Welcome to Arivu's Collection

இனிய மாலைப் பொழுதில், இந்த வலைப் பக்கத்திற்கு வந்ததற்கு - நன்றி

திருக்குறள்

தேடல்

Dec
11,
2016

பட்டா....

|

இன்று, மக்கள் பட்டா வாங்குவதற்கு படும் பாடும் இருக்கிறதே... அதை வாங்குவதற்குள் நாயாய், பேயாய் அலைய வேண்டியுள்ளது. இந்த பட்டா எப்படி வந்தது தெரியுமா?

மன்னர் ஆட்சி காலத்தில், விவசாய நிலத்திற்கு தண்ணீர் பாய்ச்ச, குளம் மற்றும் ஏரிகளில் இருக்கும் மழைநீரை பயன்படுத்தினர் மக்கள். அதற்காக, வாய்க்கால்களை பராமரிக்க, மக்களிடம் தீர்வை (வரி) வசூலிக்கப்பட்டது.

மேலும், நஞ்சை, புஞ்சை நிலங்களில் பயிர் செய்வதற்கேற்ப, வரி வசூல் செய்யப்பட்டது. அதை பராமரிக்க, சிட்டா கொண்டு வரப்பட்டு, எவ்வளவு நிலத்தில் பயிர் செய்யப்பட்டனவோ, அதற்கேற்ப வரி வசூல் செய்யப்பட்டது.

பிற்காலத்தில், கிணறு, ஆழ்துளை கிணறு, இன்ஜின் மற்றும் மின் மோட்டர்கள் பயன்பாட்டுக்கு வந்தது. ஆனால், எவ்வளவு நிலத்தில் பயிர் செய்யப்பட்டனவோ அதற்கு மட்டும் வரி வசூல் செய்வதற்கு பதில், பயிர் செய்யப்படாத நிலத்திற்கும், வரி வசூலித்தது அரசு.
 

அடுத்தடுத்து வந்த ஆட்சியாளர்களும், அதே தவறையே செய்வதுடன், அதையே பட்டா என்ற பெயரில், மக்களை படாதபாடு படுத்துகின்றனர். இலவச மனை கொடுத்தால், அதற்கு பட்டா வாங்க வேண்டும் என்பது சரி. விலைகொடுத்து வாங்கிய நிலத்தை, அரசு பத்திரப்பதிவு அலுவலகத்தில் பதிவு செய்யப்பட்டு, அதற்கு வரி கட்டப்பட்ட பின், மறுபடியும் பட்டா என்ற பெயரில், ஒரு விலை கொடுக்க வேண்டுமா?

ஒரு பொருள் விலைகொடுத்து வாங்கிய பின், அதன் ரசீது உடையவருக்கு, அந்தப் பொருள் சொந்தம். பின், அதற்கு எதற்கு பட்டா என்ற பெயரில், மற்றொரு விலை? மக்களுக்கு உரிய சேவை செய்ய, 'பட்டா மாற்றம்' என்பதை கட்டாயமாக்குவதை தவிர்க்க வேண்டும். இலவச மனை பெறுவோருக்கு மட்டும் பட்டா கொடுத்தால் போதும்!

Nov
13,
2016

என் முத்தழகி

|

இந்த கவிதை எழுதியவர் பெயர் தெரியாது, ஆனால் மிகவும் பிடித்தது. கவிதைக்காக படமா அல்லது படத்துக்காக கவிதையா, இரண்டும் அருமை.
 
என் முத்தழகி
 
பாவாடை நாடாக்கூட கட்டதெரியாத
உன் கழுத்துல தாலிக்கட்ட சொன்னாங்க
கட்டுனது தாலியுனும்
நடந்தது கல்யாணம்னும்
பத்து வயசுல எனக்கு மட்டும் எப்படி தெரியும்


அரும்பு மீசைக்கு அர்த்தம் புருஞ்சப்போ
அம்மன் சிலையாட்டம் நீ நின்ன
சிறுத்த இடையழகி !
செவத்த நிறத்தழகி !
கொஞ்சும் பேச்சழகி !
என் முத்தழகி !


