ஒரு குருவிடம், 'வழக்காடுதல்' கற்றுக் கொள்ள சென்றான்
ஒரு இளைஞன். அவனை சிறந்த
வழக்கறிஞராக்குவதாக உறுதியளித்து, அதற்கு தட்சணையாக, ஒரு
பெரும் தொகை கேட்டார் குரு.
அந்த இளைஞன், பாதி தொகையை
அப்போதே தந்து விடுவதாகவும், மீதி
தொகையை தான் எடுத்துக் கொள்ளும்,
முதல் வழக்கில் ஜெயித்தால் மட்டுமே தர முடியும்
என்றான்.
தன் மாணவன் நிச்சயம் ஜெயிப்பான்
என்ற நம்பிக்கையில், குருவும் அதற்கு ஒப்புக் கொண்டார்.
அதன்படியே ஒரு ஒப்பந்தமும் எழுதி,
இருவரும் கையெழுத்திட்டனர்.
இளைஞன்
அங்கேயே தங்கி கல்வி கற்றான்;
கல்வி முடிந்ததும் குருவிடம் விடைபெற்று சென்று விட்டான்.
இரண்டு,
மூன்று மாதமாகியும், அவனிடம் இருந்து எந்த
பணமும் வராததால், குருவே அவனைத் தேடிச்
சென்றார். அவனோ, தான் இதுவரை
எந்த வழக்கையும் எடுத்துக் கொள்ளவில்லை என்றும், அதனால், ஒப்பந்தப்படி இப்போது
பணம் தர முடியாது என்று
சொல்லி விட்டான்.
எப்போது
கேட்டாலும், அவன் இதையே சொல்வதால்
பொறுமை இழந்த குரு, 'இந்த
இளைஞன் எனக்கு தருவதாக சொன்ன
தொகையை தராமல் ஏமாற்றுகிறான்...' என்று,
அவன் மீது ஒரு வழக்கு
தொடர்ந்தார்.
அந்த இளைஞன் சந்தித்த முதல்
வழக்கு இதுதான்.
'குருவுக்கு
இவன் பணம் தர வேண்டும்...'
என்று நீதிபதி தீர்ப்பளித்தால், முதல்
வழக்கில் சிஷ்யன் தோற்றவனாகிறான். அதனால்,
ஒப்பந்தப்படி பணம் தர வேண்டியதில்லை.
'பணம் தர வேண்டாம்...' என்று
தீர்ப்பு வந்தால், தீர்ப்புப்படி சிஷ்யன் பணம் தர
வேண்டியதில்லை. எப்படிப் பார்த்தாலும் இவன் பணம் தர
வேண்டியதில்லை - இது இளைஞன் தரப்பு
வாதம்.
'பணம் தர வேண்டும்' என்று
தீர்ப்பு வந்தால், தீர்ப்புப்படி சிஷ்யன் பணம் தர
வேண்டும். 'பணம் தர வேண்டாம்'
என்று தீர்ப்பு வந்தால், இவன் வழக்கில் ஜெயித்தவனாகிறான்.
எனவே, ஒப்பந்தப்படி பணம் தர வேண்டும்.
எப்படிப் பார்த்தாலும் சிஷ்யன் பணம் தர
வேண்டும். - இது குரு தரப்பு
வாதம்.
0 comments:
Post a Comment