திருக்குறள்

தேடல்

ஐ லவ் யூ அப்பா

|


ஒரு அப்பாவும், 4 வயது மகனும் அவர்களுடைய புதியகாரை துடைத்துக்கொண்டிருந்தார்கள். அப்பொழுதுசிறுவன் ஒரு சிறிய கல்லை எடுத்து காரின் கதவுபக்கத்தில் சுரண்டி கொண்டிருந்தான். சத்தத்தை கேட்டஅப்பாவுக்கு கோபம் தலைகேறியது

கடுப்பில் மகனுடைய கையை பிடித்து, நான்கு முறைஉள்ளங்கையில் விளாசிவிட்டார். அப்பொழுதுதான்கவனித்தார் அவர் அடித்தது ஸ்பேனரைகொண்டு என்பதை. வலியில் துடித்த மகனை மருத்துவமனைக்கு தூக்கி கொண்டு ஓடினார் பல எலும்புகள்முறிந்துவிட்டதால்.. இனி விரல்களைகுணமாக்கமுடியாது என்று மருத்துவர்கள் கைவிரித்தனர்.

மகன் வலி நிறைந்த கண்களுடன் அப்பாவை பார்த்துஅப்பா.. என்னோட விரல்ளுங்க திரும்ப வளர்ந்துடும்இல்லப்பா?” என்று கேட்டவுடன், கண்ணீருடன் மவுனமாகவெளியே வந்தார்.

வெளியில் நின்றிருந்த காரை பல தடவைகள் எட்டி, எட்டிஉதைத்தார். கண்ணீருடன் தலையில் கையைவைத்துகொண்டு காரின் முன்பு உக்கார்ந்துவிட்டார்

அப்பொழுதுதான் அந்த கீரல்களை கவனித்தார் என்னஎழுதியிருகிறது என்று.. அந்த வாசகம்   லவ் யூ அப்பா.

மனிதர்களை பயன்படுத்துகிறோம்,பொருட்களைநேசிக்கிறோம்

எப்பொழுதுதான் மனிதனை நேசித்து, பொருட்களைபயன்படுத்த போகின்றோமோ..?

ஸ்கூலுக்கு நேரமாச்சு..

|

தாய்: மகனே எழுந்திருப்பா..ஸ்கூலுக்கு நேரமாச்சு..

மகன்: போம்மா..எனக்கு அந்த ஸ்கூலுக்கு போகவே பிடிக்கல்லே..

தாய்: அப்படிச் சொல்லாதே..நீ வேலைக்கு போய் சம்பாதிக்க வேண்டாமா..? சரி..ஏன் உனக்கு அந்த பள்ளி பிடிக்கல்லே? ரெண்டு நியாயமான காரணம் சொல்லு..நான் விட்டுடறேன்..


மகன்: 1. படிக்கற பசங்களுக்கும் என்னை பிடிக்கல..
           2. வாத்தியார்களுக்கும் என்னைப் பிடிக்கலே.!

தாய்: இதெல்லாம் எல்லாரும் சொல்றது தான்..சமத்தா கிளம்புடா கண்ணா..!

மகன்: நான் ஏன் பள்ளிக்கூடம் போகணும் ? ரெண்டு நியாயமான காரணம் சொல்லு.. நான் போறேன்..

தாய்: சனியனே...
         1. உனக்கு 53 வயசு ஆகுது..

         2. நீதாண்டா அந்த ஸ்கூல் தலைமை ஆசிரியர்..!!!!

விடாக்கண்டன் & கொடாக்கண்டன்

|


ஒரு குருவிடம், 'வழக்காடுதல்' கற்றுக் கொள்ள சென்றான் ஒரு இளைஞன். அவனை சிறந்த வழக்கறிஞராக்குவதாக உறுதியளித்து, அதற்கு தட்சணையாக, ஒரு பெரும் தொகை கேட்டார் குரு.

அந்த இளைஞன், பாதி தொகையை அப்போதே தந்து விடுவதாகவும், மீதி தொகையை தான் எடுத்துக் கொள்ளும், முதல் வழக்கில் ஜெயித்தால் மட்டுமே தர முடியும் என்றான்.

தன் மாணவன் நிச்சயம் ஜெயிப்பான் என்ற நம்பிக்கையில், குருவும் அதற்கு ஒப்புக் கொண்டார். அதன்படியே ஒரு ஒப்பந்தமும் எழுதி, இருவரும் கையெழுத்திட்டனர்.