பின்கொசுவம் சேலைகட்டி,
கோணங்கி கொண்டை போட்டு,
கொண்டையில பூவும் வச்சு..
கும்முன்னு நீ வந்தா
கம்முனு இருக்கவா முடுஞ்சுது.


கம்மாகரையிலும்,
களத்துமேட்டுலையும்...
காதலும் வளந்துச்சு
குடும்பமும் பெருகுச்சு
மூணு காணி நிலத்துல
முறைய பயிர் வச்சு
கருதருத்து கமிட்டில கொடுத்து காசாக்கி
கழனி வேலைய நா பாக்க.
கணக்குபுள்ளையா நீ இருந்த.


எட்டு புள்ள பெத்தும் எடுபாத்தான் இருக்க புள்ளன்னு...
நைய்யாண்டி நான் பேச
மூத்தவ மூலைல உட்கார்ந்தாச்சு
இன்னும் முந்தானை நினைப்ப பாருன்னு சொல்லி
கொமட்டுல குத்தி குறும்பா சிரிச்சத நினைக்கையில்
நெஞ்சம் நிறைஞ்சிருக்கு.


அஞ்சு பொண்ணும்,
முணு பிள்ளையும்
வளந்து நிக்க
காச கரியாக்காம கச்சிதமா குடும்பம் பண்ணியதால
கெளரவமா அடுத்தடுத்து
அஞ்சு பொண்ணையும் கரையேத்தினோம்.
மூணு மருமகளையும் முறையா கொண்டுவந்து
பொறுப்ப கொடுத்து விருப்ப ஓய்வெடுக்க.
எடுத்த முடிவு தப்புன்னு இப்பதான் புரியுது.


பெத்த பிள்ளைங்க பாரமா நெனைக்க
மூணு வேலை சோத்துக்கு
மூத்தவன் வீட்ல ஒருநேரம்
இளையவன் வீட்ல ஒருநேரம்
நடுலவன் வீட்ல ஒருநேரம்னு...
நாதியத்து நாயா அலைய வேண்டியிருக்கு
உழைச்ச உழைப்புக்கு
விதிச்ச விதி இதுதான் !

முத்தழகி.

இப்போ நினைப்பெல்லாம் ஒண்ணுதான்.
கடைசி நிமிஷம் உன் மடியில கண்ண மூடனும்.
மூச்சி நின்னதை முடிவு பண்ணி
உன் முந்தானையில என் முகத்தை தொடச்சி
முறையா அனுப்பிட்டு
அடுத்த நிமிஷம் நீயும் வந்துடு
அங்கேயும் சேர்ந்தே இருப்போம்.
சொர்க்கமே ஆனாலும் சொக்கத்தங்கம்
நீ இல்லைனா சொகமேது.!

Oct
9,
2016

வேர்கடலை கொழுப்பு அல்ல ...!

|

வேர்கடலை கொழுப்பு அல்ல ...!ஒரு மூலிகை…!!
படித்ததில் பிடித்தது.
 
நிலக்கடலை குறித்த மூட நம்பிக்கைகள் அவ நம்பிக்கைகள் இந்தியாமுழுவதும் சர்வதேச நிறுவனங்களால் திட்டமிட்டு பரப்பிவிடப்பட்டுள்ளது.
 
நம் நாட்டில் நிலக்கடலை சாகுபடி செய்யப்பட்டிருக்கும் வயலில் அது கொட்டை வைக்கும் பருவம் வரை வயலில் எலிகள் அவ்வளவாக இருக்காது. ஆனால் நிலக் காய்பிடிக்கும் பருவத்துக்கு பிறகு எலிகள் அளவு கடந்து குட்டி போட்டிருப்பதை காணலாம் . நிலக்கடலை செடியை சாப்பிடும் ஆடு, மாடு, நாய், வயல் வெளியே சுற்றி உள்ள பறவைகள் எல்லாம் ஒரே நேரத்தில் குட்டி போடுவது இதற்கு நல்ல உதாரணம்.
நிலக்கடலையில் போலிக் ஆசிட் அதிகம் இருப்பதால் கர்பிணிப் பெண்களுக்கு மிகவும் அவசியம். எனவே நிலக் கடலையை தொடர்ந்து சாப்பிடும் பெண்களின் கர்பப்பை சீராக செயல்படுவதுடன் கர்பப்பைக் கட்டிகள், நீர்கட்டிகள் ஏற்படாதது மட்டுமல்லாது குழந்தைப் பேறும் உடன் உண்டாகும். தினமும் பெண்கள் எடுத்துக் கொண்டால் மகப்பேறு நன்றாக இருக்கும். கருவின் மூளை மற்றும் நரம்பு வளர்ச்சி சிறப்பாக அமையும். கருத்தரிப்பதற்கு முன்பே உண்பது மிக மிக உத்தமம். இல்லையேல் கருவுற்ற பின்னும் எடுத்துக் கொள்ளலாம்.
 
