் தொலைந்து போகும்.

கடலை எண்ணெய் தீபம் - குடும்பத்தில் வறுமை வந்து சேரும். கடன்கள் அதிகமாகும்.

வேப்பெண்ணெய், நெய், இலுப்பை எண்ணெய் மூன்றும் கலந்து தீபமேற்றினால் செல்வம் பெருகும்.

நெய், விளக்கெண்ணெய், இழுப்பை எண்ணெய், வேப்பெண்ணெய், தேங்காய் எண்ணெய் இந்த ஐந்தும் கலந்து தீபமேற்றி அம்மனை வணங்கினால் தேவியின் அருள் கிட்டும்.

இலுப்பை எண்ணெய் தீபம் - ஆரோக்கியம்

விளக்கெண்ணெய் தீபம் - சகல செல்வமும் கிடைக்கும்



ஒரு முக தீபம் - மத்திம பலன் தரும்

இரண்டு முக தீபம் - குடும்பம் ஒற்றுமை தரும்

மூன்று முக தீபம் - புத்திர சுகம் தரும்

நான்கு முக தீபம் - பசு, பூமி, சுகம் தரும்

ஐந்து முக தீபம் - செல்வம் பெருகும்.



கிழக்கு திசையில் தீபம் ஏற்றி வணங்கிட துன்பம் அகலும். கிரகங்களின் சோதனை விலகும்.

மேற்கு திசையில் தீபம் ஏற்றி வழிபட்டால் கடன் தொல்லை, சனிப்பீடம், கிரக தோஷம், பங்காளி பகை ஆகியவை நீங்கும்.

வடக்கு திசையில் தீபம் ஏற்றிட, திரண்ட செல்வம் ஏற்படும். திருமணத்தடை, கல்வித்தடை ஆகியவை நீங்கி சர்வமங்களம் உண்டாகும்.

தெற்கு திசையில் தீபம் ஏற்றக்கூடாது. அது அபசகுணம் என அஞ்சப்படுகிறது.

Jan
26,
2011

பண்டைய தமிழ் காலம்

|

பண்டையத் தமிழர்கள் இயற்கையை ஆதாரமாகக் கொண்டு, காலத்தைப் பகுத்தனர்.


‘வைகறை, காலை, நண்பகல், எற்பாடு, மாலை, யாமம்’ என்று ஒரு நாளை ஆறு சிறு பொழுதுகளாக பிரித்தனர். அந்த ஆறு சிறு பொழுதுகளின் தொகுப்பை அறுபது நாழிகைகள் எனவும் பகுத்துக் கணக்கிட்டார்கள்.

அதாவது ஒரு நாளில் ஆறு சிறு பொழுதுகள் உள்ளன. அந்த ஆறு சிறு பொழுதுகள் கழிவதற்கு அறுபது நாழிகைள் எடுக்கின்றன.

1 நாழிகை 24 நிமிடங்கள்

60 நாழிகை 1440 நிமிடங்கள்

இதனை இன்றைய கணக்கீட்டின் படி பார்த்தால்

1440 நிமிடங்கள் 24 மணிகள்

24 மணிகள் 1 நாள்

இவ்வாறு இன்றைய நவீன காலக் கணிப்பீட்டு முறையுடன் பொருந்தும் வகையில், பண்டையத் தமிழரின் காலக் கணிப்பீட்டு முறை மிகவும் நுட்பமாகக் கணிக்கப்பட்டுள்ளது.

Pages (150)1234 Next
Related Posts Plugin for WordPress, Blogger...

தலைப்புகள்

anicent tamil (4) Blog Tips (2) Computer (4) ILUSION (1) information (1) LPG சிலிண்டர் (1) safety (2) Short Cut Key (2) SMS (1) tamil (14) tamil friendship poem (2) tamil joke (7) tamil kathai (5) tamil story (6) tamil year (1) Welding Symbol (1) அபூர்வ தகவல் (2) ஆரோக்கியம் (16) ஆவணங்கள் (7) இதிகாசம் (1) இயற்கை (4) எச்சரிக்கை (4) எடக்கு-மடக்கு (2) எனது பதில்கள் மற்றும் அனுபவங்கள் (1) கணணி பராமரிப்பு (1) கதை (21) கம்ப்யூட்டர்வேலை (1) கலைஞர் (1) கவிதை (11) காமராஜர் (1) குண்டக்க-மண்டக்க (2) சாப்ட்வேர் மாப்பிள்ளை (1) சிந்தனை (4) செய்தி (13) செல்வம் (1) சேமிப்பு (1) தமிழர் பண்பாடு (6) தமிழ் (18) தமிழ் அளவை (2) தமிழ் அளவைகள் (1) தமிழ் ஆண்டுகள் (2) தமிழ் எண்கள் (1) தமிழ் எழுத்து (2) தமிழ் காலம் (2) தமிழ் பாட்டு (2) தமிழ் மருத்துவம் (6) தமிழ்நாடு அரசு பாடப் புத்தகங்கள் (1) தன்னம்பிக்கை (2) தீபம் (1) துணுக்கு (17) தெரிந்துகொள்வோம் (14) நகைச்சுவை (33) நகைச்ச்சுவை (5) நகைச்ச்சுவைகடிதம் (1) நட்பு (3) நட்பு கவிதை (2) படம் (1) படித்ததில் பிடித்தது (63) படித்தேன்-இரசித்தேன் (2) பணம் (2) பரோட்டா (1) பழமொழி (3) பழம்தமிழர் (1) பறவை (1) பாதுகாப்பு (2) பிரபலமானவர்களின் (4) பெண்பார்க்கும் படலம் (2) பெற்றோர் (2) பொங்கல் (1) பொழுதுபோக்கு (31) மகாபாரதம் (1) மகிழ்ச்சி (3) மாங்கல்யம் (1) மாய தோற்றம் (1) வரலாற்று நிகழ்வு (2) வலைப்பூ (1) வழி காட்டி (9) வழிகாட்டி (30) வாழ்கை (14) வாழ்க்கை (9) வாழ்த்துகள் (15) விவசாயம் (2) விவசாயி (1) வேலை (3)

Contact Form

Name

Email *

Message *

 

©2009 அறிவு களஞ்சியம் | Template Blue by TNB