அமெரிக்காவில், சியாட்டில் நகரில் பனிப்புயலினூடே ஒரு ஹெலிகாப்டர் சிக்கித் தடுமாறியது. அதன் தகவல் தொடர்பு சாதனங்களும் பழுதுபட்டு விட்டன.
என்ன செய்வதென்றறியாமல் பைலட்டும், துணை பைலட்டும் திணறும் போது, ஒரு உயரமான கட்டிடத்தைக் கண்டனர். அதில் இருந்த சில அதிகாரிகளும் ஹெலி அலைக்கழிக்கப் படுவதை உணர்ந்து அதற்கு உதவ முன்வந்தனர்..
" நாங்கள் எங்கே இப்போது இருக்கிறோம்..??"
அந்த கட்டிடத்தில் இருந்த அதிகாரிகளும் மிகுந்த சிரமத்தின் பேரில் பதிலளித்தனர்....
" உங்கள் ஹெலிகாப்டருக்குள் இருக்கிறீர்கள்..!!!"
துணை பைலட் கோபத்தின் உச்சிக்கே போக, பைலட் அவரை சமாதானப் படுத்திவிட்டு சொன்னார்..." இனி பயமில்லை..இது தான் மைக்ரோசாப்ட் நிறுவனம்.. இதற்கு பக்கத்தில் ஒரு இறங்குதளம் உள்ளது.. நாம் பிழைத்தோம்."
சற்று நேரத்தில் ஹெலி பத்திரமாக தரை இறங்கியது..
துணை பைலட் கேட்டார்," எப்படி நீங்கள் அது மைக்ரோசாப்ட் என்று கண்டுபிடித்தீர்கள் ?
பைலட் சொன்னார்," பதில் சொன்னாங்க கேட்டீல்லே.. கரெக்டா சொல்வானுங்க.. ஆனா யாருக்கும் பிரயோசனம் இருக்காது..!!!".
0 comments:
Post a Comment