Welcome to Arivu's Collection

திருக்குறள்

தேடல்

பல்லவன் பாவை

|

நான் சமீபத்தில் அரசு நூலகத்திலிருந்து எடுத்து படித்த சரித்திர சான்றுகளை மையமாக வைத்து எழுதப்பட்ட சரித்திர நாவல் தான் பல்லவன் பாவை”. இதை எழுதியவர் கருப்பூர் மூ அண்ணாமலை. சோழ நாட்டில் சோழர் ஆட்சியை மீண்டும் கொண்டு வந்த விஜயலாய சோழனை பற்றிய கதை. இதன் முதல் பதிப்பு டிசம்பர் மாதம் 2017 ஆம் ஆண்டு வெளிவந்துள்ளது.

கதாநாயகன் இளைய வீரன் என்கின்ற விஜயலாய சோழன், கதாநாயகி பல்லவ மன்னனின் மகளான திரிபுவனமாதேவி கதாபாத்திரம் உள்ளது. பல்லவ மன்னனாக நிருபதுங்க வர்மன் அவனது மகனாக அபராஜிதன் பாத்திரங்கள் படைக்கப்பட்டுள்ளன. சைவ சமயத்தை பரப்புவதற்காக வந்த ஆனந்த பிரம்மச்சாரி என்கின்ற கதாபாத்திரம். கதாநாயகன் திரிபுவனமாதேவியை பல்லவன் பாவையாக அழைக்கிறான்.

இளையவர்மனுக்கு சோழ ராஜ்ஜியத்தை அடிமையிலிருந்து (முத்தரையர்களிடமிருந்து) மீட்டு சுதந்திர நாடாக ஆக்க கனவு. ஆனந்த பிரம்மச்சாரிக்கு சைவ சமயத்தை மீண்டும் கொடிகட்டி பறக்க வைக்க வேண்டும் என்று கனவு. திரிபுவனமாதேவியோ புத்த சமயத்தை பரப்புவதற்காக முயல்கிறார். அபராஜிதனக்கோ தனது தந்தையையும் தங்கையையும் கொன்று பல்லவ நாட்டிற்கு முடி சூட்டிக்கொள்ள வேண்டும் என்று ஆசைப்படுகிறான்.

கதாநாயகன் அனைத்து சூழ்ச்சிகளையும் முறியடித்தது, போரில் வென்றதால் பழையாரையை தனி நாடாக கொடுத்து விடுகிறார்கள். கதாநாயகனை பின்னாளில் விஜயலாய சோழன் என்று பெயரோடு அந்த முடி சுட்டுக் கொள்கிறான் விஜயன் என்றால் வெற்றியை உடையவன் என்றும் வேற்று நாட்டிற்கு சென்று வந்தவன் என்றும் பொருள்.

இந்த சரித்திர புதினத்தில் ஒரு சில மேற்கோள்கள் என்னை மிகவும் கவர்ந்தது. அவற்றை கீழே கொடுத்துள்ளேன்.

1.       எதற்குமே ஒரு தகுதி வேண்டும். பொறுப்பற்று திரிபவர்களுக்கு அந்தப் பதவியை தந்து விட்டால் அந்தப் பதவிக்கே மதிப்பில்லாமல் போகும். அது மட்டும் இல்லாமல் அந்தப் பதவியினால் இந்த நாடே பரிதவித்த போகும்.

2.       அரசியலில் வேண்டியவர்களும் இல்லை. வேண்டாதவர்களும் இல்லை. சந்தர்ப்பம் சதி வலையைப் பின்னுகிற போது, அரசியல்வாதி தனது பதவியை காப்பாற்றிக் கொள்வதற்காக யாரையும் பலி கொடுப்பான்.

3.      மதத்தை நிலை நாட்டுவது என்பது மரத்தில் இருக்கும் மாங்காயை பறித்து வருவது போல் அல்ல. வெறும் பக்திப் பாடல்களாலும், ஆண்டவனுடைய பெருமையைப் பற்றி பேசிக் கொண்டிருப்பதாலும் மட்டுமே ஒரு மாதம் நிலைத்து நிற்க முடியாது.