இளைஞன் அங்கேயே தங்கி கல்வி கற்றான்; கல்வி முடிந்ததும் குருவிடம் விடைபெற்று சென்று விட்டான்.
இரண்டு, மூன்று மாதமாகியும், அவனிடம் இருந்து எந்த பணமும் வராததால், குருவே அவனைத் தேடிச் சென்றார். அவனோ, தான் இதுவரை எந்த வழக்கையும் எடுத்துக் கொள்ளவில்லை என்றும், அதனால், ஒப்பந்தப்படி இப்போது பணம் தர முடியாது என்று சொல்லி விட்டான்.

எப்போது கேட்டாலும், அவன் இதையே சொல்வதால் பொறுமை இழந்த குரு, 'இந்த இளைஞன் எனக்கு தருவதாக சொன்ன தொகையை தராமல் ஏமாற்றுகிறான்...' என்று, அவன் மீது ஒரு வழக்கு தொடர்ந்தார்.

அந்த இளைஞன் சந்தித்த முதல் வழக்கு இதுதான்.

'குருவுக்கு இவன் பணம் தர வேண்டும்...' என்று நீதிபதி தீர்ப்பளித்தால், முதல் வழக்கில் சிஷ்யன் தோற்றவனாகிறான். அதனால், ஒப்பந்தப்படி பணம் தர வேண்டியதில்லை. 'பணம் தர வேண்டாம்...' என்று தீர்ப்பு வந்தால், தீர்ப்புப்படி சிஷ்யன் பணம் தர வேண்டியதில்லை. எப்படிப் பார்த்தாலும் இவன் பணம் தர வேண்டியதில்லை - இது இளைஞன் தரப்பு வாதம்.

'பணம் தர வேண்டும்' என்று தீர்ப்பு வந்தால், தீர்ப்புப்படி சிஷ்யன் பணம் தர வேண்டும். 'பணம் தர வேண்டாம்' என்று தீர்ப்பு வந்தால், இவன் வழக்கில் ஜெயித்தவனாகிறான். எனவே, ஒப்பந்தப்படி பணம் தர வேண்டும். எப்படிப் பார்த்தாலும் சிஷ்யன் பணம் தர வேண்டும். - இது குரு தரப்பு வாதம்.

ஆவணங்கள் தொலைந்தால்...6

|

எவ்வளவுதான் கவனமாக இருந்தாலும் சில நேரங்களில் ரேஷன் கார்டு, டிரைவிங் லைசென்ஸ், கிரயப் பத்திரம், இன்ஷூரன்ஸ் பாலிசி என ஏதாவது ஒரு முக்கியமான ஆவணத்தைத் தொலைத்துவிட்டு பலரும் தவிப்பதை நாம் பார்க்கலாம். அப்படி தொலைந்து போனால் அல்லது மழையில் நனைந்து கிழிந்து அழிந்து போனால் அவற்றை திரும்பப் பெறுவது எப்படி என்பதை இங்கே தெரிந்துகொள்ளலாம்.
பங்குச் சந்தை ஆவணம்!

யாரை அணுகுவது?
சம்பந்தப்பட்ட நிறுவனத்தின் பதிவாளர்.
என்னென்ன ஆவணங்கள் தர வேண்டும்?
காவல் துறை சான்றிதழ், பங்கு ஆவணத்தின் நகல் அல்லது ஃபோலியோ எண்.
எவ்வளவு கட்டணம்? தனியாக கட்டணம் கட்டத் தேவையில்லை; ஆனால், பங்குகளின் சந்தை மதிப்பிற்கு ஏற்ப முத்திரைத்தாள் கட்டணம் செலுத்த வேண்டும்.
கால வரையறை: விண்ணப்பித்த 45 நாட்களிலிருந்து 90 நாட்களுக்குள்.
நடைமுறை: முதலில் சம்பந்தப்பட்ட நிறுவனத்திற்கு கடிதம் எழுதவும். இதன் அடிப்படையில் காவல் துறையில் புகார் அளித்து சான்றிதழ் வாங்க வேண்டும். பங்குகள் மதிப்பிற்கு ஏற்ப நிறுவனம் குறிப்பிடும் தொகைக்கு முத்திரைத்தாளில் ஒப்புதல் கடிதம் தர வேண்டும். சில நிறுவனங்கள் செய்தித்தாள்களில் விளம்பரம் வெளியிட வலியுறுத்தும்.
குறிப்பு: அனைத்து பங்குச் சந்தை ஆவணங்களையும் டீமேட் (Demat) எனும் மின்னணு முறையில் வைத்து கொள்வது மிகவும் நல்லது

