நான் சமீபத்தில் அரசு நூலகத்திலிருந்து எடுத்து படித்த சரித்திர சான்றுகளை மையமாக வைத்து எழுதப்பட்ட சரித்திர நாவல் தான் “பல்லவன் பாவை”. இதை எழுதியவர் கருப்பூர் மூ அண்ணாமலை. சோழ நாட்டில் சோழர் ஆட்சியை மீண்டும் கொண்டு வந்த விஜயலாய சோழனை பற்றிய கதை. இதன் முதல் பதிப்பு டிசம்பர் மாதம் 2017 ஆம் ஆண்டு வெளிவந்துள்ளது.
கதாநாயகன் இளைய வீரன் என்கின்ற விஜயலாய சோழன், கதாநாயகி பல்லவ மன்னனின் மகளான திரிபுவனமாதேவி கதாபாத்திரம் உள்ளது. பல்லவ மன்னனாக நிருபதுங்க வர்மன் அவனது மகனாக அபராஜிதன் பாத்திரங்கள் படைக்கப்பட்டுள்ளன. சைவ சமயத்தை பரப்புவதற்காக வந்த ஆனந்த பிரம்மச்சாரி என்கின்ற கதாபாத்திரம். கதாநாயகன் திரிபுவனமாதேவியை பல்லவன் பாவையாக அழைக்கிறான்.
இளையவர்மனுக்கு சோழ ராஜ்ஜியத்தை அடிமையிலிருந்து (முத்தரையர்களிடமிருந்து) மீட்டு சுதந்திர நாடாக
ஆக்க கனவு. ஆனந்த பிரம்மச்சாரிக்கு சைவ சமயத்தை மீண்டும் கொடிகட்டி பறக்க வைக்க வேண்டும் என்று கனவு. திரிபுவனமாதேவியோ புத்த
சமயத்தை பரப்புவதற்காக முயல்கிறார். அபராஜிதனக்கோ தனது
தந்தையையும் தங்கையையும் கொன்று பல்லவ நாட்டிற்கு முடி சூட்டிக்கொள்ள வேண்டும்
என்று ஆசைப்படுகிறான்.
கதாநாயகன் அனைத்து சூழ்ச்சிகளையும் முறியடித்தது, போரில் வென்றதால் பழையாரையை தனி நாடாக கொடுத்து விடுகிறார்கள். கதாநாயகனை பின்னாளில் விஜயலாய சோழன் என்று பெயரோடு அந்த முடி சுட்டுக்
கொள்கிறான் விஜயன் என்றால் வெற்றியை உடையவன் என்றும் வேற்று நாட்டிற்கு சென்று
வந்தவன் என்றும் பொருள்.
இந்த சரித்திர புதினத்தில் ஒரு சில மேற்கோள்கள் என்னை மிகவும் கவர்ந்தது.
அவற்றை கீழே கொடுத்துள்ளேன்.
1.
எதற்குமே ஒரு
தகுதி வேண்டும். பொறுப்பற்று திரிபவர்களுக்கு அந்தப் பதவியை தந்து விட்டால் அந்தப்
பதவிக்கே மதிப்பில்லாமல் போகும். அது மட்டும் இல்லாமல் அந்தப் பதவியினால் இந்த
நாடே பரிதவித்த போகும்.
2. அரசியலில் வேண்டியவர்களும் இல்லை. வேண்டாதவர்களும் இல்லை. சந்தர்ப்பம் சதி வலையைப் பின்னுகிற போது, அரசியல்வாதி தனது பதவியை காப்பாற்றிக் கொள்வதற்காக யாரையும் பலி கொடுப்பான்.
3. மதத்தை நிலை
நாட்டுவது என்பது மரத்தில் இருக்கும் மாங்காயை பறித்து வருவது போல் அல்ல. வெறும்
பக்திப் பாடல்களாலும், ஆண்டவனுடைய பெருமையைப் பற்றி பேசிக் கொண்டிருப்பதாலும்
மட்டுமே ஒரு மாதம் நிலைத்து நிற்க முடியாது.
4.
மதத்தை
மக்களிடையே நிலைநாட்டுவதற்கு எத்தனையோ சூழ்ச்சிகள் செய்ய வேண்டி இருக்கிறது. மதம்
அன்பினைத்தான் போதிக்கிறது. இருப்பினும் அது குருதிச் சேற்றில் தான் மலர்கிறது!
நமது சைவ மதம் மட்டுமில்லை. உலகில் எல்லா மதங்களுமே இந்த அடிப்படையைத்தான்
இலக்கணமாகவே கொண்டுள்ளன.
5.
நல்ல உவமைகள்- “இங்கிதம் தெரியாத இடத்தில் சங்கீதம் படிப்பவனை போல” மற்றும் “காணாமல் போன பொன் ஒன்று திரும்பவும் கைக்குக் கிடைத்து
விட்டதைப் போல”.
0 comments:
Post a Comment