4.       மதத்தை மக்களிடையே நிலைநாட்டுவதற்கு எத்தனையோ சூழ்ச்சிகள் செய்ய வேண்டி இருக்கிறது. மதம் அன்பினைத்தான் போதிக்கிறது. இருப்பினும் அது குருதிச் சேற்றில் தான் மலர்கிறது! நமது சைவ மதம் மட்டுமில்லை. உலகில் எல்லா மதங்களுமே இந்த அடிப்படையைத்தான் இலக்கணமாகவே கொண்டுள்ளன.

5.       நல்ல உவமைகள்- “இங்கிதம் தெரியாத இடத்தில் சங்கீதம் படிப்பவனை போலமற்றும் காணாமல் போன பொன் ஒன்று திரும்பவும் கைக்குக் கிடைத்து விட்டதைப் போல”.

பதினாறும் பெற்று பெருவாழ்வு வாழ்க!

|

பதினாறும் பெற்று பெருவாழ்வு வாழ்க! - பழமொழி

பொருள்:

மணமான பின் பதினாறு குழந்தைகளை பெற்று வளமான வாழ்க்கை வாழ வேண்டும் என ஆசிர்வாதம் செய்வார்கள்.

 உண்மையான பொருள்;

வாழ்க்கையில் பதினாறு வகையான செல்வங்களான 

1.உடலில் நோயின்மை,

2.நல்ல கல்வி,

3. தீதற்ற செல்வம்,

4.  நிறைந்த தானியம்,


5. ஒப்பற்ற அழகு,

6.  அழியாப் புகழ், 

7. சிறந்த பெருமை,

8.  சீரான இளமை,

9. நுண்ணிய அறிவு,

10.  குழந்தைச் செல்வம்,

11. நல்ல வலிமை,

12.  மனத்தில் துணிவு,

13. நீண்ட வாழ்நாள் (ஆயுள்),

14.  எடுத்த காரியத்தில் வெற்றி 

15. நல்ல ஊழ் (விதி),

 மற்றும் 

16. இன்பு நுகர்ச்சி

 பெற்று வளமாக வாழுங்கள் என்று பொருள்.

தமிழர் பரம்பரை

|

தெரிந்து கொள்வோம் தமிழர் பரம்பரை

நாம் அடிக்கடி பரம்பரை-பரம்பரை என்று சொல் வழக்கில் பேசுவோம்; உண்மையில் பரம்பரை என்பது பரன் (ஆண்) மற்றும் பரை (பெண்) அதாவது நமக்கு முன்பு வாழ்ந்த ஆறாவது தலைமுறை குறிப்பதுதான் பரம்பரை என்பது...

நாம் (கணவன் மனைவி)


நம்முடைய முன்னோர் (ஆண்/பெண்)

தந்தை / தாய் 

பாட்டன் / பாட்டி 

பூட்டன் / பூட்டி 

ஓட்டன் / ஓட்டி 

சேயோன் / செயோள் 

பரன் / பரை 

நமக்கு பின்னாடி

மகன் / மகள் 

பேரன் / பெயர்த்தி (பேத்தி)

கொள்ளுப்பேரன் / கொள்ளுப்பேத்தி

எள்ளுப் பேரன் / எள்ளுப் பெயர்த்தி

ஐந்து பெற்றால் அரசனும் ஆண்டி

|

ஐந்து பெற்றால் அரசனும் ஆண்டி - பழமொழி 

உண்மை என்ன?

ஐந்து பெற்றால் அரசனும் ஆண்டி என்பது ஐந்து பெண் மக்களை பெறுவதைக் குறிப்பதாக கூறுவார்கள். ஆனால் உண்மையில் 


1. ஆடம்பரமாய் வாழும் தாய்

2. பொறுப்பில்லாமல் வாழும் தந்தை 

3. ஒழுக்கமற்ற மனைவி

4. ஏமாற்றுவதும் துரோகமும் செய்யக்கூடிய உடன்பிறந்தோர் 

மற்றும் 

5. சொல் பேச்சு கேளாத பிடிவாதம் உடைய பிள்ளைகள் 

ஆகிய ஐந்தும் இருந்தாலே அரசனே ஆனாலும் கூட அவனது வாழ்க்கை அழிவை நோக்கி போகும் என்பது தான் உண்மையான பொருள்.