நீரழிவு நோயை தடுக்கும்: நிலக்கடலையில் மாங்கனீஸ் சத்து நிறைய உள்ளது.மாங்கனீஸ் சத்துமாவுச்சத்து மற்றும் கொழுப்புகள் மாற்றத்தில் முக்கிய பங்காற்றுகிறது . நாம் உண்ணும்உணவில் இருந்து கால்சியம் நமது உடலுக்கு கிடைக்கவும் பயன்படுகிறது. குறிப்பாக பெண்கள் நிலக்கடலையை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் எலும்புத்துளை நோய் வராமல் பாதுகாத்துக் கொள்ளலாம்.

பித்தப் பை கல்லைக் கரைக்கும்:  நிலக்கடலையை தினமும் 30 கிராம் அளவுக்கு தினமும் சாப்பிட்டு வந்தால் பித்தப்பை கல் உருவாவதைத் தடுக்க முடியும். 20 வருடம் தொடர்ந்து நடத்தப்பட்ட ஆய்வில் இந்த தகவல் தெரியவந்துள்ளது.
 
இதயம் காக்கும்: நிலக் கடலை சாப்பிட்டால் எடை போடும் என்று நாம் நினைக்கிறோம். உண்மையல்ல. மாறாக உடல் எடை அதிகமாகாமல் இருக்க வேண்டும் என்று நினைப்பவர்களும் நிலக்கடலை சாப்பிடலாம். நிலக்கடலையில் ரெஸ்வரெட்ரால் என்ற சத்துநிறைந்துள்ளது . இது இதய வால்வுகளை பாதுகாக்கிறது. இதய நோய்கள் வருவதையும்தடுக்கிறது. இதுவே மிகச் சிறந்த ஆண்டி ஆக்சிடென்டாக திகழ்கிறது.
 
இளமையை பராமரிக்கும் :இது இளமையை பராமரிக்க பெரிதும் உதவுகிறது.நிலக்கடலையில் பாலிபீனால்ஸ் என்ற ஆண்டி ஆக்சிடென்ட் உள்ளது. இது நமக்கு நோய்வருவதை தடுப்பதுடன் இளமையை பராமரிக்கவும் பயன்படுகிறது.
 
ஞாபக சக்தி அதிகரிக்கும்: நிலக்கடலை மூளை வளர்ச்சிக்கு நல்ல டானிக் போன்றது. நிலக்கடலையில் மூளை வளர்ச்சிக்கு பயன்படும் விட்டமின் 3 நியாசின் உள்ளது. இது மூளைவளர்ச்சிக்கும் ஞாபக சக்திக்கும் பெரிதும் பயனளிக்கிறது. ரத்த ஓட்டத்தையும் சீராக்குகிறது.
 
மன அழுத்தம் போக்கும்: நிலக்கடையில் பரிப்டோபான் என்ற முக்கிய அமினோ அமிலம் நிறைந்துள்ளது. இந்த வகை அமினோ அமிலம் செரட் டோனின் என்ற மூளையை உற்சாகப்படுத்தும்.உயிர் வேதிப் பொருள் உற்பத்திக்கு பயன்படுகிறது.செரட்டோனின் மூளை நரம்புகளை தூண்டுகிறது.மனஅழுத்தத்தை போக்குகிறது. நிலக்கடைலையை தொடர்ந்து சாப்பிடுவோருக்கு மன அழுத்தத்தைப் போக்குகிறது.

