இது நெட்டில்
படித்தது
ஒருவன் இறைவனை
வேண்டி தவமிருந்தான்..
இறைவன் தோன்றி
" என்ன வரம் வேண்டும் பக்தா ? " என்று நேரடியாக விஷயத்துக்கு வந்தார்..
ஆண்டவா..
அமெரிக்காவில் என் மகன் இருக்கிறான். அவனைப் பார்க்க வான் வழிப் பாலம் ஒன்று
அமைத்துக் கொடு.. நான் விரும்பிய சமயத்தில் காரில் சென்று திரும்ப வசதியாக
இருக்கும்..என்றான்.
இறைவனோ.."
பக்தா.. இது என்னால் முடியும் என்றாலும், எவ்வளவு முயற்சிகள் மேற்கொள்ள வேண்டும் தெரியுமா..? பெரிய தூண்கள் அமைத்து அதன் மேல் பாலம்
உருவாக்க வேண்டும்..இது உன் ஒருவன் சம்பந்தப்பட்ட விஷயம்..
உனக்காக மட்டும்
இவ்வளவு முயற்சிகள் மேற்கொள்ளப்பட வேண்டுமா..?
நீ கேட்கும் வரம்
உனக்கும், உலகத்துக்கும்
நன்மை பயக்க வேண்டும்.. உனக்கு புகழையும் எனக்கு மரியாதையும் தரும் படியாக ஒரு
வரத்தைக் கேள்.. நன்றாக யோசி.. நாளை வருகிறேன்...
மறுநாள்.... நம்ம
ஆள் கேட்டான்.. " இறைவா..எல்லாம் அறிந்தவனே..! நான் பெண்கள் மனதை புரிந்து
கொள்ளும் வரம் தா..!"
அதிர்ச்சியடைந்த
இறைவன் சொன்னார்.." உனக்கு பாலம் மட்டும் போதுமா..இல்லே முழுக்க சோடியம்
வேப்பர் விளக்கும் வேணுமா..???
0 comments:
Post a Comment