இவனுங்க தொல்ல தாங்க முடியல..

|


சீனாக்காரன் மணிக்கு 600 கி.மீ வேகத்தில் செல்லக்கூடிய ரயிலுக்காக காத்திருக்கான்
ஜப்பான் காரன் 7G க்கு upgrade ஆகி போறதுக்கு காத்திருக்கான்
ஆனா நம்மாளு - சாமி படத்தை ஷேர் பண்ணிட்டு எதாச்சு நல்லது நடக்கும் னு காத்திருக்கான்

அது பத்தாதுனு , இந்த படத்த 25 குரூப் ல ஷேர் பண்ணாட்டி - கெட்டது நடக்கும் னு வேற மிரட்டுறான்...

கல்லாமை - காமராஜர்

|

இன்று திரு. காமராஜர் அவர்களின் பிறந்த தினம். 15 ஜூலை 1903 ஆம் வருடம். இன்றைய நாளில் அவருடைய  காலத்தில் நடந்த நிகழ்வுகளில் இருந்து ஒன்றை பார்ப்போம்.
கல்லாமை (படித்ததில் பிடித்தது)
வெட்கப்பட வேண்டிய தற்போதைய பல அரசியல்வாதிகள்
காமராஜர் முதல்வராய் இருந்த போது, மருத்துவக்கல்லூரி மாணவர் சேர்க்கை ஒதுக்கீட்டில், முதலமைச்சருக்கென 10 இடங்கள் QUOTA ஒதுக்கியிருந்தார்கள்.
அதற்கென விண்ணப்பங்களும் வரவேற்கப்பட்டனவாம். அந்த விண்ணப்பங்களிலிருந்து யாரை வேண்டுமானாலும் 10 பேரை முதல்வர் தேர்ந்தெடுக்கலாம்.
காமராஜரின் உதவியாளருக்கு ஒரு எண்ணம் தோன்றியதாம்.
ஊரெல்லாம் இவரைப் பெரிய மனம் கொண்டவர் என்று சொல்கிறார்களே, இவர் எந்த அடிப்படையில் மாணவர்களை தேர்ந்தெடுக்கிறார் என்று பார்ப்போம்.
தன் ஜாதி அடிப்படையிலா, தன் ஊர்க்காரர்களுக்கு கொடுப்பாரா, நண்பர்களின் பிள்ளைகளுக்கு கொடுப்பாரா அல்லது கட்சிக்காரர்களுக்கு கொடுப்பாரா ? என்று பார்க்கலாம்...
அப்போது இவரது சுயரூபம் தெரிந்து விடும் என்று எண்ணினாராம்.
காமராஜர் முன்பு விண்ணப்பங்களை எடுத்து சென்று கொடுத்தாராம்.
சில நிமிடங்களில் அவற்றை பரிசீலித்த காமராஜர், கடகடவென பத்து விண்ணப்பங்களை எடுத்து கொடுத்து விட்டு சென்று விட்டாராம்.
அவற்றைப் பார்த்த உதவியாளருக்கோ மிகுந்த ஆச்சரியமாக இருந்ததாம்.
ஏனென்றால் அவர் எண்ணிய ஒரு அடிப்படையில் கூட அவர் தேர்ந்தெடுத்த விண்ணப்பங்கள் இல்லை.
நேராக காமராஜரிடமே சென்று, நீங்கள் தேர்ந்தேடுத்த மாணவர்கள், உங்கள் ஜாதி, ஊர், நண்பர்கள் அல்லது கட்சிக்காரர்கள் என்று எந்த அடிப்படையிலும் வரவில்லையே. பிறகு எந்த அடிப்படையில் இவர்களை தேர்வு செய்தீர்கள்? என்று கேட்டாராம்.
சிரித்துக்கொண்டே காமராஜர் சொன்னாராம். நீங்கள் கொடுத்த விண்ணப்பங்களையெல்லாம் வாங்கிப் பார்த்தேன். அவற்றில் பெற்றோர் கையொப்பம் என்ற இடத்தில் யார் விண்ணப்பங்களில் எல்லாம் கையெழுத்துக்கு பதில் கைநாட்டு (கை ரேகை) இருந்ததோ, அவற்றைத்தான் நான் தேர்வு செய்தேன்.
எந்த குடும்பத்திலெல்லாம் கல்லாமை என்னும் இருள் இருக்கிறதோ, அவர்கள் வீட்டுக்குத்தான் நாம் முதலில் விளக்கேற்ற வேண்டும் என்று கூறினாராம்.