கொழுப்பை குறைக்கும்: தலைப்பை படிப்பவர்களுக்கு ஆச்சரியம் ஏற்படலாம்.ஆனால் அதுதான் உண்மை. நிலக்கடலை சாப்பிட்டால் கொழுப்பு சத்து அதிகமாகும் என்று நம்மில் பலரும்நினைத்திருப்போம். ஆனால் அதில் உண்மையில்லை.மாறாக மனிதனுக்கு நன்மை செய்யும் கொழுப்பு தான் நிலக்கடலையில்உள்ளது. நிலக்கடலையில் உள்ள தாமிரம் மற்றும் துத்தநாக சத்தானது நமது உடலின் தீமை செய்யும் கொழுப்பை குறைத்து நன்மை செய்யும் கொழுப்பை அதிகமாக்குகிறது. 100 கிராம் நிலக்கடலையில் 24 கிராம்மோனோ அன் சாச்சுரேட்டேட் வகை கொழுப்பு உள்ளது. பாலிஅன்சாச்சுரேட்டேடு 16கிராம் உள்ளது.
 
இந்த இருவகை கொழுப்புமே நமது உடம்புக்கு நன்மைசெய்யும் கொழுப்பாகும். பாதாமை விட நிலக்கடலையில் நன்மை செய்யும் கொழுப்பு அதிகமாக உள்ளது. நிலக்கடலையில் உள்ள ஒமேகா-3 சத்தானது நமது உடலின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது.

அமெரிக்கர்களை கவர்ந்த நிலக்கடலை: உலக அளவில் சீனாவிற்கு அடுத்து இந்தியாவில்தான் நிலக்கடலை அதிகம் உற்பத்தி செய்யப்படுகிறது.இவ்விரு நாடுகளின் மக்கள்பெருக்கத்திற்கும் நிலக்கடலை முக்கிய காரணமாகும். இந்தியாவில் குழந்தைப் பேறுக்கான மருந்துகளின் விற்பனைவாய்ப்புக்கு நிலக்கடலை உண்ணும் வழக்கம் தடையாக இருக்கிறது மற்றும் சில இதய நோய்க்கான மருந்துகளை விற்பனை செய்ய முடியவில்லை. எனவே இந்தியர்களிடம் நிலக்கடலை குறித்து தவறான தகவல்களை பரப்பி நிலக்கடலை மற்றும் நிலக்கடலைஎண்ணெய் வகைகளை பயன்படுத்துவதை தடுத்துவிட்டார்கள். இதன் காரணமாக குழந்தையில்லாத தம்பதிகள் பெருகிவிட்டார்கள்.
 
கடந்த 20 வருடமாக இந்தியாவில் நிலக்கடலையின் விலை பெரியமாற்றம் ஏதும் இல்லாமல் ஒரே விலையில் விற்பனை செய்யப்படுகிறது. ஆனால் இதே கால கட்டத்தில் அமெரிக்கர்களின் உணவில்நிலக்கடலையின் பங்கு 15 மடங்கு கூடி இருப்பதுடன் விலையும் கூடிஇருக்கிறது. இந்தியர்கள் அனைவரும் நிலக்கடலை சாப்பிட ஆரம்பித்தால் அமெரிக்கர்கள்நிலக்கடலை அதிகம் விலை கொடுத்து சாப்பிட வேண்டும் என்று கருதிதான் இந்தியர்களிடம் நிலக்கடலை குறித்து தவறான தகவல்கள் பரப்பப்பட்டுள்ளது.
 
கருப்பை கோளாறுக்கு முற்றுப்புள்ளி: பெண்களின் இயல்பான ஹார்மோன் வளர்ச்சியை நிலக்கடலை சீராக்குகிறது. இதனால் பெண்களுக்கு விரைவில் குழந்தை பேறு ஏற்படுவதுடன் பெண்களுக்கு ஏற்படும் மார்பகக் கட்டி உண்டாவதையும் தடுக்கிறது.பெண்களுக்கு பெரிதும் தேவையான போலிக் அமிலம்,பாஸ்பரஸ், கால்சியம், பொட்டாசியம், துத்தநாகம்,இரும்பு, விட்டமின்கள், குறுட்டாமிக் அமிலம் நிலக்கடலையில் நிறைந்துள்ளது. இதன் காரணமாக பெண்களுக்கு கருப்பை கட்டிகள், நீர்கட்டிகள் ஏற்படுவதையும் தடுக்கிறது.
 