அயல் நாடு - அ,ஆ

|

அயல் நாடு சென்று திரும்பியவரின் அனுபவ ஆத்திச்சூடி, உண்மையை அழகாக சொல்லயுள்ளார்.
 
- அயல் நாட்டுக்கு போகாதே
 
- ஆடு மேய்க்க விடுவாங்க
 
- இந்தியாவில் வேலை செய்
 
- ஈசியா இருக்கும்
 
- உண்மையை சொல்றேன்
 
- ஊரை விட்டுப் போகாதே
 
- எப்படா ஊருக்கு வருவோம்னு நினைப்பே.
 
- ஏன்டா வந்தோம்னு நினைப்பே
 
- ஐயோ விடுங்கடானு சொல்லுவ
 
- ஒப்பாரி வச்சு அழ தோனும்
 
- ஓலமிட்டு கத்த தோனும்
 
- ஔவளவுதான் சொல்லிப்புட்டேன்
 
- அஃகடானு இந்தியாவில் கெட!!

"இன்பங்கள் தோன்றுவது நேர்மறை எண்ணங்களால்துன்பங்கள் தோன்றுவது எதிர்மறை எண்ணங்களால்…" எதிர்மறை எண்ணங்களை தவிர்பீர்

Related Posts Plugin for WordPress, Blogger...

தலைப்புகள்

anicent tamil (4) Blog Tips (2) Computer (4) ILUSION (1) information (1) LPG சிலிண்டர் (1) safety (2) Short Cut Key (2) SMS (1) tamil (14) tamil friendship poem (2) tamil joke (7) tamil kathai (5) tamil story (6) tamil year (1) Welding Symbol (1) அபூர்வ தகவல் (1) ஆரோக்கியம் (16) ஆவணங்கள் (7) இயற்கை (4) எச்சரிக்கை (4) எடக்கு-மடக்கு (2) கணணி பராமரிப்பு (1) கதை (21) கம்ப்யூட்டர்வேலை (1) கலைஞர் (1) கவிதை (11) காமராஜர் (1) குண்டக்க-மண்டக்க (2) சாப்ட்வேர் மாப்பிள்ளை (1) சிந்தனை (4) செய்தி (13) தமிழர் பண்பாடு (6) தமிழ் (18) தமிழ் அளவை (2) தமிழ் அளவைகள் (1) தமிழ் ஆண்டுகள் (2) தமிழ் எண்கள் (1) தமிழ் எழுத்து (2) தமிழ் காலம் (2) தமிழ் பாட்டு (2) தமிழ் மருத்துவம் (6) தமிழ்நாடு அரசு பாடப் புத்தகங்கள் (1) தன்னம்பிக்கை (2) தீபம் (1) துணுக்கு (17) தெரிந்துகொள்வோம் (13) நகைச்சுவை (33) நகைச்ச்சுவை (5) நகைச்ச்சுவைகடிதம் (1) நட்பு (3) நட்பு கவிதை (2) படம் (1) படித்ததில் பிடித்தது (62) படித்தேன்-இரசித்தேன் (2) பணம் (1) பரோட்டா (1) பழமொழி (3) பழம்தமிழர் (1) பறவை (1) பாதுகாப்பு (2) பிரபலமானவர்களின் (4) பெண்பார்க்கும் படலம் (2) பெற்றோர் (2) பொங்கல் (1) பொழுதுபோக்கு (31) மகிழ்ச்சி (3) மாங்கல்யம் (1) மாய தோற்றம் (1) வரலாற்று நிகழ்வு (2) வலைப்பூ (1) வழி காட்டி (9) வழிகாட்டி (30) வாழ்கை (14) வாழ்க்கை (9) வாழ்த்துகள் (15) விவசாயம் (2) விவசாயி (1) வேலை (3)
 

©2009 அறிவு களஞ்சியம் | Template Blue by TNB