இன்று, மக்கள் பட்டா வாங்குவதற்கு படும் பாடும் இருக்கிறதே... அதை வாங்குவதற்குள் நாயாய், பேயாய் அலைய வேண்டியுள்ளது.
இந்த பட்டா எப்படி வந்தது தெரியுமா?
மன்னர் ஆட்சி காலத்தில், விவசாய நிலத்திற்கு தண்ணீர் பாய்ச்ச, குளம் மற்றும் ஏரிகளில் இருக்கும் மழைநீரை பயன்படுத்தினர் மக்கள். அதற்காக, வாய்க்கால்களை பராமரிக்க, மக்களிடம் தீர்வை (வரி) வசூலிக்கப்பட்டது.
மேலும், நஞ்சை, புஞ்சை நிலங்களில் பயிர் செய்வதற்கேற்ப, வரி வசூல் செய்யப்பட்டது. அதை பராமரிக்க, சிட்டா கொண்டு வரப்பட்டு, எவ்வளவு நிலத்தில் பயிர் செய்யப்பட்டனவோ, அதற்கேற்ப வரி வசூல் செய்யப்பட்டது.
பிற்காலத்தில், கிணறு, ஆழ்துளை கிணறு, இன்ஜின் மற்றும் மின் மோட்டர்கள் பயன்பாட்டுக்கு வந்தது. ஆனால், எவ்வளவு நிலத்தில் பயிர் செய்யப்பட்டனவோ அதற்கு மட்டும் வரி வசூல் செய்வதற்கு பதில், பயிர் செய்யப்படாத நிலத்திற்கும், வரி வசூலித்தது அரசு.
அடுத்தடுத்து வந்த ஆட்சியாளர்களும், அதே தவறையே செய்வதுடன், அதையே பட்டா என்ற பெயரில், மக்களை படாதபாடு படுத்துகின்றனர். இலவச மனை கொடுத்தால், அதற்கு பட்டா வாங்க வேண்டும் என்பது சரி. விலைகொடுத்து வாங்கிய நிலத்தை, அரசு பத்திரப்பதிவு அலுவலகத்தில் பதிவு செய்யப்பட்டு, அதற்கு வரி கட்டப்பட்ட பின், மறுபடியும் பட்டா என்ற பெயரில், ஒரு விலை கொடுக்க வேண்டுமா?
ஒரு பொருள் விலைகொடுத்து வாங்கிய பின், அதன் ரசீது உடையவருக்கு, அந்தப் பொருள் சொந்தம். பின், அதற்கு எதற்கு பட்டா என்ற பெயரில், மற்றொரு விலை? மக்களுக்கு உரிய சேவை செய்ய, 'பட்டா மாற்றம்' என்பதை கட்டாயமாக்குவதை தவிர்க்க வேண்டும். இலவச மனை பெறுவோருக்கு மட்டும் பட்டா கொடுத்தால் போதும்!
0 comments:
Post a Comment