நிறைந்துள்ள சத்துக்கள்:
100கிராம் நிலக்கடலையில் கீழ்க்கண்ட சத்துக்கள் நிறைந்துள்ளது.
கார்போஹைட்ரேட்- 21 மி.கி.
நார்சத்து- 9 மி.கி.
கரையும்(நல்ல HDL) கொழுப்பு – 40 மி.கி.
புரதம்- 25 மி.கி.
ட்ரிப்டோபான்- 0.24 கி.
திரியோனின் – 0.85 கி
ஐசோலூசின் – 0.85 மி.கி.
லூசின் – 1.625 மி.கி.
லைசின் – 0.901 கி
குலுட்டாமிக் ஆசிட்- 5 கி
கிளைசின்- 1.512 கி
விட்டமின் -பி1, பி2, பி3, பி1, பி2, பி3, பி5, பி6, சி
கால்சியம் (சுண்ணாம்புச்சத்து) – 93.00 மி.கி.
காப்பர் – 11.44 மி.கி.
இரும்புச்சத்து – 4.58 மி.கி.
மெக்னீசியம் – 168.00 மி.கி.
மேங்கனீஸ் – 1.934 மி.கி.
பாஸ்பரஸ் – 376.00 மி.கி.
பொட்டாசியம் – 705.00 மி.கி.
சோடியம் – 18.00 மி.கி.
துத்தநாகச்சத்து – 3.27 மி.கி.
தண்ணீர்ச்சத்து – 6.50 கிராம்.
போன்ற சத்துக்கள் நிறைந்துள்ளது. போலிக் ஆசிட் சத்துக்களும் நிரம்பி உள்ளது.
 
பாதாம், பிஸ்தாவை விட சிறந்தது: நாம் எல்லாம் பாதாம், பிஸ்தா,முந்திரிப்பருப்புகளில்தான் சத்து அதிகம் உள்ளது என்று கருதுகிறோம். அது தவறு. நிலக்கடலையில் தான் இவற்றை எல்லாம் விட அளவுக்கதிகமான சத்துக்கள் உள்ளன. நோய்எதிர்ப்பு சக்தியை உருவாக்கும் ஆற்றலும் நிலக்கடலைக்குதான் உண்டு
 

Sep
11,
2016

அலுவலக கீதை

|

நீ தனியாகத்தான் வந்தாய்,
தனியாகத்தான் போவாய்.
இங்கு உனக்கு என்று ஒன்றும் கிடையாது....

பணியாளர்கள் குறைவு என்று வருந்தாதே !
நீ தனியாகத்தான் போராட வேண்டும்.
யாரையும் நம்பி உன்னை ஏமாற்றிக்கொள்ளாதே !
உற்றார் உறவினர் நண்பர்கள்
சக பணியாளர்கள் என்பதெல்லாம் மாயை.
அவை அனைத்தும் மாயையின் சின்னங்கள்.

அதிகமாக உழைக்கும் காரணமாக உன்னை மீறி நடக்கும் பிழைகளுக்கும் அதற்குண்டான தண்டனைகளுக்கும் வருந்தாதே!!
அடுத்த பதவி உயர்வு கிடைக்கவில்லையே என்று ஏங்காதே!!
தற்போது எந்தப் பதவியில் இருக்கிறாயோ
அதில் திருப்திபட்டுக்கொள்!

நீ எப்பொழுது இங்கு இல்லையோ
அப்பொழுதும் இந்த அலுவலகம் நடந்து கொண்டுதான் இருந்தது.
நீ எப்பொழுது இருக்கப் போவதில்லையோ அப்பொழுதும் இந்த அலுவலகம்நடந்து கொண்டுதான் இருக்கும்.
இதில் நீ என்று எதுவும் கிடையாது.

