மனிதன் அதிகம் உண்ணும்,உணவில்
சத்தில்லாத சர்க்கரையும் ஒன்று. நம் உடலுக்கு, இவை அறவே
தேவையில்லை.உடலுக்கு சக்தி தேவைப்படும் போது இதர உணவுகள் "குளுக்கோஸ்'
ஆக மாற்றி
அமைக்கப்படுகின்றன.
உடலுக்கு எந்த சத்தையும் கொடுக்காமல்,
இருப்பதோடு மட்டுமின்றி,
உடலில் உள்ள சத்தையும் இது ஈர்த்துகொள்கிறது. அதனால் தான்,
இதுசத்தில்லாத கலோரி உணவு என்றும் அழைக்கிறோம். சிகரெட்,
மது முதலியவற்றை விட சர்க்கரை
அதிக ஆபத்தானது. புற்றுநோய்,எலும்புமுறிவு
நோய், மூட்டு வியாதிகள்,உடல் பருமன்,
இதய நோய், ரத்த
அழுத்தம், சரும நோய், விரைவில்
முதிர்ச்சி, முதுமை, பித்தக்கல்,
ஈரல்நோய், சிறுநீரக
கோளாறு, சொத்தை பல், பெண்ணுறுப்பு
தொற்றுநோய், அளவுக்கு மீறிய சுறுசுறுப்பு,
வன்செயல்,பரவலாக
இருக்கும் நீரழிவு நோய், இப்படி சர்க்கரை
உடலில் உள்ள ஒவ்வொரு உறுப்பையும் பாதிப்பிற்கு உள்ளாக்குகிறது. கேனில் அடைத்து
விற்கும் பானங்கள், செயற்கை சத்துணவு முதலியவற்றில்,
சர்க்கரை அதிகம் சேர்க்கப்படுகிறது.
குழந்தைகளுக்கு ஆபத்து:
குளிர்பானம், ஐஸ்கிரீம்,
சாக்லேட் மற்றும் அளவுக்கு அதிகமான சர்க்கரை உள்ள
உணவுகளை கொடுப்பதன் மூலம், குழந்தைகள் நோயாளிகளாக
உருவாகின்றனர். சர்க்கரை அதிகமாகவும்,
வைட்டமின்மற்றும் தாதுபொருட்கள் குறைவாகவும் உள்ள உணவு வகைகளை உட்கொண்டு
வருபவர்களுக்கு, உடம்பில் ரசாயன மாறுதல் ஏற்பட்டு அளவுக்கு
மிஞ்சிய துடுக்குதனத்தை தூண்டிவிடும். ஜப்பானில் பெருகிவரும் வன்செயல்களுக்கும், நொறுக்கு
தீனிகளுக்கும் அதிக தொடர்பு இருப்பதாக ஆய்வுகள் சுட்டிக்காட்டுகிறது.
இனிப்பான பொருட்களை உண்ணும் போது வாயில் உள்ள பாக்டீரியாக்கள்,
ஒருவித அமிலத்தை உருவாக்கும். இந்த அமிலம்,
பற்களில் உள்ள "எனாமலை'
அரித்து ஓட்டையாக்கி, பல்லில் சொத்தையை
ஏற்படுத்தும். சர்க்கரையும், கொழுப்பும்
உள்ள உணவு பொருட்கள், ரத்தத்தில் "கொலஸ்ட்ரால்'
அளவை அதிகரித்து விடுவதால்,
இருதய நாளங்கள் அடைபடுகின்றன. இதனால்,
ரத்தம், ஆக்சிஜன் மற்றும் சத்துக்கள்
செல்வது தடைபடுகிறது. இது தொடருமானால், ஒருவருடைய
தசைநார்கள் இறந்துபோய், மாரடைப்பை
ஏற்படுத்தும். இந்த மாரடைப்பிற்கு குழந்தை பருவத்திலேயே நாம் வித்திட்டு
விடுகிறோம்.
பெண்மைக்கு பகை:
"கேன்டிடா எல்பிகன்ஸ்'
என்ற பெண் உறுப்பு தொற்றுநோயை, சர்க்கரை,
இன்னும் அதிகளவு
துரிதப்படுத்துகிறது. அளவுக்கு அதிகமாக "சுக்ரோஸ்'
உள்ள உணவு எலும்பில் கால்சியத்தை
குறைத்து, எலும்பு முறிவு நோயை உண்டாக்குகிறது என
பின்லாந்து ஆய்வு தெரிவிக்கிறது. காபி அல்லது டீ-யில் ஒரு
நாளைக்கு 3 அல்லது 4 தேக்கரண்டி
சர்க்கரையை மட்டுமே சேர்க்க வேண்டும். இவற்றை
சாப்பிடாமல் இருந்தால், இன்னும் சிறப்பு தான். எனவே,
மெல்ல கொல்லும் சர்க்கரையை தவிர்ப்பது நல்லது.
1 Comentário:
Ahaa, its pleasant discussion about this paragraph at this place
at this website, I have read all that, so at this time me
also commenting at this place.
Look at my web page; Beats By Dre Outlet
Post a Comment