மனசை Control பண்றது கஷ்டம்..

|

போன வாரம் யோகா கிளாஸ்க்கு போயிருந்தேன்...

முதல் நாள் :

எங்க குரு மனசை பத்தி Class எடுத்திட்டு இருந்தார்..

நம்ம உடம்பை Control பண்றதை விட.,

மனசை Control பண்றது கஷ்டம்..

ஏன்னா நம்ம மனசு சாமி கும்பிடும் போது

வெளியில விட்ட செருப்பை நினைக்கும்..

விரதம் இருக்கும் போதுதான் பிரியாணியபத்தி நினைக்கும்..


இதுக்கு எங்க குரு சொன்ன ஒரு உதாரணம்..

நீங்க ஒரு காரை Start பண்றீங்க..

ஆனா அந்த கார்...

Right-ல திருப்பினா - Left-ல போகுது.,

Left-ல திருப்பினா - Right-ல போகுது.,

Gear-ஐ முன்னாடி போட்டா - பின்னாடி போகுது..,

பின்னாடி போட்டா - முன்னாடி போகுது..,

அப்ப நீங்க என்ன பண்ணுவீங்கன்னு கேட்டார்..


மெக்கானிக்கிட்ட விடுவேன்னு ஒருத்தரும்..,

காரை விட்டு இறங்கிடுவேன்னு இன்னொருத்தரும் சொன்னாங்க..

அந்த காரை வித்திடுவேன்னு மற்றொருவரும் சொன்னாங்க..

ஆனா எங்க குருவோ..,

" Brake போட்டு காரை முதல்ல நிறுத்தணும்..! "

அதுதான் நீங்க உடனடியா செய்ய வேண்டியதுன்னு சொன்னார்..



அப்ப பக்கத்துல இருந்தவர் கிட்ட கிசுசிசுன்னு ஒன்னு கேட்டேன் ...  அவர் அப்படியே ஷாக் ஆயிட்டார்..

அப்ப குரு பார்த்துட்டார்..

என்ன கேட்டேனா.. ?


" ஏன் சார்.. அந்த டப்பா கார்ல ப்ரேக் மட்டும் ஒழுங்கா வேலை செய்யுமா..?

நிக்கிறதுக்கு பதிலா வேகமா போயிடிச்சின்னா என்ன பண்றதுன்னு? "


இப்ப முதல்ல வாயை Control பண்ணுறது எப்படின்னு பயிற்சி நடக்குது .,😜

பெண் பார்க்க...

|

ஒரு தத்துவ ஞானியிடம் ஒரு வாலிபன் சென்று எனக்கு பெண் பார்க்க வேண்டும் என எனது தாய் ஆசைப்படுகிறாள், நான் எப்படியான பெண்ணை தெரிவு செய்ய வேண்டும்? என்று சொல்லித் தாருங்கள் என்றான்.
அதற்கு அவர்:

அழகானவளை முடிக்காதே! அடுத்தவன் அவள் மீது ஆசைப்படுவான்.
அலங்கோலமானவளை முடிக்காதே! உனக்கே அவள் மீது வெறுப்பு ஏற்பட்டுவிடும்.


உயரமானவளை முடிக்காதே! நீ எட்டி பார்க்க வேண்டி வரும்.
குட்டையானவளை முடிக்காதே! அவளுக்காக தலை குனிய வேண்டி வரும்.

பருமனானவளை முடிக்காதே! உன் மேல் முட்டினால் காயம் ஏற்படும்.
மெலிவானவளை முடிக்காதே! உன் கண்ணுக்கு அவளைக் காண மாட்டாய்.

வெள்ளையானவளை முடிக்காதே! மெழுகுவர்த்தி தான் ஞாபகத்துக்கு வரும்.
கறுத்தவளை முடிக்காதே! இருட்டில் பேய் என்று பயப்படுவாய்.