இன்று உனது வேலை எதுவோ,
அது நேற்று வேறு ஒருவருடையதாக இருந்தது,
நாளை வேறு ஒருவருடையது ஆகி விடப் போகிறது.

நீ என்பது ஒரு மாயை.
தான் என்ற கர்வம்
வரக் கூடாது.
இந்த மாயை மட்டுமே உனது அனைத்து கவலைகளுக்கும் காரணம்.

பதவி உயர்வு,
சம்பள உயர்வு, விடுமுறைகள், . என்கிற வார்த்தைகளை நீ மறந்துவிடு.
மாயையிலிருந்து விடு படு.
அப்படி இருக்கும் பட்சத்தில் நீதான் யதார்த்தமான புத்திசாலி.

 படித்ததில் பிடித்தது, வருடாந்திர appraisal paper வந்தபின்???

Jul
10,
2016

அழகு

|


ஒரே நாள் ஒருத்தன் குயிலிடம் சொன்னான் நீ மட்டும் கருப்பா, இல்லைன்னா எவ்ளோ நல்லா இருக்கும்,

கடலிடம் சொன்னான் நீ மட்டும் உப்பா இல்லைன்னா எவ்ளோ நல்லா
இருக்கும்,
 
ரோஜாவிடம் சொன்னான் உன்னிடம் முட்கள் இல்லைன்னா எவ்ளோ நல்லா இருக்கும்,

அப்போது அந்த மூன்றும் ஒன்று சேரந்து சொன்னது மானிடா உன்னிடம் மட்டும் பிறரின் குறை கண்டுபிடிக்கும் பழக்கம் இல்லைன்னா எவ்ளோ நல்லா இருக்கும், ,

பிறரிடம் குறை காணா மனிதன் என்றுமே அழகு தான்..

Jun
12,
2016

வித்தியாசம்...

|

ஒரு அரசனுக்கு அவனுடைய எல்லா பற்களும் விழுந்து பொக்கை வாயுடன் இருப்பதாக ஒரு கனவு வந்தது. இதனால் காலையில் பீதியுடன் எழுந்த அவன், அந்தக் கனவால் என்ன விளைவுகள் நேருமோ என்று பயந்துபோய் முதல் வேலையாக ஒரு நாடி ஜோதிடரை வரவழைத்தான்.
 
அந்த நாடி ஜோதிடர் தனது ஓலைச்சுவடியை எடுத்து, அதில் பொக்கை வாய் கனவு பற்றி விளக்கியிருந்த ஒரு ஓலையை வாசித்துவிட்டு, ‘அரசே! உங்கள் மனைவி, குழந்தைகள், சொந்த பந்தங்கள் எல்லாம் உங்களுக்கு முன்பே இறந்து விடுவார்கள்என்று பலன் சொன்னார். உடனே அந்த அரசன் மிகவும் கோபமுற்று, ‘இவனைப் பிடித்து சிறையில் தள்ளுங்கள்!’ என்று உத்தரவிட்டான். அதன் பிறகும் மன்னனின் மனம் சமாதானமடையவில்லை.
 
 இன்னொரு நாடி ஜோதிடரை வரவழைத்து, அவரிடம் தன் பொக்கை வாய் கனவின் அர்த்தம் என்ன என்று வினவினான். அந்த ஜோதிடரும் அதே மாதிரியான ஓலைச்சுவடியைத்தான் வைத்திருந்தார். அவரும் அதைப் பார்த்துவிட்டு, ‘மன்னா! உங்கள் சொந்த, பந்தங்களையெல்லாம் விட நீங்கள் நீண்ட காலம் நீடூடி வாழ்வீர்கள்என்று பலன் கூறினார். இதனால் மனம் குளிர்ந்த அரசன், அந்த ஜோதிடருக்கு தகுந்த பரிசுகள் வழங்கி அனுப்பி வைத்தான். இருவரும் அதே ஓலையைத்தான் படித்தார்கள், அதே விஷயத்தைதான் சொன்னார்கள். ஒருவர் எல்லோரும் இறந்துவிடுவார்கள் என்றார், இன்னொருவர் எல்லோரையும் கடந்து வாழ்வீர்கள் என்றார், அவ்வளவுதான் வித்தியாசம்.

