ஒரு மருத்துவமனை.
டாக்டர்கள் கூடினர்.
“தீவிர சிகிச்சைப்
பிரிவில், தினம் காலை எட்டு
மணிக்கு ஒரு நோயாளி இறக்கிறார். ஏன்?”
மருத்துவரீதியாக
எந்த விளக்கமும் திருப்தி தரவில்லை. நிபுணர்களுக்கே இந்த விஷயம் சவாலாக இருந்தது.
“அந்த நேரம் பேய்,
பிசாசு போன்ற ஏதோவொரு
அமானுஷ்ய சக்தி உள்ளே வந்து உயிரைப் பறித்துப் போகிறதோ!” என்றார் ஒரு டாக்டர்.
எதுவானாலும்,
அதைக் கண்டு
பிடித்துவிடுவது என்று முடிவானது.
ஒரு குறிப்பிட்ட
தினத்தில் டாக்டர்கள், தத்தம் இஷ்ட
தெய்வத்தின் பெயரை உச்சரித்தபடி, அங்கே
ஒளிந்திருந்து கவனித்தனர்.
சரியாக எட்டு
மணிக்குக் கதவு திறந்தது. உள்ளே நுழைந்தாள், துப்புரவு செய்யும் பெண்மணி, உயிர்காக்கும் இயந்திரத்தின் பிளக்கைப்
பிடுங்கினாள். அங்கே வேக்குவம் கிளீனரின் பிளக்கைச் செருகி அறையைச் சுத்தம் செய்ய
ஆரம்பித்தாள்.
இப்படிதான் நாமும் இப்படி பல
நிகழ்வுகளுக்கு நாமே ஒரு முடிவுக்கு வந்து மனம் சோர்ந்து விடுகிறோம் .உண்மையை
அறிந்தால், விடா முயற்சி செய்வோம்
1 Comentário:
Wow, this piece oof writing is fastidious, my sister is
analyzing these things, therefore I am going to inform her.
My weblog: cold sore pain
Post a Comment