படிக்காதவளை முடிக்காதே! நீ கூறுவதை அவள் புரிந்து கொள்ள மாட்டாள்.
படித்தவளை முடிக்காதே! உன்னிடம் விவாதத்துக்கு வருவாள்.

பணக்காரியை முடிக்காதே! எடுத்ததற்கெல்லாம் எனது பணம் என்பாள்.
ஏழையை முடிக்காதே! உனது மரணத்தின் பின்னர் உனது குழந்தை சிரமப்படும்.

அதிகம் அன்பானவளை முடிக்காதே! உன் மரணத்தின் பின் வேறு ஒருவனிடம் அன்பு திரும்பி விடும்.
கோபக்காரியை முடிக்காதே! உன் வாழ்க்கை நரகமாகி விடும்.

அனைத்தும் தெரிந்தவளை முடிக்காதே! உண் பணத்தை கரைத்து விடுவாள்.
ஒன்றும் தெரியாதவளை முடிக்காதே! நீ வீட்டு வேலைக்காரனாகி விடுவாய்.

அமைதியானவளை முடிக்காதே! நீ செத்தாலும் அமைதியாகவே இருப்பாள்.
ஆர்ப்பரிப்பவளை முடிக்காதே! ஒரு பூச்சிக்கும் ஊரைக்கூட்டி விடுவாள்.

ஊருக்குள் முடிக்காதே! தாய் வீட்டில் கோழி முட்டையிட்டாலும் பார்க்கப்போவாள்.
தூரத்தில் முடிக்காதே! உன் வாழ்க்கை பிரயாணத்தில் கழியும்.
என்று உபதேசித்தார்.

வந்த வாலிபன் ஏன் பெரியவரே சுருக்கமாக திருமணமே முடிக்க வேண்டாம் என்று சொல்லியிருக்கலாமே என்றான் கோபத்துடன்

ஏ.சி அறையில் வைக்கக் கூடாத பொருள் என்ன?

|

ஏ.சி. அறையில் வைக்கக் கூடாதவை இரும்பு பீரோக்கள், இரும்பு கட்டில், இரும்பு டேபிள் மற்றும் இரும்பு நாற்காலிகள் ஆகிய பெரிய உலோகப் பொருள்கள் ஆகும்.

இவை ஒரு ஏ.சி.அறையில் வைக்கப்பட்டிருந்தால் அறையின் காற்று ஏ.சி இயக்கத்தால் குளிர்வடையும் போது இவை குளிர்ச்சியை உள்வாங்கி முதலில் குளிர்வடையும்.

இதனால் தேவைக்கு அதிகமான நேரம் ஏ.சி. இயங்குவதுடன் மின் சக்தி விரயம் மற்றும் கம்ப்ரசர் அதிக நேர இயக்கம் காரணமாக விரைவில் ஏ.சி இயந்திர தேய்மானம் முதலியன ஏற்படும்.

அறையின் உயரத்தை குறைப்பதற்கு தெர்மோகோல் வைத்து சில அலுவலகங்களில் ஃப்பால்ஸ் சீலிங் அமைப்பார்கள். இதன் காரணமாக அறையின் பரப்பளவு குறைக்கப்படுகின்றது.எனவே ஏ.சி. குறைந்த நேரம் இயங்கியதுமே அறை போதிய குளிர் நிலை அடையும்.

ஆனால் அடிக்கடி அறைக்கதவை திறந்து மூடும் அலுவலகங்களுக்கு மட்டுமே இது சரிவரும்.

வீடுகளில் அமைத்தால் மூடிய அறையில் இரவில் தூங்குபவர்கள் வெளியிடும் கரியமில வாயுவால் விரைவில் அறை நிரம்பி விடும்! இது உடல் நலத்திற்கு உகந்ததல்ல!

அறையில் இரும்பு தளவாடங்கள் இருந்தால் ஏ.சி. இயந்திரத்தின் ஆயுள் ஒரளவு குறையும் !.

என்ன படிக்கனும்

|

சிரிக்க சிந்திக்க:

என் தம்பி: அண்ணே அடுத்தவாரம் +2 ரிசல்ட் வருது..
நானு: அதுக்கு என்னல தம்பி?