May
8,
2016

எது வாழ்வில் மகிழ்ச்சி !

|


அன்பு பிறரிடம் காட்டுவது

ஒற்றுமை உணர்வுடன் இருப்பது

அக்கறை மற்றவர்களிடம் செலுத்துவது

அவர்களுக்கு  எப்போதும் நம்பிக்கை வளர்ப்பது

அவர்கள் வாழ்வில்   எப்போதும் அமைதி காப்பது

நீங்கள் அவர்களுக்கு என்றும் ஓர்  புரியாத புதிராய்  இருப்பது

மற்றவர்கள் உணர்வுகளை மதிப்பது அவர்களுக்கு மரியாதை 
கொடுப்பது

 

Apr
14,
2016

தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்!

|

அனைவருக்கும் இனிய  துர்முகி  ஆண்டின் தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்!
 
 
புத்தாண்டில் புதிய சிந்தனை,
புதிய முயற்சி, புதிய எண்ணங்கள் பூக்கட்டும்.
நட்புகளுக்கும், சொந்தங்களுக்கும்
தமிழ் இனத்துக்கும், உயிரோடு இணைந்த
அனைத்து தமிழ் உறவுகளுக்கும்
🌷இனிய தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துகள்🌷

 

Pages (150)1234 Next
Related Posts Plugin for WordPress, Blogger...

தலைப்புகள்

anicent tamil (4) Blog Tips (2) Computer (4) ILUSION (1) information (1) LPG சிலிண்டர் (1) safety (2) Short Cut Key (2) SMS (1) tamil (14) tamil friendship poem (2) tamil joke (7) tamil kathai (5) tamil story (6) tamil year (1) Welding Symbol (1) அபூர்வ தகவல் (2) ஆரோக்கியம் (16) ஆவணங்கள் (7) இதிகாசம் (1) இயற்கை (4) எச்சரிக்கை (4) எடக்கு-மடக்கு (2) எனது பதில்கள் மற்றும் அனுபவங்கள் (1) கணணி பராமரிப்பு (1) கதை (21) கம்ப்யூட்டர்வேலை (1) கலைஞர் (1) கவிதை (11) காமராஜர் (1) குண்டக்க-மண்டக்க (2) சாப்ட்வேர் மாப்பிள்ளை (1) சிந்தனை (4) செய்தி (13) செல்வம் (1) சேமிப்பு (1) தமிழர் பண்பாடு (6) தமிழ் (18) தமிழ் அளவை (2) தமிழ் அளவைகள் (1) தமிழ் ஆண்டுகள் (2) தமிழ் எண்கள் (1) தமிழ் எழுத்து (2) தமிழ் காலம் (2) தமிழ் பாட்டு (2) தமிழ் மருத்துவம் (6) தமிழ்நாடு அரசு பாடப் புத்தகங்கள் (1) தன்னம்பிக்கை (2) தீபம் (1) துணுக்கு (17) தெரிந்துகொள்வோம் (14) நகைச்சுவை (33) நகைச்ச்சுவை (5) நகைச்ச்சுவைகடிதம் (1) நட்பு (3) நட்பு கவிதை (2) படம் (1) படித்ததில் பிடித்தது (63) படித்தேன்-இரசித்தேன் (2) பணம் (2) பரோட்டா (1) பழமொழி (3) பழம்தமிழர் (1) பறவை (1) பாதுகாப்பு (2) பிரபலமானவர்களின் (4) பெண்பார்க்கும் படலம் (2) பெற்றோர் (2) பொங்கல் (1) பொழுதுபோக்கு (31) மகாபாரதம் (1) மகிழ்ச்சி (3) மாங்கல்யம் (1) மாய தோற்றம் (1) வரலாற்று நிகழ்வு (2) வலைப்பூ (1) வழி காட்டி (9) வழிகாட்டி (30) வாழ்கை (14) வாழ்க்கை (9) வாழ்த்துகள் (15) விவசாயம் (2) விவசாயி (1) வேலை (3)

Contact Form

Name

Email *

Message *

 

©2009 அறிவு களஞ்சியம் | Template Blue by TNB