அடுத்தாப்ல என்ன படிக்கனும்னு தெரியலணே,
மொதல்ல ஒன்னோட ஆசையச் சொல்லுடே..

அண்ணே டாக்டருக்கு படிக்கவா?
ஏலேய், டாக்டராகி சேவை செய்வேனு பேட்டி மட்டும் தான் கொடுக்கத்தெரியும், ஆனா செய்யமாட்டிங்க, வேற சொல்லு..

அப்போ இன்ஜினியருக்கு படிக்கவா?
இன்ஜினியர் முடிச்சவன் வீட்ல நாலுபேரு கெடக்கானுவோடே..

அப்போ வக்கீலுக்கு படிக்கவாணே?,
ஏன்டா? ஏன்? நான் படுற பாடு போதாதா? (நோட் திஸ் பாய்ண்ட் ப்ரெண்ட்ஸ்) அட பொண்ணு கெடைக்காதுடா..

அப்போ பைலட்டுக்கு படிக்கட்டுமா?
ஏதுக்கு? உனக்கோ மேலே பார்த்தாலே பயம், பத்தாதற்கு அடிக்கடி நடு வானில் பிளேன காணலனு செய்தி வருது. அது சரியா இருக்காது...

அப்போ மரைன் ஓகேவா?
வேணாம்ல உனக்கு தண்ணியில கண்டம், நீச்சல் வேற தெரியாது..

பேசாம ராணுவத்துக்கு போகட்டுமாணே?
அதுக்கு நீ சரிபட்டு வரமாட்டல..

போலீசு வேலைக்காவது ட்ரை 
பன்னவாணே?
லஞ்சத்த வாங்கி தின்னுட்டு, பொம்பள போலீசு கூட போன்ல "ஒன்னு குடுக்கட்டுமா?னு" கேப்ப, வெளுத்துபுடுவேன் ரஸ்கல்..

அப்போ ஏதாவது டிகிரியவாது முடிக்கவாணே?
சத்தியமா வேலை கிடைக்காதுல, தமிழ் நாட்ல டிகிரி முடிச்சவன் ஒரு கோடி பேரு கெடக்கான்..

அண்ணே கேட்ரிங் ஓகேவா?

சமையல் செய்றதெல்லாம் கல்யாணம் முடிஞ்சதும் நீயே கத்துப்ப தம்பி, வேஸ்ட்ல..

டீ கடை வைக்கட்டுமாணே?
வேனாம் போயிடு, வாயில் ஏதாவது வந்துடும்.

LIC ஏஜெண்ட்டா ஆகட்டுமாணே?
ஏன்டா? எப்ப பார்த்தாலும் வாழ்வதற்கு வழி சொல்லாமல் சாவை பற்றியே பேச வேண்டுமா?

ஏதாவது சீட்டு கம்பேனி பிசினஸ் பன்னட்டுமா?
ஊர்துட்ட திங்க அலையாத, அது நல்லது இல்ல தம்பி..

ஏதாவது யாவாரம் பன்ன கடைய 
ஆரமிக்கட்டுமா?
இன்னொருத்தன் உழைச்சி தர்ரத உக்காந்த இடத்தில யாவாரம் பண்ணி திங்கலாம்னு பாக்க, "குண்டக்கா மண்டக்கா" திட்டீருவேன்..

வெளிநாட்டுக்கு போய் சம்பாதிக்கட்டுமாணே?
அங்க பாதி பேரு தாய், தகப்பனுக்காக கெடக்குறாங்கடா, மீதி பேரு தாய் நாட்டப்பத்தி கூட சிந்திக்க மாட்டானுங்கல..

யண்ணே அப்போ நான் என்னதான் பன்ன?

அந்தா கெடக்கு பாரு மம்புட்டி, அத தூக்கு, போய் வயல கொத்து, நாலு வருசம் நாயா கஷ்டப்படு, அடுத்த பத்து பத்து வருசத்து அப்புறம் நீ தான் சாமி எங்களுக்கு கடவுள்.

ஏன்ணே இப்புடி சொல்ற?
ஆமால தம்பி, எல்லா படிப்ப படிக்குறதுக்கும் ஆள் இருக்கு, ஆனா எல்லோரும் சாப்பிடுறதுக்கு விவசாயம் பன்ற ஆள் இல்லடே..

அப்புடி சொல்லாதணே நான் இருக்கேன்,
அப்புடி சொல்றா என் சிங்கக்குட்டி, தூக்குடா மம்புட்டிய, வாடா வயலுக்கு போவோம், உனக்கு நான் உதவி பன்றேன்டா..

விவசாயி_அழிந்தால் ? 
விவசாயம்_அழியும் ,
விவசாயம்_அழிந்தால் ? உலகமே_அழியும் .

சிரிப்போம் சிந்திப்போமுடன்
உங்க நண்பன்.

உலகப் புத்தக நாள்- 2024

|

உங்கள் அனைவருக்கும் எங்களது இனிய உலகப் புத்தக நாள் வாழ்த்துகள்! இன்று உலக புத்தக நாள் அல்லது உலகப் புத்தக மற்றும் பதிப்புரிமை நாள். (ஏப்ரல் 23)

ஒரு மனிதனுக்கு புத்தம்தான் சிறந்த தோழன் என்ற கூற்று உள்ளது. புத்தகங்கள், அவற்றின் அனைத்து வடிவங்களிலும், கற்றுக்கொள்ளவும் நம்மை நாமே அறிந்து கொள்ளவும் அனுமதிக்கின்றன. அவை நம்மை மகிழ்விப்பதோடு, உலகத்தைப் புரிந்துகொள்ளவும் உதவுகின்றன.

அறிவைப் பரப்புவதற்கும், உலகெங்கிலும் உள்ள பல்வேறு கலாசாரங்கள் பற்றிய விழிப்புணர்வினைப் பெறுவதற்கும், புரிதல், சகிப்புத்தன்மை போன்றவற்றின் மூலம் மனிதர்களின் ஒழுக்கத்தினை மேம்படுத்தவும், புத்தகம் ஒரு சிறந்த கருவியாக உள்ளதால் ஏப்ரல் 23 உலக புத்தக தினமாக கொண்டாட யுனெஸ்கோவின் 28வது மாநாட்டில் ஒரு தீர்மானம் நிறைவேற்றப்படது.

இந்த நாளில் மற்றொரு கவனிக்க தகுந்த விஷயமாக உலகின் சிறந்த எழுத்தாளர்களான வில்லியம் சேக்ஸ்பியர், பிரபல ஸ்பானிஷ் வரலாற்று ஆசிரியர் இன்கா கார்சிலாசோ டி லா வேகா ஆகியோரின் நினைவு நாளாக அமைந்துள்ளது. அதுமட்டுமில்லாமல் உலக அளவில் புகழ் பெற்ற பிரபல எழுத்தாளர்களான மாரிஸ் ட்ரூன், ஹால்டோர் கே. லக்ஸ்னஸ், விளாடிமிர் நபோகோவ் மற்றும் மானுவல் மெஜியா வலேஜோ ஆகியோரின் பிறந்தநாளாக உள்ளது.

ஒரு புத்தகம் 100 நண்பர்களுக்கு சமம் போன்றது. நமக்கு தெரியாத அனைத்து விஷயங்களையும் ஒரு புத்தகத்தில் நாம் தெரிந்துக்கொள்ளலாம். கல்வி கற்பது ஒருநாளும் வீண்போவதில்லை. இந்தியா உள்ளிட்ட 100-ற்கும் மேற்பட்ட நாடுகளில் புத்தக தினம் கொண்டாடப்படுகிறது.

எனது சிறு வயது முதல் எனக்கு இருந்த ஆசைகளில் ஒன்று எனது சொந்த வீட்டில் ஒரு புத்தக அலமாரியை வைக்க வேண்டும் என்பதே அவ்வாறே எனக்கு வசதிகள் வந்த பின்பு கட்டிய வீட்டில் புத்தக அலமாரியை ஒன்றையும் அமைத்துக் கொண்டேன்.

இன்று முதல் படித்தேன்-இரசித்தேன் என்ற தலைப்புகளின் கீழ் நான் படித்து ரசித்த (வரலாற்று நூல்கள், சுயசரிதைகள், அரசியல் மற்றும் சமூக நூல்கள்) மேற்கோள்களையும் கருத்துக்களையும் உவமைகளையும் பழமொழிகளையும் உங்களுடன் பகிர்ந்து கொள்வதில் மிகுந்த ஆனந்தம் அடைகிறேன்.

படித்தேன்-இரசித்தேன்

1. "வாதம் பலவீனப்படும்போதுதான் வாதிப்பவனுக்குக் கோபம் வரும். விவாதம் புரியும் இருவரில் யாருக்கு முதலில் கோபம் வருகிறதோ, அவன் தோல்வியடையத் தொடங்குகிறான்".

2. “உலகத்திலுள்ள அத்தனை காவல்காரர்களும் தங்கள் கண்முன் நடமாடுகிற எல்லோரையும் திருடர்கள் என்று சந்தேகப்படுகிறார்கள். அதேபோல் உலகத்திலுள்ள அத்தனை திருடர்களும் தங்களை உற்றுப்பார்கிற எல்லோரையும் காவற்காரர்கள் என்று பயப்படுகிறார்கள்.

3. "ஒரு மொழியை அவசியத்துக்காக யார் வேண்டுமானாலும் கற்கலாம். ஆனால் நயங்களையும், சமத்காரங்களையும் உண்டாக்கி அணி நலம்பட எழுதவோ பேசவோ அதை தாய் மொழியாகக் கொண்டவர்களால் தான் முடியும்"..

Related Posts Plugin for WordPress, Blogger...

தலைப்புகள்

anicent tamil (4) Blog Tips (2) Computer (4) ILUSION (1) information (1) LPG சிலிண்டர் (1) safety (2) Short Cut Key (2) SMS (1) tamil (14) tamil friendship poem (2) tamil joke (7) tamil kathai (5) tamil story (6) tamil year (1) Welding Symbol (1) அபூர்வ தகவல் (2) ஆரோக்கியம் (16) ஆவணங்கள் (7) இதிகாசம் (1) இயற்கை (4) எச்சரிக்கை (4) எடக்கு-மடக்கு (2) எனது பதில்கள் மற்றும் அனுபவங்கள் (1) கணணி பராமரிப்பு (1) கதை (21) கம்ப்யூட்டர்வேலை (1) கலைஞர் (1) கவிதை (11) காமராஜர் (1) குண்டக்க-மண்டக்க (2) சாப்ட்வேர் மாப்பிள்ளை (1) சிந்தனை (4) செய்தி (13) செல்வம் (1) சேமிப்பு (1) தமிழர் பண்பாடு (6) தமிழ் (18) தமிழ் அளவை (2) தமிழ் அளவைகள் (1) தமிழ் ஆண்டுகள் (2) தமிழ் எண்கள் (1) தமிழ் எழுத்து (2) தமிழ் காலம் (2) தமிழ் பாட்டு (2) தமிழ் மருத்துவம் (6) தமிழ்நாடு அரசு பாடப் புத்தகங்கள் (1) தன்னம்பிக்கை (2) தீபம் (1) துணுக்கு (18) தெரிந்துகொள்வோம் (15) நகைச்சுவை (33) நகைச்ச்சுவை (6) நகைச்ச்சுவைகடிதம் (1) நட்பு (3) நட்பு கவிதை (2) படம் (1) படித்ததில் பிடித்தது (63) படித்தேன்-இரசித்தேன் (2) பணம் (2) பரோட்டா (1) பழமொழி (3) பழம்தமிழர் (1) பறவை (1) பாதுகாப்பு (2) பிரபலமானவர்களின் (4) பெண்பார்க்கும் படலம் (2) பெற்றோர் (2) பொங்கல் (1) பொழுதுபோக்கு (32) மகாபாரதம் (1) மகிழ்ச்சி (3) மாங்கல்யம் (1) மாய தோற்றம் (1) வரலாற்று நிகழ்வு (2) வலைப்பூ (1) வழி காட்டி (9) வழிகாட்டி (30) வாழ்கை (14) வாழ்க்கை (9) வாழ்த்துகள் (15) விவசாயம் (2) விவசாயி (1) வேலை (3)

Contact Form

Name

Email *

Message *

 

©2009 அறிவு களஞ்சியம் | Template Blue by TNB